பூமணிக்கு சாகித்ய அகாடமி

நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல் அதன் மிதமான இயல்புச்சித்தரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டது. வெக்கை, நைவேத்யம் போன்றவை குறிப்பிடத்தக்க பிற ஆக்கங்கள்

கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை தேசியதிரைப்பட நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.. பூமணியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’என்ற நூல் வெளியிடப்பட்டது

பூமணிக்கு என் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்

பூமணி சொல்லின் தனிமை

விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி பேச்சு

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் கருத்தரங்கம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62