யானைடாக்டர்- கடிதம்

images (1)

மென்மையான செடியின் வேர்கள் கடினமான பாறைகளின் இடுக்குகளிலும், கடினமான நிலங்களிலும், ஒளி ஊடுருவமுடியாத இடங்களிலும், மலைகளின் அடிகளிலும் நுழைந்து செல்ல முடியும். யாராலும் தடுக்க முடியாது. அன்பும் செடியின் வேரைப்போல …

–தோரோ

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு யானை டாக்டர் வழியாகத்தான் நான் உங்களை வந்தடைந்தேன். அப்போது நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஏதோ தொடர்பில் குக்கூ இயக்கத்தை சார்ந்த முத்து எனும் நண்பர் மூலம் யானை டாக்டரை ஒரு இரவில் வாசிக்க நேர்ந்தது. நான் வைத்திருந்த எல்லாவித நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. என்னால் கட்டுப்படுத்த முடியாத அழுகை. வெறும் பொருள் சார்ந்த நம்பிக்கை தகர்ந்து அறம் சார்ந்த நல்லுணர்வை நான் அக்கணம் உணர்ந்தேன். உங்களை நன்றியோடு அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.

சிவகுருநாதன்,

சென்னை.

அறம் விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73
அடுத்த கட்டுரைமாதொரு பாகன் எதிர்ப்புகள்