ஞானக்கூத்தனின் வீட்டு புகைப்படத்தைப்பார்த்ததும் அவரின் இன்னொரு பகடியும் நினைவுக்கு வந்து சிரிப்பை அடக்க முடியவில்லை! காரணம் அவர் வீட்டு அலமாரியில் இன்றைக்கும் கூட பக்கத்திலிருக்கும் பாட்டில்களை தவறி இடறி விடாமல் இடைவிடாது ஆடிக்கொண்டிருக்கும் நடராஜர். ஏற்கனவே உங்களின் சிறந்த கவிதைகளின் பரிந்துரையில் உள்ளதுதான். ஒருவேளை நடராஜரே இதைபடித்துப்பார்த்தாலும் சிரித்துவிடுவார்:
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.
ஒரு வேளை நடராசர் கோபித்துக்கொள்வாரோ என்பதால் பெருமாளையும் அதே போல சமமாக பாவித்து பகடி செய்திருக்கிறார் போல :))
வாகனம் தூக்கிக் கொண்டு
தீவட்டி பிடித்துக்கொண்டு
வாத்தியம் இசைத்துக்கொண்டு
பலூன்கள் விற்றுக்கொண்டு
தெருக்காரர் ஊர்வலத்தில்
இருப்பதால் நஷ்டப்பட்டார்
எங்களூர் அரங்கநாதர்
நீளமான கட்டுரையை வெட்டி குறுக்கியதில் விடுபட்டு விட்டது.
-வேணு