எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம்

பார்ப்பனர் அல்லாதவர் என்கிற கூரையின் கீழ் வசதியாக அதுவரை ஒன்றுபட்டிருந்த எல்லோரும் மிக விரைவில், அவரவர் சாதியின் கீழ் பதுங்க இடம் தேடினார்கள். விவாதம் சண்டை ஆனது. சங்கடமான மனநிலையில் எல்லோரும் அங்கிருந்து விடுபட்டோம். அதன் பின், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு மனிதர்களிடமும் நான் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்: அவர்களைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு.

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா? சமஸ் எழுதிய முக்கியமான க்ட்டுரை

download

சமஸ் எழுதிய இக்கட்டுரையில் கிருஷ்ணம்மாளையும் ஜெகன்னாதனையும் நினைவுகூர்ந்திருக்கிறார். எண்பதுகளில் இருமுறை அவர்களைச் சந்தித்து எழுதியிருக்கிறேன். காந்தி வாழ்த்திய தம்பதியினர் அவர்கள் [தம்பதிகளில் ஒருவர் தலித் ஆக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை அவர் கடைசிக்காலத்தில் முன்வைத்திருந்தார்]

வாழ்நாள் முழுக்க அடித்தளமக்களுக்காக வாழ்ந்தவர் கிருஷ்ணம்மாள். அவர் இறால்பண்ணைகளுக்கு எதிராக அடித்தள மக்களை, தலித்துக்களை ஒருங்கிணைத்த அக்காலத்தில் அவருடனான உரையாடல் எனக்களித்த தெளிவுகள் பல. முக்கியமாக சாதியை எவர் நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என்பது.

அன்று தலித் மக்களின் எளிய எழுச்சியை துரத்தித் துரத்தி அடித்தனர் நில உடைமையாளர்கள். காவல்துறைச் சிக்கல்கள். குண்டர்தாக்குதல்கள். சாதிய இழிவுபடுத்தல்கள். “அந்த நாயிங்கள்லாம் சட்டம் பேசினா நாங்க எப்டி வெள்ளாம செய்றது?’ என்று மேடையில் பேசினர். ஆனால் அவர்களே மேடைமேடையாக ‘சாதியை ஒழித்த பெரியார்’ என்று தொண்டை கமற கூச்சலிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

பார்ப்பன எதிர்ப்பு, பெரியாரியம் என்னும் பெயரில் இன்று செய்யப்படும் இடைநிலைச் சாதியினரின் சாதிப்பாதுகாப்பு இயக்கம் உண்மையில் என்ன என்று உணர்ந்த கணம் அது. சமஸ் அதை மீண்டும் கண்டிருக்கிறார்

ஜெ

முந்தைய கட்டுரை‘கருமம்!’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60