அங்காடித்தெரு வருகிறது

 மார்ச் 26 வெள்ளிக்கிழமை அங்காடித்தெரு வெளியாகிறது. படம் முழுமையாக தயாராகி ஒன்பது மாதம் தாண்டிவிட்டிருக்கிறது. சில வினோகச்சிக்கல்களுக்குப் பின்னர் இப்போது வெளியாகிறது. மார்ச் மாதம் பொதுவாக படங்கள் வெளியாகச் சிறந்த மாதம் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்தமாதிரியான கணக்குகளுக்கும் நல்ல படங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் சொல்வார்கள். பெரும் வெற்றி பெற்ற பல சிறு படங்கள் ‘தப்பான’ நேரத்தில் வெளிவந்தவை.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், தேர்வுகள் முடியாமை ஆகியவற்றைச் சிலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தமிழ் சினிமாவை பாதிக்கவேயில்லை என்றுதான் கேள்வி. சென்னையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நிறைந்த அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்கள். கட்டகடைசியில் படம் சுவாரசியமாக இருக்கிறதா என்பதே கேள்வி.

அங்காடித்தெரு எப்படி என்பதை இனிமேல் ரசிகர்கள்தான் சொல்லவேண்டும். உண்மையான வாழ்க்கையின் தீவிரமான பின்புலத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகரமான காதல்கதை. வசந்தபாலன் வெயில் படத்தின் வெற்றிக்கும் சரவதேச கவனத்திற்கும் பின்பு இப்போதுதான் மீண்டும் அரங்குக்கு வருகிறார். வெயில் சற்றே பரந்த கதைக்களம் கொண்டது. அங்காடித்தெரு கூரிய திரைக்கதையுடன் நேராகச்செல்லும் படம்.

எதிர்பார்ப்புகளுடன் இன்னமும் ஆறுநாட்கள் காத்திருக்க வேண்டியதுதான்

டிரெயிலர்

http://www.youtube.com/watch?v=UdlTz_C2CxY 

http://www.youtube.com/watch?v=snZjsVaif0k 

தொடர்புள்ள பழைய கட்டுரைகள்

http://www.jeyamohan.in/?p=631

http://www.jeyamohan.in/?p=625

http://www.jeyamohan.in/?p=624

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 5
அடுத்த கட்டுரைநாக்கு [சிறுகதை]