கிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்

வில்லியம் மில்லர் விக்கி 

அன்பு ஜெயமோகன் சார். தொடக்கூடாத விஷயத்தைத் தொட்டு விட்டீர்கள். விஷயமும் விவாதமும் சரியே. ஆனால் இனி சங்கிலித்தொடர் போல் எதிர்வினைகள் வரும். கண்டனக்கணைகளை அள்ளி வீசும். மிகப் பிரமாண்டமான மிகத் தொன்மையான சரித்திர சான்றுகளை, சாத்திர ஆதாரங்களை முகத்தில் விசிறி அடிக்கும். இனத்துரோகி என்று ஏசும். சிறில் அலெக்சின் ப்லாக்கில் சில விவாதங்களைப் படித்த ஆயாசத்தில் சொல்கிறேன். இன்று அரசியலும் மதமும் முதலில்லாத வியாபாரம். லாபக்கணக்கோ அம்பானிகளும் ஏங்கும் விகிதம்.  என்று எம் மக்கள் இந்த வியாபாரிகளின் பிடியிலிருந்து மீள்வர்? வசுதைவ குடும்பகம் என்று படிப்பேன் ஆனால் அடுத்த நம்பிக்கையாளனை வதைக்கத் தயங்க மாட்டேன் என்பது படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் தானே. வஞ்சமும், வன்மமும், வன்முறையும் தொலைந்து போய் அன்பு பரவி, சாந்தியும் சமாதானமும் நிலை பெற இன்னும் எத்தனை சிலுவைகள், துப்பாக்கி குண்டுகள், விஷக்கோப்பைகளைத் தாண்ட வேண்டும்? எல்லா மதங்களுக்குள்ளும், சிறுமதியாளர்களை வெளி நிறுத்தி, அன்புசால், அறிவுசால், அறம்சால் பெரியோர்களை முன்னிறுத்த என்ன வழி? இதற்கு ஒரு மேடை அமையுமா?    அன்புடன் ரகு

*****

அன்புள்ள ஜெயமோகன்;
நீங்கள் ஒரிசா கர்நாடக கலவரங்கள் குறித்தும் சுவாமி லக்ஷ்மனானந்தா படுகொலை குறித்தும் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தீர்கள். அருமை. பஜ்ரங் தள்; வீ ஹெச் பீ;பற்றிய உங்களின் கருத்துகள் மிகவும் சரி.இந்த இயக்கங்களுடனான என்னுடைய அனுபவத்தை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஆம் ஆண்டு திருச்சியில் வீ ஹெச் பீ இந்து இளைஞர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.அதில் நானும் கலந்து கொண்டேன் அப்போது என்னுடைய வயது பதினேழு. என் வயதை நான் குறிப்பிடுவதற்கான காரணம் அப்போது பாகவதம்;பாரதம் இதையெல்லாம் படித்து ஹிந்து தர்மத்தை ரொம்பவே தெரிந்து கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த காலம்.அந்த விளம்பரங்களில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும் எனவே அந்த எண்ணை தொடர்பு கொண்டு திருச்சியில் அந்த குறிப்பிட்ட விலாசத்துக்கு வருவது எப்படி என்று விசாரித்தேன். அவர்கள் என்னுடைய முகவரியைக்கேட்க நானும் கொடுத்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் அடுத்த ஒரு வாரத்துக்குள் நான் வீ ஹெச் பீயின் வட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதாக எனக்கு ஒரு கடிதம். நானும் ரொம்பவே மகிழ்ந்து போனேன். அதற்க்கு பிறகு (நானும் என்னோடு இன்னொரு நண்பனும் திருச்சி சென்றோம். அந்த மாநாட்டு பந்தலுக்குள் அவன் சென்று விட்டான் அது தெரியாத காரணத்தால் அவனை தேடி திருச்சி ரயில் நிலையம் முழுக்க நான் அலைந்தது தனிக்கதை) ரயில் நிலையத்தில் அன்றைய இரவு போலீசை நினைத்து பயந்தபடியே அமர்ந்திருந்த பொது ஒரு ஆட்டோகாரர் என்னோடு சகஜமாக பேச என் பயம் கணிசமாக குறைய துவங்கியது. அவரிடம் மாநாட்டுக்கு வந்திருப்பது பற்றியும் என் நண்பனை தொலைத்த கதை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் எழுப்பிய முக்கியமான கேள்வி?நாங்க ஆட்டோகாரங்க எங்குள்ள முஸ்லீம்ஸ் கூட உண்டு நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வச்சுக்குங்க என் குழந்தைக்கு ஒடம்பு முடியல ஆட்டோ வாடகை கட்ட முடியல ஏன் பல நேரத்துல சவாரிய கூட ஷேர் பண்ணிகறோம்.இப்ப இவங்கள எங்கள்ளுக்கு எதிரியா மாத்த வேண்டிய அவசியம் என்ன? அப்போது நான் அவருக்கு சொன்ன பதில் இது இந்து இளைஞர் மாநாடு தானே தவிர இது ஹிந்து தீவிரவாதிகள் மாநாடல்ல என்று.அவர் சொன்னார் நீங்க அப்படி நினைக்கறீங்க அவ்வளவு தான் என்று?அது எவ்வளவு உண்மை என்பதை அந்த மாநாட்டின் இறுதியில் தான் நான் புரிந்து கொண்டேன். காரணம் இலக்கிய சொற்பொழிவுகள் கேட்பதில் ஒரு ஆர்வம் அதுவும்
சுதா சேஷய்யன் தான் முதலில் பேச்சை துவக்கினார் அதன் நீட்சியாகத்தான் மாநாடு அமையும் என்று எதிர்பார்த்தேன்.அவர் ஒரு பத்து நிமிடங்கள் பேசினார் அதற்க்கு பிறகு பிரவீன் தொகடியா;அசோக்சிங்கல் மொழிபெயர்ப்புக்கு ஆர்.பீ.வீ.எஸ்.மணியன். தான் ஒரு பொது மேடையில் பேசுகிறோம் என்கிற அறிவு அவருக்கு கொஞ்சம் கூட இல்லை.ஒரு நோட்டிசில் அவருடைய கல்வித்தகுதியும் அசோக்சிங்கல்லின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு அவர்கள் இதுகாறும் ஹிந்டுமதத்துக்கு ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்பும் அதில் இருந்தது.இந்த பணியை செய்ததை விட தன்னுடைய மருத்துவ தொழிலை அவர் தொடர்ந்திருந்தால் அவர் மூலம் எங்கேனும் யாரேனும் பயன் அடைந்திருப்பார்கள்.அப்படி ஒரு நாராசமான பேச்சு.வெற்றிகொண்டான்;எஸ்.எஸ்.சந்திரன் வகையறா பேச்சு.நான் துணிந்து சொல்வேன்.இந்த இருவரும் ஹிந்துமத அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள்.இவர்கள் பகவத்கீதை பாக்கெட் சைஸ் நூல் கொடுத்தால் அதை கூட படித்து புரிந்து கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள். நவீன படிப்பின் மீது என்னுடைய பார்வை மனிதர்களின் அந்தஸ்து  சார்ந்து அவர்களின் அறிவை நிர்ணயம் செய்வது எவ்வளவு ஆபத்தும் அறியாமையுமாகும் என்பதை நான் அறிந்து கொண்ட தினம் அது. ஒரு எளிய மனிதரின் புரிதல் அகில இந்திய தலைவர்களுக்கு இல்லை என்றால் அதன் தொண்டர்களை பற்றி என்ன சொல்வது. குறிப்பாக இந்த ஆர்.பீ வீ எஸ்.மணியன் போன்ற தமிழகத்தலைவர்கள் ராமகோபாலன் இவர்கள் பேசும் போது இவர்களுடைய பேச்சில் உள்ள அபத்தத்தை இவர்களேபுரிந்து கொள்வது இல்லை. முழுமையான த்வேஷம் த்வேஷம் மட்டுமே.விண் தொல்லைக்காட்சியில் ஒரு பெண் பத்திரிகையாளரை ஆர்.பீ.வீ.எஸ் மணியன் விமர்சித்தது அநாகரீகத்தின் உச்சம்.  கேள்விகளை அனுமதித்தும் எதிர்கொண்டும் அதற்க்கு நேர்மையான பதில்களை மட்டுமே கண்டுகொண்ட ஒரு தர்மத்தை இந்த அரைவேக்காடுகள் கையில் எடுத்துக் காப்பற்றுவதாக பிதற்றுவது கொடுமை.(ராமகோபாலன் கட்டாயமதமாற்றச்சட்டம் கைவிடப்பட்டபோது பாவாடை கட்டிக்கொண்டு மயிலாப்பூர் கோவிலை வலம் வந்தது நான் ரசித்த நகைச்சுவை).சுவாமி லக்ஷ்மனானந்தா பற்றி திரு.குருமூர்த்தி அவர்கள் எக்ஸ்பிரஸ்,துக்ளக் மூலம் சில தகவல்களை கூறியுள்ளார்.அவர் ஒரு துறவி. கந்தமால் பகுதியில் அவருடைய பணிகள் நினைவு கூற தக்கவை என்று.உண்மையே ஆனால் கந்தமால் பகுதியில் மதமாற்றம் நிகழும் வரை அந்த துறவி கூட தன் அரும்பெரும் பணியை துவக்கவில்லை.எப்போதும் போல் கிறிஸ்தவர்களின் சேவை நீங்கள் அந்த மக்களை கண்டுகொள்ளவில்லை கண்டுகொண்டோம் இனி அவர்கள் எங்கள் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் அவ்வளவே.இந்த மதமாற்றத்தை பற்றி நாம் பேசும் திறனை இழந்ததற்கான காரணம் இங்கே நிலவும் சாதிக்கொடுமை.இவர்கள் இருவருமே பாராட்டுக்குரியவர்கள் அல்ல.ஆனால் ஒரு உண்மை நீங்கள் மறந்து விடக்கூடாது. எந்த நாட்டையும் விட இந்த நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவே வாழ்கிறார்கள்.நம்முடைய அந்த பரந்த மனப்பான்மை இன்னமும் விரிவுபட வேண்டும் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய சில கேள்விகளுக்கு  உங்களுடைய கவனத்தை கோருகிறேன்.இப்போது ஒரிசா,கர்நாடக தாக்குதல்கள் பற்றி நீங்கள் கண்டிக்கீறீர்கள் சரியே.ஆனால் அமர்நாத் நில விவகாரம் பற்றி உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எழுதியதென்ன? ஒரிசாவில் சுவாமி கொல்லப்பட்டார் அவருடைய ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண் சாமியார் கொல்லப்பட்டு அவருடைய உடல் இழிவுபடுத்தப்பட்டது.அப்பொழுது அங்கே இருக்கும் ஒரு சாதரண ஹிந்துவின் மனநிலை எப்படி இருக்கும்?சுவாமி கொலைக்கு பிறகு நடந்த பல கலவரங்கள் குறித்து தொலைகாட்சிகள் போட்டி போட்டுக் கொண< /td>
முந்தைய கட்டுரைகீதை தத்துவநூலா?:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்