கும்பமேளா பயணம்

நான் கடவுள் படப்பிடிப்புக்காக காசியில் நான் இருந்தபோது  அலகாபாதில் அர்த்த கும்பமேளாவுக்கான அறிவிப்பு வந்தது. செல்லலாம் என்று எண்ணினேன். நான் கடவுள் படத்தின் இறுதிப்பகுதி கும்பமேளாவில் எடுக்கலாமென்று சொன்னேன்.

பாலாவும் குழுவும் அலகாபாதுக்குச் சென்றபோது என்னால் செல்ல முடியவில்லை. இங்கே சிலவேலைகளில் மாட்டிக்கொன்டேன். அப்போதே அடுத்த கும்பமேளா பார்க்கவேண்டுமென எண்ணினேன். நான் பலமுறை காசிக்கும் அலகாபாதுக்கும் சென்றிருந்தாலும் கும்பமேளா பார்த்ததில்லை.

                                                                                                                     

இந்தமுறை அரித்துவார் கும்பமேளாவுக்கு போகலாமென சட்டென்று ஓர் எண்ணம் வந்தது. அத்தனைபெரிய கூட்டம் என்றால் அந்த பயணம் ஓர் சகச யாத்திரையேதான். வசந்தகுமாரிடம் முதலில் பேசினேன். பின்பு ஈரோடு கிருஷ்ணன். முடிவெடுத்துவிட்டோம்

வரும் ஏப்ரல் 10 அன்று விமானத்தில் டெல்லி செல்கிறோம். அங்கிருந்து டெகராடூன் வழியாக அரித்வார்.  பதினொன்றுமுதல் நன்கு நாள் அங்கிருக்க உத்தேசம். மேலும் சில இடங்கள் சுற்றிவிட்டு பதினேழம் தேதி திரும்ப விமானம். எட்டு நண்பர்கள் உடன் வருகிறார்கள். யுவன் சந்திரசேகரும் உண்டு. அரங்கசாமி, அருண், கெ.பி.வினோத் வருகிறார்கள்.

நான் சடங்குகளையும் வழிபாடுகளையும் செய்பவனல்ல. கூட வரும் நண்பர்களில் பெரும்பாலும் அனைவரும் அப்படித்தான். என்னைப்பொறுத்தவரை அந்நிகழ்வின் தொன்மை, அதன் இன்றைய உணர்வு நீட்சி, அனைத்தையும் விட அங்கே கூடும் பல லட்சம் மக்கள் தான் மிகப்பெரிய கவற்சி. எனக்கு என்றுமே கூட்டங்கள் பிடிக்கும்

இந்தப்பயணம் அதன் அனைத்து கஷ்டங்கள்டன் உத்வேகமூட்டுவதாக இருக்கும் என நினைக்கிறென்

முந்தைய கட்டுரையோகம்,ஞானம்
அடுத்த கட்டுரைஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை