«

»


Print this Post

பின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன்;
தங்களின் பின்தொடரும்நிழலின்குரல் நாவலை கடந்த வாரம் தான் முழுமையாக படித்து முடித்தேன்.பல இடங்களை படிக்க நான் விரும்பவில்லை.
 துயரத்தை குறைந்தபட்சம் படிக்கக்கூட பிடிக்காத என்னுடைய சராசரி மனோபவத்தை நானே நொந்து கொண்டு படித்தது முடித்தேன்.
இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்கு முன் எனக்குள் பல யோசனைகள். காரணம் இந்த புத்தகத்தை கண்டுகொள்வதற்கு எனக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பிடித்திருக்கிறது. அதுவும் நன்மைக்கே காரணம் என்னால் காரணத்தோடு உங்களை ஏற்கவும் மறுக்கவும் முடிகிறது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த புத்தகத்தை பற்றி ஒரு இடதுசாரி நண்பர் என்னிடம் சொல்லித்தான் இதை பற்றி அறிந்துகொண்டேன் அவர் இந்த புத்தகத்தை பற்றியும் உங்களை பற்றியும் வசை மாறி பொழிந்தது தான் இந்த புத்தகத்தை நான் படிப்பதற்கான தூண்டுதல்.  மனித மனம் எதை முற்றாக தீர்வு என்று நம்ப தலைப்பட்டதோ அறிவின் உச்சம் என்றும் மனதின் உச்சம் என்றும் எது திரும்ப திரும்ப நம்ப வைக்கப்பட்டதோ அது தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்கும்போது ஏற்படும் துயரத்தை மிக துல்லியமாக சொல்லிஇருக்கீறீர்கள்.அரசியல் சார்ந்து எதை நான் படித்தாலும் திராவிட அரசியல் சார்ந்தே என்னால் அதை புரிந்து கொள்ள முடியும்.உலகில் அரசியல் சார்ந்து என்ன அக்கிரமம் நடந்திருந்தாலும் கண்டிப்பாக அதன் ஒரு கூறை இங்கு நாம் பார்க்க முடியும் என்ன ஒரு பெருமை?பல நேரங்களில் நான் யோசித்துப் பார்பேன் தோழர் நல்லகண்ணு போன்றவர்கள் பொது வாழ்க்கையில் கட்சி கொடுத்த கோடி ரூபாயை கட்சிக்கே திரும்ப கொடுத்த மகத்தான மனிதர்கள் கூட மனச்சான்றை கழட்டி வைத்து விட்டு நடந்து கொண்டது ஏன் என்று யோசித்திருக்கிறேன்(இங்கே நான் ஸ்டாலின், புகாரின்  அந்த விவாதத்துக்கே வரவில்லை.)என்னுடைய சராசரி அரசியல் பார்வையின் அடிப்படையில் தான் சொல்கிறேன். இன்றைய இடதுசாரி அமைப்புகள் திராவிட இயக்கங்களின் அரசியலை கடன் வாங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.கடன் வாங்கியது மட்டுமன்றி அவர்கள் நிழலில் தான் இவர்கள் செயல் பட வேண்டிய முடியும். கொஞ்ச காலம் முன்பு ஜோதிபாசுவும் புத்ததேவ்பட்டச்சர்யாவும் அறிவித்தார்கள் சோசியலிசத்தை இந்தியாவில் அமல்படுத்த முடியாது என்று இவர்களின் கண்டுபிடிப்பை விட இவர்கள் கண்டுபிடிப்புக்கான காரணம் தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு இவர்கள் கொடுக்கிற செய்தி அது.தயவு செய்து எங்கேயும் போய் விடாதீர்கள் என்று.இந்தியாவின் பிற மாநிலங்களில் இவர்கள் செய்கிற சித்திரவதையை மம்தா இன்று இவர்களுக்கு செய்யும் போது வலிக்கிறது. என் சிறு வயதில் மஹாநதி படம் பார்த்த போது எல்லோருக்கும் தெரிந்த காட்சி இன்றைக்கும் நான் மனம் பதைக்கிற காட்சி கமல் தன் மகளை விபச்சார விடுதியிலிருந்து   மீட்க கொல்கத்தாவுக்கு அவர் வரும் காட்சி.இந்தியாவில் எங்குமே விபச்சாரம் இல்லை என்று நான் வாதம் செய்யவில்லை.விபச்சாரத்துக்கேன்றே ஒரு பெருநகரம் புகழ் பெறுவது எவ்வளவு பெரிய கேவலம். ஒரு முறை பத்திரிக்கையாளர் சோ சமதர்மம் பேசுகீறீர்களே மேற்குவங்கத்தில் என் இன்னமும் கைரிக்க்ஷாவை ஒழிக்க முடியவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினார் அவரை மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.ஆனால் எனக்கு கைரிக்க்ஷவ்வை ஒழிக்கப்பட்டதா என்று தெரியாது ஆனால் விபச்சாரத்தில் கொல்கத்தா உலகப்ரபலம் அடையாமல் கம்யுனிச ஆட்சியாளர்கள் விட மாட்டர்கள் என்றே நினைக்கிறேன்.  ஏன் இப்படி இவர்களை பற்றி சாடிக்கொண்டே ஒரு கடிதம் முழுக்க இருக்க வேண்டுமா?என்றால் இன்றைக்கு மதத்தின் மீது விமர்சனம் எழுப்ப முடிகிறது. சாதியை விமர்சிக்க முடிகறது.ஆனால் கருத்துசுதந்திரம் பேசுகிற இவர்கள் குறைந்த பட்சம் விமர்சனங்களை.கேட்கக்கூட தயாராக இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு வயதுக் குழந்தை கூட நுகரக்கிடைக்கும் என்றால் அப்புறம் என்ன கொள்கை? யாருக்காக கொள்கை?மனிதகுலத்தின் அழிவு சொவிஎத்ருஷ்யாவில் மட்டும்தானா கொல்கத்தாவில் இல்லையா?கோத்ரா பற்றி  வாய் கிழிய பத்திரிக்கையாளர்களும் கம்யுனிச நண்பர்களும் பேசுவார்கள் கொல்கத்தா பற்றி ஒருவரும் வாய் திறப்பதில்லை.அதற்காக கோத்ராவை நான் ஆதரிக்கவில்லை.கொள்கை தெளிவு ,சித்தாந்த பலம்,இந்தியாவில் எந்த கட்சி< /td>

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/676