காமன் வுமன்

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பி வைத்திருந்தார். எளிமையான நகைச்சுவை. நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையைப்பற்றிய முதல்தள மனப்பதிவில் இருந்து உருவாகும் இத்தகைய சித்திரங்களுக்கு எப்போதும் ஒரு சுவாரசியம் உண்டு. இரண்டு காரணங்கள். ஒன்று நாம் நம் அன்றாடவாழ்க்கையைஈவற்றில் காண முடிகிறது. இரண்டு இன்னொரு வாழ்க்கைச்சித்திரம் மெல்லிய கோட்டோவியமாக நமக்குக் கிடைக்கிறது. [http://kirukkugiren.blogspot.com/2010/03/blog-post.html ]

இதேபோல கணவர்களைப்பற்றி மாமியார்களைப்பற்றி பிள்ளைகளைப் பற்றி எத்தனையோ சொல்லலாம். உலகமே ஒரு விளையாட்டு என்று இருபத்துநான்குமணிநேரமும் தெனாவெட்டாக அலையும் என் பையனின் நெற்றியில் நேற்று பட்டை விபூதியை பார்த்து பீதியடைந்தேன். பிறகுதான் தெளிந்தது, பிளஸ் டூ தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. இருக்காதா பின்னே?

முந்தைய கட்டுரைஆசிரியர்கள்
அடுத்த கட்டுரைவிமரிசகனின் தடுமாற்றங்கள்