«

»


Print this Post

இந்தியா குறித்த ஏளனம்…


10-new-delhi

 

அன்புள்ள ஜெமோ,

இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான்.  இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை.  பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.  நான் அமெரிக்க’வில் ஒரு காட்டில் படித்தவன், அங்கு இந்தியர்கள் அதிகம் இல்லாத்தினால், இவர்களுடன் பழகும் பழக்கம் பட்டவன்.

இது உண்மை தானா இல்லை ஏன் இப்படி என்று எங்களுக்கு சொல்ல முடியுமா ?

1) இந்தியா ஏழை நாடு.

2) இந்தியா சுகாதாரம் அற்ற நாடு. இந்தியர்கள் சுத்தமற்றவர்கள்.

3) இந்தியர்கள் நாற்றம் பிடித்தவர்கள், குளிப்பதில்லை. இதை அவர்கள் ஒரு வெறுப்பாக சொல்ல வில்லை. உண்மையிலேயே சொல்கிறார்கள்.  எனக்கு சீன ( நான் சைவம் ) உணவகத்துக்கு போனால் என் முகம் எப்படி மாறுமோ அப்படி இவர்கள் இந்தியர்களின் உணவு ( முக்கியமாக மசாலா ) வாசத்தை கண்டு முகம் சுழிகின்றனர். இந்தியா உணவை உண்டாலும், இவர்கள் அலுவலகத்தில்  body spray அடித்து, mint எடுத்து கொள்கிறார்கள். சில இந்தியர்கள் பக்கத்தில் வந்து பேசும் பொழுது Mint தருவார்கள்.  நீ நாற்றம் அடிக்கிறாய் என்பதை மறைமுகமாக சொல்லும் உத்தி அது ( என் கற்பனை அல்ல இந்த உத்தியை பற்றி ஒருவரின் மூலமாக கேட்டது ) . நம் இந்திய மக்களும் வெள்ளந்தியாக சிரித்து கொண்டு வாங்கி கொள்வார்கள்.

சீன , ஜப்பானிய மக்களுடன் எளிமையாக பழகுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியா விட்டாலும்.  இந்தியர்கள் என்றால் ஏளனம் தான். இந்தியர்கள் நிறைய மெனக்கிட வேண்டி உள்ளது. ஒரு Dance floor சென்றால் அங்கு பல இந்தியர்கள் வெட்டியாக யாரும் இல்லாமல் ஒரு கண்காட்சி பொருளாகவே உள்ளனர். என்னை சொல்ல வில்லை, நான் என்னை மாற்றி கொண்டேன். எனக்கு இந்த பிரச்சனை இல்லாவிடிலும், சக இந்தியர்களை ஏளனமாக பார்க்கும் போது கோவம் வருகிறது. இந்தியாவை பற்றி இப்படி சொல்லும் பொழுது , என்ன சொல்வது என்று தெரிவதில்லை.  உங்கள் பார்வை தளம் அதிகம் என்பதினால், உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா ?

நன்றி,

பிரகாஷ்

அன்புள்ள பிரகாஷ்,

நான் ஓரளவே வெளிநாட்டுப் பயணங்களைச் செய்திருக்கிறேன். ஓரளவே வெளிநாட்டினருடன் பழகியிருக்கிறேன். இந்த எல்லைக்குள் நின்று என் கவனிப்புகளைச் சொல்ல முயல்கிறேன்.

பொதுவாக இன்னொரு நாட்டைப்பற்றி எந்த நாட்டிலும் இருக்கும் பாதிப்பங்கு மனப்பதிவு தவறானதாகவே இருக்கும். நமகு அமெரிக்கா பற்றி என்ன மனப்பதிவு இருக்கிறது? செல்வந்த நாடு. கருத்துச் சுதந்திரம் கொண்ட நாடு. கட்டற்ற பாலியல் வழக்கங்களின் நாடு. ஆனால் அமெரிக்காவை நாம் அறியும்போது இந்த நம்பிக்கைகள் பொய்யானவை என்று அறிகிறோம்.

அமெரிக்காவில் மதிய உணவுக்கு மட்டுமே பள்ளிக்கு வரும் பல லட்சம் பேர் உள்ளனர். அன்னதான சத்திரங்கள் உள்ளன. அவற்றை நானே சென்று பார்த்திருக்கிறேன் அங்கே கருத்துச் சுதந்திரம் மிக மிக வரையறுக்கப்பட்டது. அதை நான் அறிந்திருக்கிறேன்.அத்தேசத்தில் பாதிப்பேர் கட்டுப்பெட்டிகள்…

நமக்கு சீனர்களைப் பற்றி, பாகிஸ்தான் பற்றி என்ன மனப்பிம்பம் இருக்கிறதென்று பார்த்தாலும் இம்மாதிரியான தவறான சித்திரமே கிடைக்கும். அதேபோலத்தான் அவர்களும் நம்மைப்பற்றி நினைப்பார்கள் இல்லையா?  இது மிக இயல்பான ஒன்று.

இந்த மனப்பிம்பங்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்தால் வரலாற்றுப்பின்னணி ஒன்றை கண்டுகொள்ள முடியும். நான் ஆய்வுமுடிவாகச் சொல்லவில்லை, இலக்கியப்படைப்புகள் அளித்த செய்திதான். நமக்கு நம்மை அடக்கி ஆண்டவர்கள் என்பதனால் பிரிட்டிஷார்மீது ஒரு மயக்கம் உண்டு. அவர்களின் கறாரானதன்மை, மிகையின்மை, மரபார்ந்த தன்மை, கட்டுப்பெட்டித்தனம் போன்ற பல விக்டோரிய யுகத்துப் பண்புகளை இன்றும் அவர்கள் மீது ஏற்றிவைத்து பார்க்கிறோம்.

அமெரிக்கா நமக்கு பிரிட்டிஷாருக்கு நேர் எதிரான ஒன்றாகக் காட்டப்பட்டுவிட்டது. ஆகவே இன்றைய மனப்பிம்பம் உருவாகியிருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட காலம் முதலே நாம் அமெரிக்காவை பிரிட்டனுக்கு நேர் எதிரான நாடு என எண்ண ஆரம்பித்துவிட்டோம்.

மேலும் இன்று நமக்கு ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் இருக்கும் மனப்பிம்பம் என்பது இரண்டாம் உலகப்போரால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போதுதான் இந்தியாவின் நடுத்தர வற்கம் உலகநாடுகளைப் பற்றிக் கேள்விப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் செய்திகளால் நெருக்கமாக பின் தொடரப்பட்ட போர்.

அதனூடாக உருவான மனச்சித்திரம் பல்வேறு வகையில் ஊடகங்கள் மூலம், உரையாடல்கள் மூலம் இளமையிலேயே நமக்கு அளிக்கப்படுகிறது. ஜெர்மனி என்றால் கட்டுப்பாடான உறுதியான ராணுவத்தன்மை கொண்ட நாடு. பிரான்ஸ் ஷோக்கான நாடு. இத்தாலி கட்டுப்பாடற்ற நாடு…இப்படியெல்லாம். பிறகு வரும் சமகாலச் செய்திகள் மூலம் அது சற்றே திருத்தப்படுகிறது. சீனா, ஜப்பான், ருஷ்யா போன்ற நாடுகளைப்பற்றிய சித்திரம் நமக்கு கொஞ்சம் மாறியது அவ்வாறே.

இந்தப்பிம்பங்கள் பெரும்பாலும் மேலோட்டமானவை. பலசமயம் பொய்யானவை. அரசியல் நோக்குடன் உருவாக்கப்பட்டவையும் உண்டு தற்செயலாக உருவானவையும் உண்டு. நீங்கள் ஏதாவது ஓர் ஆப்ரிக்க நாட்டுக்கு வேலைக்குச் செல்கிறீர்கள் என்று சொல்லிப்பாருங்கள். ”அய்யய்யோ” என்று பதறுவார்கள் சக இந்தியர்கள். எப்படி அந்த எதிர்மறைச் சித்திரம் உருவாகியது?

‘பிறன்’ என்று நாம் உருவகிக்கும் எவரையும் பற்றி எதிர்மறையாக எண்ணுவது பழங்குடிச் சமூக வாழ்க்கையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள ஒரு மனக்கூறு. பிறர் அனைவருமே நம்மை விட தாழ்ந்தவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள் என்னும் எண்ணம். ஒரு சமூகம் எந்த அளவுக்கு பழங்குடித்தன்மையுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த மனநிலையும் காணப்படுகிறது.

ஏன் நாடுகளைப் பார்க்கவேண்டும். மலையாளிகள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? குளிக்காத, சுத்தமற்ற மக்கள். பண்பாடற்று கூச்சலிடுபவர்கள். மொட்டையாக சாரமற்று அரட்டையடித்துக் கொண்டே இருப்பவர்கள்.. தமிழர்கள் மலையாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? சதிகார மனமுடைய தந்திரமான மக்கள். இங்கிதமில்லாதவர்கள், ஆணவம் மிக்கவர்கள், தனிநபர் ஒழுக்கம் இல்லாதவர்கள்.மலையாளப்பெண்கள் எல்லாம் ஜில்பான்ஸிகள்.

சரி , நம்முடைய சமூகத்திற்குள்ளேயே என்னென்ன மனப்பிம்பங்கள் உள்ளன? நம் அருகே வாழும் ஒரு பிற சாதியை நாம் எப்படி மதிப்பிட்டிருக்கிறோம்? சுத்தமற்றவர்கள், மோட்டாவானவர்கள், தந்திரமானவர்கள், பொறுப்பில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் இப்படி ஏதேனும் ஒரு எதிர்மறைச் சித்திரமே நம்மிடம் இருக்கும் இல்லையா?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நம் ஊரிலேயே உள்ள இன்னொரு சாதியினருடைய அன்றாட வாழ்க்கை, அவர்களின் சடங்குகள் ஆசாரங்கள் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. சந்தேகமிருந்தால் நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள இன்னொரு சாதியைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று பாருங்கள்.

மேலைநாடுகள்  இந்தியா மற்றும் ஆப்ரிக்காவைப்பற்றி  கொண்டிருக்கும் மனச்சித்திரம் எப்படி உருவானது? அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. இந்நாடுகளை காலனியாக்கி ஆண்டவர்கள் அவர்கள். இந்நாடுகளை நிரந்தரமாக தங்கள் பிடியிலேயே வைத்திருக்க கிறித்தவ மதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள்.

ஆகவே, இந்நாடுகளின்பண்பாடுகளை கீழானது என்றும் அவர்களை சீர்திருத்தி முன்னேற்றும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்றும் அந்த நல்லெண்ணத்துடன் தான் இவர்களை காலனிகளாக்கி வைத்திருக்கிறோம் என்றும் இவர்கள் வரலாறுகளை உருவாக்கினார்கள். இது ‘வெள்ளையனின் பொறுப்பு’ என்று சொல்லப்பட்டது [ White man’s burden ]

ஆரம்பகால மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் இந்தியாவைப்பற்றி இப்படிப்பட்ட மட்டப்படுத்தும் சித்திரத்தையே உருவாக்கினார்கள். எழுத்தாளர்கள்கூட இத்தகைய நம்பிக்கைகளை எழுதினார்கள். வெள்ளையனின் பொறுப்பு என்ற சொல்லாட்சியே மாபெரும் எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் உருவாக்கியது.

அதேபோல கிறித்தவ மதப்பரப்புநர்கள் தொடர்ச்சியாக இந்தியாவின் மரபு, மதம், பண்பாடு குறித்து மிக எதிர்மறையான சித்திரத்தையே அங்கே அளித்தார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான அஞ்ஞானிகளுக்கு கிறித்தவ ஒளியை அளிக்கவேண்டியதன் தேவையைப்பற்றி பேசினார்கள். இந்தியாவிலும் இவர்கள் மதம் மாற்றிய சாதிகள் அனைத்துக்கும் இறந்தகாலமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

‘கிறிஸ்துவின் சீடர்களான இவர்களுக்கு இந்துக்கள் அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறித்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் பிசாசுக்கள் என்று நம்ப கற்றுக்கொடுக்கிறார்களே’ என்று மனம் வெதும்பினார் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்று.

‘பாரதேசம் முழுக்க எழுந்து நின்று இந்துமகாசமுத்திரத்திற்கு அடியில் உள்ள சேற்றை முழுக்க அள்ளியெடுத்து மேலைநாடுகள் மீது வீசினாலும்கூட நீங்கள் இன்று எங்கள்மேல் வீசும் சேற்றுக்கு பதில் செய்வதாக ஆகாது’ என்று விவேகானந்தர் சொல்கிறார்

இன்றும் அது தொடர்கிறது. ஒரு சராசரி வெள்ளையக் குழந்தை இந்தியாவைப்பற்றி இத்தகைய சித்திரத்தை பெற்றுக்கொண்டு தான் வளார்ந்து வருகிறது. அதில் இருந்து அது வெளிவருவது கடினம்.

நானே சிக்காகோவில் ஒரு தேவாலயத்தில் இந்தியா பற்றி வைக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து சிறில் அலெக்ஸுக்குக் காட்டினேன். இந்தியாவில் குழந்தைகளை ஆலயங்களில் பலிகொடுக்கிறார்கள்,. முதியவர்களை ஆற்றங்கரைகளில் கைவிடுகிறார்கள் என்றெல்லாம் அது சொன்னது. அவர்களை ஒளிக்குக் கொண்டுவர நிதி கோரியது

நான் பார்த்தவரையுல் மேலைநாடுகளில் யார் மதத்தில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே பிற மனிதர்களை மதிக்கவும் சமானமாக எண்ணவும் முடிகிறது. மதநம்பிக்கை கொண்டவர்கள் பிறரை கீழானவர்களாக, பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணி சேவை மட்டுமே செய்ய முடியும்.

சமீபத்தில் ரயிலில் மார்ட்டின் கெர்ஜோ·ப் என்ற டச்சுக்காரரைச் சந்தித்து நண்பரானேன். அவர்தான் இந்த விஷயத்தை மிக உறுதியாகச் சொன்னார். மதமனநிலையை வைத்துக்கொண்டிருக்கும் வரை இந்தியர்களையோ ஆப்ரிக்கர்களையோ பிறரையோ வெள்ளையர்களால் ‘தாங்கிக்கொள்ள’ முடியுமே ஒழிய இயல்பாக சமாமாக எண்ணவும் விரும்பவும் முடியாது என்றார் அவர்.

இவ்வளவுக்கும் பிறகு நம்முடைய சிக்கல்கள் உள்ளன. ‘இந்தியா ஏழை நாடு’ என்றால் அது உண்மைதானே? இன்றும் இந்தியாவின் பெரும்பகுதி அச்சமூட்டும் வறுமையில்தான் மூழ்கிக் கிடக்கிறது. எலிவளை போன்ற வீடுகளில் மெலிந்து கறுத்த மனிதர்கள் நடைபிணங்கள் போல வாழ்கிறார்கள். ஒரு வேளைச் சோறு கொடுக்கப்பட்டால் முண்டியடித்து நூற்றுக்கணக்கில் உயிரை விடுகிறார்கள்.

அந்த வறுமையைக் கண்டு நாம் வெட்க வேண்டும். வேதனை கொள்ளவேண்டும். அந்த வறுமை இல்லை என்று வாதிடுவதையோ அந்த வறுமைக்கு காரணங்கள் கண்டுபிடிப்பதையோ ஒருபோதும் செய்யக்கூடாது. குறைந்தது ஒரு வெள்ளையன் சொல்லும்போதாவது நமக்கு அது உறுத்தட்டுமே.

இந்தியா சுத்தமில்லாத நாடு என்றால் அது மேலும் உண்மை. நான் அறிந்த வரையில் சுகாதார உணர்வே இல்லாத மக்கள் என்றால் இந்தியர்களே. இந்தியாவில் குடியிருப்புகளைச் சுற்றி நான் பார்த்த குப்பைமலைகளை  உலகில் எங்குமே பார்த்ததில்லை. இதில் செல்வம் கல்வி என எதுவுமே விலக்களிப்பதில்லை. ஒரு சர்வதேச விமானநிலையக் கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தேசமக்களில் பாதிப்பேர் தெருக்களில் மலம் கழிக்கிறார்கள். எங்கும் துப்பி வைக்கிறார்கள். இந்திய நகரங்கள் மலைபோலக் குப்பைகள் சூழ்ந்தவை. தலைநகரான டெல்லி உட்பட.

ஆகவே நம் வணிகர்கள் அமெரிக்க ஐரோப்பிய குப்பைகளை இறக்குமதிசெய்து இங்கே நகரங்களில் ஏற்கனவே உள்ள குப்பைமலைகளுடன் சேர்த்துக்கொட்டி பணம் சம்பாதிக்கிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கீக்கொண்டு அனுமதி கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகள் பேசாமலிருக்கிறார்கள்

சிககோ நகரத்து கக்கூஸ் நாப்கின்கள் தூத்துக்குடிக்கு வந்து தாமிரவருணிக்கரைகளில் கொட்டப்படும்போது நாம் எப்படி சுத்தமான நாடாக இருக்க முடியும்? நம்மை அசுத்தமானவர்கள் என்று சொல்ல சிக்காகோ வாசிகளுக்கு என்ன தகுதி இருக்க முடியும்?

சென்ற வாரம் சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த மாபெரும் குப்பைமலையை அடையாளம் கண்டார்கள். ஆனால் இறக்குமதி செய்தாகிவிட்டது. திருப்பி அனுப்ப முடியாது. தூத்துக்குடி முதல் குமரிவரை கடலோரமாக அவற்றைக் கொட்டி வைப்பார்கள் [சி.பி.எம் ஆட்களிடன் கொடுத்தால் விரும்பி வாங்கி வீட்டுக்குள் கொட்டி வைப்பார்கள். ‘தி இந்து’வில் என் ராம் சீனா இந்தியாவுக்கு ஒரு மாபெரும்  செல்வத்தை அள்ளி தந்திருப்பதாக கட்டுரை வனைவார்]

இந்தநிலையில் உலகிலேயே சுகாதார உணர்வற்ற அசுத்தமான நாடுகளில் ஒன்றுதான் இந்தியா என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறைக்க முடியாது. ஒரு சுற்றுலாப்பயணி ஒருமுறை கன்யாகுமரிக்கு வந்தால் அதன் பின் அவன் சாப்பாட்டு நேரத்தில் இந்தியா என்றே நினைக்க விரும்ப மாட்டான்.

வருடத்துக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு கன்யாகுமரியில் கான்கிரீட் வேலைகள் செய்பவர்கள் மாதம் ஐம்பதாயிரம் செலவிட்டு குப்பையை அள்ளவோ, நான்கு வாட்ச்மேன்களைப் போட்டு மலம்கழிப்பவர்களை தடுக்கவோ முனைவதில்லை. சுற்றுலா அமைச்சரின் சொந்த தொகுதி இது. நமக்கு சுத்த உணர்வில்லை என்பதற்கு மேலதிக ஆதாரம் எதற்கு?

நம்முடைய உணவு வீச்சம் மிக்கது. பொதுவாக பூமத்திய ரேகைநாடுகளின் உணவே காரமும் வாசனையும் மிக்கது. கண்டிப்பாக அது பிறருக்கு கஷ்டமாக இருக்கும். நாம் அதற்காக நம்மை தயாரித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆக, இந்த எதிர்மறை பிம்பங்களை இயல்பாக எடுத்துக்கொள்வதே நல்ல மன்நிலை. அது மானுட இயல்பு. கூடவே அவ்விமர்சனங்களில் ஏதேனும் உண்மை இருக்குமென்றால் அதை நாம் கருத்திகொண்டு நம்மை திரும்பிப்பாக்கவும்வேண்டும்.

*

ஆனால் இந்த விஷயத்தில் இன்னொரு கோணமும் உண்டு. வெறுப்பு அல்லது ஏளனத்தில் இருந்தே இந்த விஷயங்கள் பெரிதாகத் தெரிகின்றன. சென்ற கால்நூற்றாண்டுக்கு முன்னால்வரை சீனாவைப் பற்றி இதைவிட படு மோசமான மனச்சித்திரமே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தது. இன்று சீனத்தவர்கள் உலகின் வல்லரசாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்தியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் குப்பைமலைகளை அனுப்பும் தகுதி பெற்றுவிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்று சீனாவைப் பற்றிய பிம்பம் மாறிவிட்டது. இன்று சீனன் நாறுவதில்லை.

நாமும் வெல்லும்போது நறுமணம் வீச ஆரம்பிக்கலாம். ஆப்ரிக்காவிற்கு குப்பைகளை அனுப்பி வைக்கலாம். சுத்தமற்ற ஆப்ரிக்கர்களை நோக்கி நமுட்டுப்புன்னகை செய்யலாம்.

ஜெ

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Mar 9, 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6730

39 comments

Skip to comment form

 1. chandanaar

  இங்கு டெல்லியிலேயே நிறைய விஷயங்களை கவனிக்கிறேன். மிக நவீனமாக உடை அணிந்தவரும் சாலையிலேயே துப்புவதில் தயக்கம் கட்டுவதில்லை. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துகொண்டு பெண்கள் கேட்ட பின்பும் உட்கார இடம் கொடுக்க மறுக்கும் பலரை தினமும் பார்க்கிறேன். பல மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இருப்பதால் ஒரு கலாசார கலப்பு நிகழ்ந்திருக்கும் என்று முன்பு நினைத்திருந்த எனக்கு இங்கு ஆச்சர்யம் தான் கிடைத்தது. அவரவர் அவரவர் மதம் , இனம் , மாநிலம் என்று ஒன்று சேர்ந்து கொள்வதை பார்க்க முடிகிறது. ‘பிஹாரி ‘ என்றாலே அவமான படுத்துவதற்காக உபயோகிக்கப்படும் வார்த்தை என்பதே இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன். தென்னிந்தியர்கள் கடும் உழைப்பாளிகள் , அறிவாளிகள் என்று இங்குள்ளவர்கள் கருதினாலும் நாம் ‘சுயநலவாதிகள்’ என்று நினைக்கிறார்கள். நிறைய வேறுபாடுகள். நரசய்யாவின் கடலோடிகளில் ஆங்கிலேயர்களுக்கும் , ஸ்காட்லாந்து காரர்களுக்கும் இருக்கும் புகைச்சல் , மற்ற பல நாட்டு காரர்கள் பிற நாடு காரர்களை இழிவாக நடத்துவதை எழுதியிருக்கிறார். நீங்கள் சொன்னதில் இன்னும் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்..இலக்கியம், பயணக்கட்டுரைகள் , போன்றவற்றோடு திரைப்படம் ஏற்படுத்தும் நேரடி பாதிப்புகளும் அதிகம். அமெரிக்காவில் வீடு இல்லாமல் இரவு மட்டும் தங்கி கொள்ள அனுமதிக்கும் விடுதிகளுக்கு முன்பாக மக்கள் காத்து கிடப்பதை கூட நான் Will Smith இன் The Pursuit of Happyness படத்தில் தான் பார்த்தேன். அமெரிக்கர்களுக்கு பணம் என்பது ஒரு பொருட்டே இல்லை என்று ஒரு முறையாவது நினைத்திராத இளைஞன் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன்.

 2. stride

  “சென்ற கால்நூற்றாண்டுக்கு முன்னால்வரை சீனாவைப் பற்றி இதைவிட படு மோசமான மனச்சித்திரமே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தது. இன்று சீனத்தவர்கள் உலகின் வல்லரசாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்தியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் குப்பைமலைகளை அனுப்பும் தகுதி பெற்றுவிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்று சீனாவைப் பற்றிய பிம்பம் மாறிவிட்டது. இன்று சீனன் நாறுவதில்லை.”

  என்று சொன்னது மிக உண்மை. இதே அமெரிக்கர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாரை சாரையாக இத்தாலியர்கள் வந்த போது அவர்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள். வெங்காயாம் பூண்டு அதிகம் போட்ட அவர்கள் உணவை நாற்றம் பிடித்தது என்று நகையாடினார்கள். இன்று மணக்கும் பாஸ்டாவும் பிட்ஸாவும் தான் அமெரிக்காவின் தேசிய உணவுகள். கூடிய சீக்கிரமே கறியும் அப்படி ஆகிவிடும்.

  என் அனுபவத்தில் அமெரிக்கர்கள் இந்தியர்களை விட சீனர்களோடு பழுகிறார்கள் என்று நான் கண்டதில்லை. அலுவலகம் தவிர வெளியில் வெள்ளையர்களுடன் பழகும் எந்த சீனரையும் பார்த்ததில்லை. என் கூட வேலை பார்க்கும் சில வெள்ளையர்கள் சீனர்கள் வாய் நாறுகிறது என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள். என்னை பற்றி சீனர்களிடம் என்ன சொன்னார்களோ.

  இன்னோன்று – இங்கே சீனர்கள் இந்தியர்கள் என்று இதுவரை குறிப்பிட்டது அமெரிக்காவில் பிறந்தவர்களை இல்லை. நான் அமெரிக்காவில் பிறந்த நிறைய இரண்டாவது தலைமுறை சீனர்களை இந்தியர்களை பார்க்கிறேன். அவர்கள் வெள்ளையர்களுடன் பழுகுகிறார்கள். பேசும்போது பாப் கல்ச்சர் ரெஃபரன்ஸ் வரும்போது இரு தரப்பினரும் புரிந்து கொள்கிறார்கள். கிளப்பில் எளிதில் தோழர் தோழியரை பிக் அப் செய்து கொள்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் மனதில் கலாச்சாரத்தில் அமெரிக்கர்களாகி விட்டனர். வெள்ளையர்களும் அவர்களை அப்படி ஏற்றுக்கொண்டுவிட்டனர். அமெரிக்காவுக்கு வந்த ஒரு இந்திய இளைஞன் கிளப்பில் செய்வது தமாஷாக இருக்கும். சாதாரணமாக நாமெல்லாம் அமெரிக்க ஆங்கிலம் பேசுவதாக நினைத்து கொண்டு பேசினாலே அமெரிக்கர்களுக்கு புரியாது, காதடைக்கும் சத்தத்தில் பேசி ஒரு பெண்ணை பிக் அப் செய்வது அருகில் நின்று பார்த்தால் பெரும் காமெடியாக இருக்கும். ஆனால் இதே அமெரிக்க இந்தியர்களும் சீனர்களும் கறுப்பின மக்களுடன் தொடர்பே வைத்து கொள்ள மாட்டர்கள். இந்த விஷயத்திலும் தூய வெள்ளையர்களாகி விட்டனர். இதை இந்தியா சீனாவில் இருந்து வந்தவர்களும் சீராக கடைபிடிக்கிறார்கள் – கறுப்பனென்றால் அனைவருக்கும் எள்ளல் தான்.

  பாதி இந்தியர்கள் இங்கு அலுவலுகம் வரும் போது முகசவரம் செய்வது கிடையாது. சரியாக உடையணிவது கிடையாது. காலனிக்கு பாலிஷ் செய்வது கிடையாது. கூட வேலை பார்ப்பவர்கள் வெளியே உண்ண அழைத்தால் மறுத்து வீட்டிலிருந்து கொண்டு வந்த சப்ஜியை மைக்ரோவேவில் சூடு படுத்தினால் அலுவலுகம் முழுதும் மணம் கமழும். இதில் ஒரே ஆறுதல் அவருக்கு பின்னால் ஒரு சீனர் நேற்றைய மீனை சூடு செய்ய நிற்பார். மீன் வாசம் சப்ஜி மணத்தை உண்டு இல்லாமல் செய்து விடும். இப்படி இருந்தும் மெரும்பாலான அமெரிக்கர்கள் ஒன்றுமே சொல்லாமல் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். இந்திய உணவுக்கு பழக்கப்பட்டபின் வாரம் ஒருமுறையேனும் இந்திய உணவு விடுதிகளுக்கு செல்லும் நிறைய அமெரிக்கர்களை எனக்கு தெரியும். என் அனுபவம் பெரும்பாலும் அனைத்து இன மக்களும் கூடி வாழும் பெரு நகரங்களில் தான்.

  காட்டை விட்டு வெளியே வாங்க.. இல்லை காட்டை முடிந்தவரை மாத்துங்க பிரகாஷ்

  சிவா

 3. Srini

  ”இவையெல்லாம் மேனாடுகள் நமது நாட்டின் மீது கொண்ட வெறுப்பின் அடையாளம்” – என்று மொத்தமாக மழுப்பி முடித்து விடுவீர்களோ என்று சற்று கடுப்பாகி விட்டேன். கடைசிப் பகுதி படித்து விட்டு சற்று அசுவாசமானேன். எனக்கும் இதே வருத்தங்கள் உண்டு. சுகாதாரம், வாழ்கை வசதி மட்டுமல்ல, எனக்கு மிக உறுத்தலான விஷயம், இந்த மேனாடுகளில் உள்ள வேலை/குடும்ப விகிதம். மேனாடுகளில் குடும்பம் மட்டுமே முன்னிறுத்தப்படும். நமது நட்டில் (மட்டுமல்ல – ஆசியா முழுவதுமே) நேரெதிர். சிறிய, ஆனால் மிக முக்கியமாக நான் கருதும், உதாரணம், ஆண்டு விடுப்பென்பது அவரவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் எடுத்துக் கொள்ளப்படுவது. எனது நண்பரொருவர் தனது திருமணத்துக்கு 15 நாள் விடுப்புக் கேட்டதற்கு, அவருடைய மேலாளரால் கறாராக மறுக்கப்பட்டு, பின் நண்பாரல் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, அனுமதியளிக்கப்பட்டது. சமூகம் சக மனிதன் மீது அவ்வளவு குறுகலாக ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. குப்பை, சுத்தம் விஷயங்கள் பற்றி, நாதிர் ஷா இந்தியா மீது படையெடுத்த போது டெல்லியில் கண்ட மக்களைக் கொண்டு “இந்தியர்கள் சுத்தம் பற்றி அக்கரையில்லதவர்கள்” என்று வரலாறெழுதியதாக ‘வந்தார்கள் வென்றார்களில்’ படித்த நினைவு. கண்டிப்பாக இன்று அதை விட மோசமாகத் தானிருக்கும். ஒரே ஒரு கருத்து, இந்தக் கட்டுரையில், நானறிந்த வரையில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மற்றும் சீன உணவுகளின் மீது (இந்திய உணவுகள் மீது சற்று அதிகமாகவே) வெள்ளையர்களுக்கு கொள்ளைப் பிரியம். குறிப்பாக ஐக்கிய அரசாட்சியில் (UK) ஒரு சிறு கிராமத்தில் கூட இந்திய மற்றும் சீன உணவகங்களைக் காணலாம்.

 4. Prakash

  நன்றி ஜெமோ. இப்பொழுது இருக்கும் யதார்த்ததை ஏற்று கொண்டால் தான் நாளைக்கு மாற முடியும். ஹ்ம்ம் சரி தான். வெட்டி தர்க்கத்தால் ஒன்னும் ஆகா போறதில்லை. திருப்பியும் என்னை நிஜத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என்னுடய வலை கட்டுரையை நீக்கி விட்டேன் :)

 5. Prakash

  பெண்களை பிக் அப் செய்வது ஒன்னும் அவ்வளவு கடினம் இல்லை. என் மனைவி ஜெமோ கட்டுரையெல்லாம் படிக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் :) இப்பொழுது நினைத்தாலும் பெருமூச்சு வருகிறது, வளரும் காளைகளுக்கு,

  முதல தனியா இருக்கனும், கூட்டத்தோட நிக்க கூடாது. நண்பர்களோட சென்றாலும், அங்கே கண்ணும் கருத்துமா பிரிந்து விட வேண்டும். முடிய ஒட்ட வெட்டிருகனும், வாசனையான hair Gel , வெள்ளை இல்லை மிக லைட் கலர் ஷர்ட் போற்றுகனும் ( dance floor lighting’கு அது தான் பொருந்தும் – நல்ல பொருந்தும் brand முக்கியம் – உங்கள் வசதிக்கேற்ப D&G, Express, Macys, Kohls – இதற்கு கீழ் என்றால், நீங்கள் அந்த பக்கம் போகாமல் இருப்பதே நன்று) , body spray அடிக்கணும், நல்ல brand perfume அள்ளி தெளிச்சிகனும் ( இந்த ஊர் பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம்), சவரம் செஞ்சிருக்கணும், நல்ல Shoes போற்றுகனும் ( sneakers போட கூடாது, நல்ல தரமான boots அல்லது shoes போடணும் ). முகத்த கடு கடுப்பா வச்சிக்க கூடாது, மலர்ந்த புன்னகையோட இருக்கணும், கண் ஜாடை பேச தெரியனும் ( யாராது நம்மள பார்கிறார்களா என்று பறக்காவட்டி மாதிரி இல்லாமல் பார்க்கணும்), பார்த்தால் பக்கத்தில் போய் புன்னகைகனும், உங்களை பிடித்து இருந்தால் அந்த பெண் அவளே முக்கால் வாசி பேச ஆரம்பிப்பாள், நீங்கள் பிக் அப் செய்தாயிற்று. கண்ட இடத்தில கையை வைக்க கூடாது, எந்த மூவும் அவளுடயாதகவே முதலில் இருக்க வேண்டும். இவ்வளவு செஞ்சும் மூணு வாட்டி போனா ஒரு வாட்டி தான் மாட்டும். குட் லக் !

 6. Meenakshi Sundaram

  //அந்த வறுமையைக் கண்டு நாம் வெட்க வேண்டும். வேதனை கொள்ளவேண்டும். அந்த வறுமை இல்லை என்று வாதிடுவதையோ அந்த வறுமைக்கு காரணங்கள் கண்டுபிடிப்பதையோ ஒருபோதும் செய்யக்கூடாது. குறைந்தது ஒரு வெள்ளையன் சொல்லும்போதாவது நமக்கு அது உறுத்தட்டுமே.//

  நிதர்சனமான வரிகள், இதுவே இனி Slumdog Millionaire பாத்து கூச்சல் போடுகிற என் இந்திய நண்பர்களுக்கு என் பதிலாக இருக்கும்.

  என் பத்து வருட அமெரிக்க அனுபவத்தில் மிகச் சில அமெரிக்கர்களே இந்தியாவைப் பற்றி இந்தக் கண்ணோட்டம் கொண்டு நான் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் உலக அறிவு சற்று அதிகம் மிக்க அமெரிக்கர்கள் இந்தியாவைப் பற்றி சிலாகித்தே பேசுவார்கள். நானும் ஒரு சிறிய ஊரில் தான் படித்தேன் பின் பக்கத்துக்கு ஊரிலேயே வேலையும் செய்கிறேன். சொல்லப்போனால் “பைபிள் பெல்ட்” என்று சொல்லக்கூடிய “கட்டுப்பெட்டிகள்” நிறைந்த ஊர், அனால் இங்கு மூன்று இந்திய உணவகங்கள் உண்டு அங்கு பெரும்பாலும் வாடிக்கியாளர்கள் அமெரிக்கர்களே. இந்தியர்கள் சுகாதாரமற்றவர்கள் என்ற கண்ணோட்டம் ஊடகங்களை பார்த்து அவர்கள் சொல்லலாமே ஒழிய பெரும்பாலும் இந்தியர்கள் இங்கு சுத்தமாய் இருப்பதையே நான் கண்டிருக்கிறேன். உதரணமாக பல அமெரிக்கர்களின் கார்களின் உள்ளே எட்டிப் பார்த்தல் ஒரு குப்பை தொட்டிக்கு சக்கரம் மாறிவிட்டது போல் அவ்வளவு குப்பையாக இருக்கும் இந்தியர்களின் கார்கள் சுத்தமாகவே இருக்கும்.

  அமெரிக்கர்கள் சமயல் என்று ஒன்று இருப்பதையே மறந்து பல காலங்கள் ஆயிற்று. அலுவலகம் செல்பவர்கள் பெரும்பாலும் வெளியே தான் சாப்பிடுவார்கள் இல்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய டப்பாவில் வரும் processed food தான் சூடு செய்து சாப்பிடுவார்கள். நான் வீட்டு சாப்பாடு மைக்ரோவேவில் சூடு செய்தால் பல பேர் என்னிடம் “உணவு நல்ல மணமாக இருக்கிறது, என்ன ingredients சேர்த்திருக்கிறேன்” என்று கேட்டு தெரிந்துகொள்வார்கள். முதலில் சூப்பர் மார்க்கெட்டில் சின, மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மளிகை பொருட்கள் மட்டும் தான் வைத்திருப்பார்கள் இப்போது பல இந்திய மளிகை பொருட்களை பார்க்கமுடிகிறது. சமிபத்தில் வால்-மார்டில் கூட “நான்” விக்க தொடங்கியிருகிறார்கள். நான் இந்தியா வந்து arranged marriage செய்த போது என்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். சில நேரம் அமெரிக்காவை விட்டு வேறு எந்த உலக அறிவும் இல்லாத அமெரிக்கர்கள் இந்தியாவை பற்றி இந்த கருத்தை வைதிருக்கக்கூடும் அப்படியே இருந்தாலும் திரு. ஜெ சொன்ன மாதிரி சில விஷயங்கள் உண்மை தானே.

  இது தான் நான் எழுதும் முதல் பின்னூட்டம், நான் நாவல்கள் படித்து பல காலம் ஆயிற்று அனால் “இரவு” அட்டகாசமாய் போகிறது, இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுகிறாரே ஓசியில் படிக்கிறோம் என்று ஒரு குற்ற உணர்வு உள்ளது. அடுத்த முறை இந்தியா வரும் போது உங்கள் புத்தகங்கள் வாங்கி வரலாம் என்று உள்ளேன்.

  நன்றி ஜெயமோகன் சார்

 7. V.Ganesh

  சூப்பர். எராளமான வஞ்சபுகழ்ச்சி. சில இடங்களில் சோ வின் வாசனை அடித்தது.
  “வருடத்துக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு கன்யாகுமரியில் கான்கிரீட் வேலைகள் செய்பவர்கள் மாதம் ஐம்பதாயிரம் செலவிட்டு குப்பையை அள்ளவோ, நான்கு வாட்ச்மேன்களைப் போட்டு மலம்கழிப்பவர்களை தடுக்கவோ முனைவதில்லை”. கான்க்ரீட் போட்டால் கமிஷன். குப்பை அள்ளி எங்கு போடுவது? அதுவாகவே போனால் தான் உண்டு. :)

 8. ratan

  இது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு விஷயம் உண்டு.. அது நம் தாழ்வு மனப்பான்மை…

  வெள்ளையர்களை இம்ப்ரெஸ் செய்வதே வாழ்நாள் லட்சியம் என்று அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கிறார்கள்.

  இந்தியாவின் பாரம்பரியப் பெருமை குறித்து எத்தனை இந்தியர்கள் பேச முடியும்? நம் பள்ளிகள் தயாரிப்பதெல்லாம் pseudo-americans-இ மட்டுமே… சென்னை வெயிலில் shoe-வும் tie-யும் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இருக்கும் நாடு, ஏளனத்திற்குரியதே…

 9. KALIRAJ

  //நான் பார்த்தவரையுல் மேலைநாடுகளில் யார் மதத்தில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே பிற மனிதர்களை மதிக்கவும் சமானமாக எண்ணவும் முடிகிறது. மதநம்பிக்கை கொண்டவர்கள் பிறரை கீழானவர்களாக, பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணி சேவை மட்டுமே செய்ய முடியும்.

  சமீபத்தில் ரயிலில் மார்ட்டின் கெர்ஜோ·ப் என்ற டச்சுக்காரரைச் சந்தித்து நண்பரானேன். அவர்தான் இந்த விஷயத்தை மிக உறுதியாகச் சொன்னார். மதமனநிலையை வைத்துக்கொண்டிருக்கும் வரை இந்தியர்களையோ ஆப்ரிக்கர்களையோ பிறரையோ வெள்ளையர்களால் ‘தாங்கிக்கொள்ள’ முடியுமே ஒழிய இயல்பாக சமாமாக எண்ணவும் விரும்பவும் முடியாது என்றார் அவர்.

  ///

  Do you think it is true in India too?. Just replace Indians & Africans by – other communities here.

 10. sankar.manicka

  //
  சென்னை வெயிலில் shoe-வும் tie-யும் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இருக்கும் நாடு, ஏளனத்திற்குரியதே…
  //

  நூத்துல ஒரு வார்த்தை…ஸ்கூல் பிரின்சிபால் யாராவது இருந்தா இதப்படிச்சுட்டு தூக்குல தொங்குங்க…
  ஷூ போடாட்டி தண்டனை, டை கட்டாட்டி தண்டனைன்னு என்னா ஆட்டம் போடுறீங்கப்பா.
  யாராவது பொதுநல வழக்குப் போட்டு ஸ்கூல் பசங்க லெதர் ஷூ போடக்கூடாது, டை கட்டக்கூடாது என்று சொல்ல வைக்கவேண்டும்.

 11. ramkathir

  இந்தியர்கள் நாற்றம் பிடித்தவர்கள், குளிப்பதில்லை என்று பிராகாஷ் குறிப்பிடுகிறார். ஆனால் குளிப்பதில் அரேபியர்கள், பாகிஸ்தானியர்கள், சீனர்களைவிட நாம் பரவாயில்லை. என்ன அவர்கள் வாசனைத்திரவியங்களை வைத்து சரிக்கட்டிவிடுகிறார்கள்.

  இந்தியர்களுடைய திறமையையும் கடும் உழைப்பையும் ஒப்பிட்டால் சுத்தம், சுகாதார உணர்வு என்பது எதிரெதிர் திசை கொண்டது. கொஞ்சநஞ்சம் சுத்தம், சுகாதார உணர்வு என்பது வீடு வரைக்கும்தான். அதுவும் ஆண்கள்தான் சுகாதாரக்கேட்டின் விற்பனை பிரதிநிதிகள். வீதியில் சுவற்றில் ஒன்னுக்கடிப்பது பிறப்புரிமை என்பார்கள்!!! எச்சிலை பொதுஇடத்தில் துப்பினால் ஈ எறும்புக்கு நன்மைசெய்வதாக நினைப்புவேறு!!!!

  இன்றும் கிராமத்து தாய்மார்கள் மாட்டுச்சாணத்தால் வீடுமுழுகி, விறகடுப்பிற்கு சுண்ணாம்பு அடித்து, படுக்கைவிரிப்புகளை அலசி, குடிநீர் மற்றும் சமையல்பாத்திரங்களை விளக்கி வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். அதுபோலவே நகரத்துதாய்மார்களும். ஆனால் ஆண்கள் தன்வீட்டிலிருந்து தெருவில் விழும் கழிவுநீரை பற்றி எந்த அக்கரையும் காட்டமாட்டார்கள்.

  பொதுச்சுகாதாரம், சுத்தம் என்பது மக்களைவிட அரசாங்கப்பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது. யார் ஆட்சிசெய்தாலும், நகராட்சிகள் வரிவசூலில் காட்டும் ஆர்வத்தைவிட சுகாதாரப்பணிகளில் முடங்கிப்போய்விடுகிறது. அரசுமருத்துவமனைகள் கிருமிகளின் கிடங்காக உள்ளது. உலகத்திலே மிகக்கொடுமையான இடம் எது என்றால் நம் பேருந்துநிலையத்திலுள்ள கழிப்பிடங்கள்தான். அதுவும் மாணவச்செல்வங்களை எதிர்கால இந்தியாவை உருவாக்கும் நம் அரசு மற்றும் தனியார்பள்ளிகளின் கழிப்பிடங்கள் சொல்லவேண்டாம்!!!

  இந்தியநாட்டில் திறந்தவெளிச்சாக்கடைகள் எப்பொழுது அகற்றப்படுகிறதோ, திர மற்றும் திடக்கழிவுகள் மேலாண்மைக்கும் சுகாதாரத்துக்கும் எப்பொழுது அரசாங்கமும் மக்களும் முதல் முன்னுரிமை தறுகிறார்களோ அன்றுதான் உயர்ந்த தொன்மையான நம் மரபு மற்றும் பண்பாட்டுப்பெருமைகளின் எதிர்மறையான சித்திரத்தை இல்லாமல் செய்யமுடியும். நம்நாடு சீரான வளர்ச்சியை தக்கவைக்கும். இல்லாவிட்டால் புரையோடிய வளர்ச்சியாகிவிடும்.

  குப்பைகளை இறக்குமதிசெய்யும் ஏஜெண்டுகளை தண்டிக்காமல் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைச்சகங்கள், சுங்கவரித்துறையினர் ஏன் வேடிக்கைபார்க்கிறது என்று புரியவில்லை.

  குப்பையை கொட்டுவதும் மட்டும் அல்ல சீனா அருணாச்சலப்பிரதேசத்தை ஆக்கிரமித்தாலும் இந்தியநாட்டின்மீது அணுகுண்டு வீசினாலும் சிபிஎம் தன்னுடைய விசுவாசத்தை சீனாவிடம்தான் காட்டும்.

  கதிரேசன், ஓமன்

 12. Srini

  “வெள்ளையர்களை இம்ப்ரெஸ் செய்வதே வாழ்நாள் லட்சியம் என்று அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் நினைக்கிறார்கள்.” – அமெரிக்கா மட்டுமல்ல, வெளிநாடு (மலேசியா, சிங்கப்பூர் உட்பட) செல்லும் பெரும்பாலான இந்தியர்களுக்கு இது பொருந்தும்.
  “நம் பள்ளிகள் தயாரிப்பதெல்லாம் pseudo-americans-இ மட்டுமே… சென்னை வெயிலில் shoe-வும் tie-யும் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இருக்கும் நாடு, ஏளனத்திற்குரியதே…”
  இதுபோன்ற வரிகள் தான் சிக்க மாட்டேன் என்கிறது. நன்று ரத்தன். இப்பொழுது (மும்பையில் என்று நினைக்கிறேன்) அமெரிக்க உச்சரிப்பிட்ல் ஆங்கிலம் பயிற்றுவிக்கக் கூடிய பள்ளிகள் வந்துவிட்டதாக அறிகிறேன்.

 13. maniivannan

  கொற நாளுக்கு முன்ன கீழ்க்கண்டவை ஒரு இமெயிலில் வந்தது. அனுபவத்தில் கண்டது…. அத்தனையும் உண்மை. இரு வேலை குளிப்பதை தவிர்ப்பதும், குளித்த பின் கிரீம் தடவாமல் பூத்துப்போன கைகாலுடன் வெளியில் அலைவதும், கடும் குளிரிலும் செருப்பு போட்டுகொண்டு நடப்பதும் (இது மாத்திரம் பெரும்பாலும் ஆந்திரக்காரர்கள்), சீஸ் பீசா வாங்கி அதிலே வெங்காயம் சிக்கன் வதக்கிபோட்டு (இரு டாலர் சேமிக்க) சாப்பிடுவதும் பார்த்து அலுத்துப்போன விஷயம்…அனால் அதே நபர் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததும் இங்குள்ளபடி மாறிப்போவதும் பார்த்த ஒன்றுதான்.

  Ways to spot a desi (Funny email)

  -You arrive one or two hours late to a party – and think it’s normal.
  -You regift Wedding Gifts , Birthday Gifts and Anniversary Gifts
  -You take Indian snacks anywhere it says “No Food Allowed”
  -You talk for an hour at the front door when leaving someone’s house.
  -You use plastic to cover anything new in your house whether it’s the remote control, VCR, carpet or new couch.
  -Your parents tell you not to care what your friends think, but they won’t let you do certain things because of what the other “Uncles and Aunties” will think.
  -You buy and display crockery, which is never used, as it is for special occasions, which never happen.
  -You have a vinyl tablecloth on your kitchen table.
  -You keep leftover food in your fridge in as many numbers of bowls as possible.
  -Your kitchen shelf is full of jars, varieties of bowls and plastic utensils (got free with purchase of other stuff )
  -You carry a stash of your own food whenever you travel (and travel means any car ride longer than 15 minutes).
  -You fight over who pays the dinner bill.
  -You live with your parents and you are 40 years old. ( And they prefer it that way).
  -You never learnt how to stand in a queue.
  -You can only travel if there are 5 persons at least to see you off or receive you whether you are traveling by bus, train or plane.
  -If she is NOT your daughter, you always take interest in knowing whose daughter has run with whose son and feel proud to spread it at the velocity of more than the speed of light.
  -You call an older person you never met before Uncle or Aunty.”
  -Your parents don’t realize phone connections to foreign countries have improved in the last two decades, and still scream at the top of their lungs when making foreign calls.
  -You have bed sheets on your sofas so as to keep them from getting dirty.
  -All your Tupperware is stained with food color.
  -You have mastered the art of bargaining in shopping.

 14. Vino Kingston

  திரு ஜெயமோகன்,
  பல நாட்கள் ஆஹி விட்டது ஒரு பின்னூட்டம் அனுப்பி. நலம் என நம்புஹிரேன். ஜூன் மாதம் இந்தியா வரும்போது சந்திக்க விருப்பம்.

  இந்த கட்டுரை மிக அருமை. பிரகாஷ் அவர்களின் எண்ணங்கள் நியாயமானதே. அதற்க்கான உங்கள் பதிலும் சரியானதாக இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்த நாட்களில், வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது உண்டு…அமெரிக்க கனவிலும் இல்லை, ஒரு கிராமத்தில் பிறந்து வளந்த எனக்கு. என் நேர்த்தியான எண்ணங்கள் எனக்கு எப்போதுமே இந்தியர்கள் மற்ற மானுட வர்க்கங்கள் போல் தான், எந்த தாழ்வு மனப்பான்மையோ, உயர்வு மனப்பான்மையோ கொள்ள கூடாது என்ற உறுதியான நம்பிக்கை தந்திருக்கிறது. 13 வருடங்கள் அமெரிக்க வாழ்க்கையில் இதனை நான் கண்டிப்பாக கடைபிடிதிருக்கிரேன். கிறிஸ்தவ மதம் சார்ந்து வளர்ந்ததால், இங்கு வந்தபோது மதம் சார்ந்த கலாச்சார வேறுபாடு அந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லை. ஓன்று மட்டும் நிச்சயம், அமெரிக்காவில் தாக்கு பிடிக்க வேண்டும் என்றால் இங்குள்ள பொருளாதரம் சார்ந்த வாழ்க்கை முறையை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்…இங்கு மனிதாபிமானம் என்பதெல்லாம் பேச்சளவில் மட்டும் தான்..இல்லையென்றல் கடினமான பொருளாதார நிலையிலும், நிறுவனத்தில் லாபத்தில் குறைவு வந்தது என – அதற்க்கு முந்தின வருடத்தை நிலையில் கொண்டு பார்க்கும்போது (நஷ்ட்டம் வரவில்லை) ஒரு வருடத்தில் நான்கு முறை வேலைக்கு ஆள் குறைப்பு செய்வார்களா என்ன தனியார் நிறுவனங்களில்…அமெரிக்கா ஒரு பேராசை பிடித்த நாடு…சாதாரண ஆட்கள் (வெள்ளந்தி?) இங்கு வெற்றிகரமான் வாழ்க்கை நடத்துவது கஷ்ட்டம்…மனிதர்களும் இயந்திரர்கள் இங்கு.

  வீடும் நாடும் நோக்கி வரும் நாட்களை எதி நோக்கி…
  வினோ.

 15. GK

  நண்பர் வினோவுக்கு, அமெரிக்கா ஒரு பேராசை பிடித்த நாடு என்ரூ ariதர்க்கு நீங்கள் ஏன் 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டீர்கள் என புரியவில்லை. உங்களின் 13 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே நிறுவனத்தில் உழைத்து ஓய்வு பெறுகிற வழக்கமே இருந்தது. நீங்கள் கணினி தொழில் நுட்பம் சார்ந்த துறையில் பணியிலிருப்பதாக அனுமானிக்கிறேன். அமெரிக்கா சந்தைப்பொருளாதாரத்தின் மையம் என நீங்கள் முதன் முதலாய் அமெரிக்காவுக்கு விமானம் ஏறப்போகுமுன் நீங்கள் அறிந்திராதது ஆச்சரியமளிக்கத்தக்கது. மேலும் வெற்றிகரமான வாழ்க்கை என எதை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என எனக்குப் புரியவில்லை. எனது நண்பர்கள் பலர் இந்தியாவிலும் அமெரிக்காவைப் போன்றே வாழ்க்கை நிலை மாறியுள்ளதை கூறும்பொழுது, நீங்கள் வீடு திரும்பி வெற்றிகரமான வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்.

 16. rsgiri

  நம் உள்ளூர்க் குழப்பங்கள் குறித்த உங்கள் கருத்து முற்றிலும் உண்மையே. நாம் நம் வீட்டிற்குள் கொண்டிருக்கும் ஆயிரம் வேறுபாடுகளைக் களைந்த பின்னர் அமெரிக்க சுபாவம் குறித்து கவலை கொள்வோம்.

 17. Ramachandra Sarma

  நான் இதுகுறித்து கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. இந்தியர்கள் பெரும்பான்மை உள்ள தெருவுக்குப் போனதும் நான் செய்த முதல் வேலை வாயில் போட்டிருந்த குட்காவை தெருவிலேயே துப்பியதுதான். எனவே, நான் டும்மா…!!

 18. jasdiaz

  I am a frequent visitor to USA staying there for 4-6 months at a time on business. Few things I had observed are:

  1. Indians generally do not acknowledge another Indian when they come across. They pretend as if they have not seen. No ‘Hello’ and no eye-contact. Are they ashamed of speaking with another Indian?

  2. Indians even students have ghetto mentality. They tend to live and communicate within own community. They do not even mix with other Asians.

  3. Indian have only contempt for African-Americans while they are all out to please whites. Similarly I know many African students studying in India saying Indians are the worst racists they had ever come across.

  4. Second generation Indian-Americans have only contempt for F1/H1 Indians. Indian students are referred to as ” PIGS” ( Poor Indian Graduate Students) in the universities. We know what they really mean!

  5. During business deals, when an American is ready to pay, say $10 per hr, an Indian working in the firm advises his boss that he is paying more and he can get the work done at $6. Our own brethren settled abroad are our worst enemies while negotiating business deals.

  6. Most of the Indian H1 visa holders though earn handsome salary, prefer live like beggars fighting to save even a dollar or two though they are living there for years.

  7. Generally Chinese students top the courses with Indians coming second. I am surprised that these Chinese can not even speak proper English. How do they achieve this distinction?

  Can some one explain this?

  jas

 19. Subu

  அன்புள்ள ப்ரகாஷ்

  //////////////////// இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான். இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை. பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை. ////////////

  உங்கள் எச்சரிக்கைகளுக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களது கருத்துக்கள் பலவற்றை நான் ஆமோதிக்கிறேன்

  திரு ஜெயமோகன் சொன்னது போல இதை சாதாரணமாய், அயல் நாட்டவரை பற்றிய அரியாமை, நமக்கும் அறியாமை இல்லையா என்ன என விட்டுத்தள்ள முடியவில்லை

  இந்தியர் குறித்த மேலைநாட்டு ஏளம் நிதர்சனமே.

  மேலைநாட்டவர் ஜப்பானியர், சீனர் ஆகியோரை நடத்தும் வித்ததையும், இந்தியரை நடத்தும் விதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வித்தியாசம் இருப்பதாய் நீங்கள் சொன்னவிதமே எனக்கும் படுகிறது

  racism .நிற வேற்றுமை அது இது என பலர் பல காரணங்களை சொன்னாலும், இந்தியா / இந்தியர் குறித்த மேலை நாடு ஏளனத்துக்கு நாமே பல இடங்களில் காரணம் என நான் நினைக்கிறேன்.

  //////////////////////////// 1) இந்தியா ஏழை நாடு. ///////////////////

  எத்தனை இந்தியர்கள் அமேரிக்கா செல்ல கியூவில் நிற்கிறோம், எத்தனை ஜப்பானியர்கள் நிற்கிரார்கள் ?

  60 வருடங்கள் முன் ஒரு சராசரி இந்தியனின் வருமானம் சராசரி சீனனின் வருமானத்திவிட சில மடங்குகள் அதிகமாய் இருந்தது. இன்று நிலமை தலை கீழ். சராசரி சீனர்கள் நம்மைவிட அதிகம் சம்பாதிக்க்கிறார்கள் . சராசரி சீன நகரில் ரோடும், மருத்துவமு, பள்ளிகளும், மின்சாரமும் நம் நகரங்களை விட சீராய் இயங்கி வருகிறது.

  //////////////////// 2) இந்தியா சுகாதாரம் அற்ற நாடு. இந்தியர்கள் சுத்தமற்றவர்கள். 3) இந்தியர்கள் நாற்றம் பிடித்தவர்கள், குளிப்பதில்லை. இதை அவர்கள் ஒரு வெறுப்பாக சொல்ல வில்லை. உண்மையிலேயே சொல்கிறார்கள். எனக்கு சீன ( நான் சைவம் ) உணவகத்துக்கு போனால் என் முகம் எப்படி மாறுமோ அப்படி இவர்கள் இந்தியர்களின் உணவு ( முக்கியமாக மசாலா ) வாசத்தை கண்டு முகம் சுழிகின்றனர். இந்தியா உணவை உண்டாலும், இவர்கள் அலுவலகத்தில் body spray அடித்து, mint எடுத்து கொள்கிறார்கள். சில இந்தியர்கள் பக்கத்தில் வந்து பேசும் பொழுது Mint தருவார்கள். நீ நாற்றம் அடிக்கிறாய் என்பதை மறைமுகமாக சொல்லும் உத்தி அது ( என் கற்பனை அல்ல இந்த உத்தியை பற்றி ஒருவரின் மூலமாக கேட்டது ) . நம் இந்திய மக்களும் வெள்ளந்தியாக சிரித்து கொண்டு வாங்கி கொள்வார்கள்.///////////////////////////////

  துற்நாற்றம் என்று இல்லாமல், இந்தியா குறித்த பொது ஏளனத்துக்கு எனக்கு தோன்றும் சில காரணங்கள் கீழே . எந்த வரிசைப்படுத்தலும் இன்றி எழுதப்பட்டவை :

  – இந்தியாவின் 100ல் ஒரு பகுதி ..ஒரு மும்பை Slumமை வைத்து இந்தியா முழுவதையும் இழிவு படுத்தும் Slumdog millionaire போன்ற சினிமாக்களுக்கு நாம் கொடுக்கும் முதன்மை..பாராட்டு..கொடி பிடித்தல்
  – அதில் இந்தியர்களே இந்தியர்களை நரகலில் குளிப்பவர்களாய் ஒரு வெளிநாட்டு இயக்குனர் காட்டினாலும், நாம் வெட்கப்படாமல் , எதிர்க்காமல் டிக்கெட்டுக்கு முந்துகிறேம். அப்ப இருக்க இந்தியன் நாற்றம் அடிக்கிறான் என மேலை நாட்டவர் நினையாது என்ன செய்வர் ? Mint கொடுப்பது மிகவும் நாகரீகமான ஏளனம். மேலைநாட்டவரது தனி நேரத்தில் “The smelly ones” என்று பெயர் சூட்டி நம்மில் சிலரை அழைப்பதுண்டு

  – நடையில், பேச்சில், செயலில் ஆண்மையும் வலிமையும் தோன்றும் இந்திய தலைவர்கள் சமீப காலத்தில் இல்லாது போனது ..எ.கா கடந்த பத்தாண்டுகளாய் நம் பிரதமர்களின் நடையை பாருங்கள் … மிடுக்குடன் நடந்த உப்பு சத்தியாக்கிரகிகளின் கருப்பு வெள்ளை படங்களை பாருங்கள் …இன்றைய பிரதமர் பொம்மை போல தெரிவார்

  – நம் அரசியல் தலைவர்கள் பலரும் லஞ்ச லாவண்யர்களாய் திரிவது ..கேலியாய் பார்க்கிறார்கள் – Millions of slum dwellers and few hundreds with millions… என்ன ஜனநாயகம் இது என்ற வகையில் பார்க்கிரார்கள் , பேசுகிறார்கள்….வியந்து பேசுவது போல குத்திக் காட்டுவார்கள்

  – இந்தியாவிலேயே இந்திய உயிருக்கு மதிப்பின்மை . அட என்னாப்பா உங்க ஊர்ல டிரெயின் விபத்தாகி 200 பேர் செத்தாக்கூட ஒரு நாள் நியூஸ் அடுத்தநாள் அடக்கம்ன்னு முடிஞ்சு போயிடுதே ? பிரேக்கு வேலைசெய்யாமல் கெணத்துக்குள்ள பஸ் விழுந்து 65 பேர் செத்தா பிராந்திய சேதியா இல்லை வருது … இதே அமேரிக்காவில ரோடு விபத்தில 65 பேர் செத்து அது பிரேக்கு வேலை செய்யலைன்னு நிரூபணம் ஆனா, அந்த கம்பேனி நாறும் (எ,கா பல மில்லியன் டோயோட்டா கார்கள் இருந்து, அவை பல நூறு மில்லியன் மைல்கள் ஒவ்வொரு வருஷம் ஓடியும், இப்படி பல வருஷங்களாய் அமேரிக்கா கனடா ஆகிய நாடுகளில் ஓடியும் , மொத்தம் 34 அமேரிக்க சாவுகளே டோயோட்டாவை புரட்டி எடுக்கிறது)

  – நமக்கு நேச நாடாய் இருந்த ருஷ்யாவின் வீழ்ச்சி
  (இங்கே, பொதுவுடைமை சரியா, தனியுடமை சரியா ? ருஷ்யா சரியா, அமேரிக்கா சரியா என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை…) ருஷ்யா இருந்த போது இந்தியா மீது ஒரு பயமாவது இருந்தது…இன்று அதுவும் போய்விட்டது.

  – உன்னால பாக்கிஸ்தானையே சரி செய்ய முடியெல்லை நீ என்ன ஐ நா வில சீட்டுக்கு அலையுறேன்னு ஒரு ஏளனம்.

  – பன்நாட்டு நிருவனங்கள் இந்தியாவில் சுகமாய் காலூன்றியது…. தென் இந்தியாவில் பல பெரிய கொரிய கம்பேனிகளில் உள்ள நிற வேற்றுமை பிரெசித்தி.

  – 10ல் 6 பன்நாட்டு நிருவனங்களில் மேல் பதவிகள் இந்தியர்களுக்கு கிடக்காது. உழைக்க மட்டும் இந்தியர்கள்

  – நாமே முந்தி அடித்துக்கொண்டு மேலைநாட்டவருக்கு சலாம் போட்டு ஆரத்தி எடுப்பது … எ,கா நம் பங்குச்சந்தையில் நாம் முதலீடு செய்து இலாபம் சம்பாதித்தால் 15% வரி. இதையே ஒரு அமேரிக்க FII செய்தால், இலாபம் சம்பாதித்தால் அவர்களுக்கு வரி விலக்கு !! எ.கா. ஒரு அமேரிக்க விசா கிடைக்க இந்திய பிரஜை நாயாய் அலைய வேண்டி வருகிறது. இதே ஹேட்லீ போன்ற தீவிரவாதி கூட அமேரிக்கன் என்ற போர்வையில் வந்தால் விசாவும் கொடுத்து சுதந்திரமாய் உல இடமும் கொடுத்து அவனை உள்ளே விடுகிறோம்

  – இந்தியாவில் ஆளே இல்லாதது போல, நாட்டின் சாவியை அதிகம் படிக்காத ஒரு மேலை நாட்டுப் பெண்ணின் கைய்யில் கொடுத்தது … 110 கோடிகளில் உங்களுக்குள் ஒருவர் கூட இல்லையா ? அதுவும் ஒரு இத்தாலிய பெண்ணா கிடைத்தாள் என ஏளணம் செய்யும் ஐரோப்பியர்க*ளே* உண்டு !! (பெர்ல்ஸ்கோனிக்கு கூட ஐரோப்பாவின் மற்ற பல நாடுகளில் ஜோக்கர் பட்டம் தான் !!)

  – சட்ட ஒழுங்கில் நேர்மையின்மை …குறிப்பாய்… போலீஸில் … நீதித்துரையில் நேர்மையின்மை …இது பல breaking news ஆக ஊடகங்கள் வாயிலாய் வெளிவந்து இப்போது வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவுக்கென்றே தனி வழிமுறைகளை கையாளுவது …(நாங்க நேர்மையா இருக்கணும்னால்கூட உங்க ஊர்ல இருக்க முடியெல்லையே ப்பா … என்ற பேச்சு)

  ////////////////////////சீன , ஜப்பானிய மக்களுடன் எளிமையாக பழகுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியா விட்டாலும். இந்தியர்கள் என்றால் ஏளனம் தான். இந்தியர்கள் நிறைய மெனக்கிட வேண்டி உள்ளது. ஒரு Dance floor சென்றால் அங்கு பல இந்தியர்கள் வெட்டியாக யாரும் இல்லாமல் ஒரு கண்காட்சி பொருளாகவே உள்ளனர். என்னை சொல்ல வில்லை, நான் என்னை மாற்றி கொண்டேன். எனக்கு இந்த பிரச்சனை இல்லாவிடிலும், சக இந்தியர்களை ஏளனமாக பார்க்கும் போது கோவம் வருகிறது. இந்தியாவை பற்றி இப்படி சொல்லும் பொழுது , என்ன சொல்வது என்று தெரிவதில்லை. ////////////////

  – சீனாவிடம் அமேரிக்காவே வாலாட்ட முடியாது . சீனா தன் இராணுவத்தை, அணு ஆயுதங்களை, ஏவுகணைகளை, இன்ன பிற தளவாடங்களை ஒழுங்கு படுத்தி சற்றேரக்குறைய யாரையும் சாராத ஒரு தானியங்கியாய் இருக்கிறது

  – சீனர்களுக்கே உறிய “தம் கலாசாரத்தில்” நம்பிக்கை . குறைந்த பட்சம் மதம், மொழி என அடித்துக்கொண்டு ஆங்கிலத்தில் வலைப்பதி எழிதி தள்ளுவதில்லை சீனர்கள் !! சீனாவில் என்ன நடக்கிறது என யாராவது போய் பார்த்து , சீன அரசிடம் மாட்டிக்கொள்ளாமல் வெளியே வந்து எழுதினால தான் உண்டு

  – சீனா பல இடங்களில் அமேரிக்காவை தூண்டி ..சீண்டிப்பார்க்கிறது . ஏகா – கூகிளில் ஒற்றர்கள், அமேரிக்க இணையக் கம்பேனிகளை தன் இச்சைப்படி சென்ஸார் செய்ய சொல்லுவது, அமேரிக்க ராணுவ ரகசியம் அடங்கிய கணிணிகளை கைப்பற்றுதல், அமேரிக்க இராணுவ ரகசிய விமானங்களை மோதி தரை இறக்குதல்..என பல இடங்களில் சீனா தன் வல்லைமை நேரிடையாய் காட்டுகிறது

  – மறைமுகமாய் வட கொரியாவை உதவி, ஒரு கூட்டாளியையும் வைத்து அமேரிக்காவை மிறட்டுகிறது சீனா

  – அமேரிக்காவை ஜப்பானியர்கள் மிரட்டவில்லை என்றாலும் சராசரி அமேரிக்கர்களைவிட சராசரி ஜப்பானியர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர் !

  – பொருட்களின் தரத்தில், வாழ்க்கை தரத்தில், சாராசரி அயுளில், நோயின்மையில், சமூக அமைதியில், … பல இடங்களில் ஜப்பான் அமேரிக்காவை விஞ்சி நிற்கிறது. (அவ்வப்போது அந்த ஜப்பானிய பிரதமர் ஹிரோஷிமா போய்விட்டார், அந்தக்கோவிலுக்கு போய்விட்டார்…இந்த ஷிண்டோ குழுவுடன் சேர்ந்துவிட்டார் என அவர்களை மட்டம் தட்ட மேன்நாட்டு பத்திரிக்கை நிருவனங்கள் முயல்கின்றன). ஆனால் தனி மனிதனாகிய ஜப்பானியர் மீது அமேரிக்கர்களுக்கு, ஐரோப்பியர்களுக்கு ஒரு மதிப்பே .

  இப்படி எழுதிக்கொண்டே போகலாம்

  சீனர்களையும் பெளத்தர்களையும் அமேரிக்க திருச்சபைகள் வெறுக்கின்றன

  அமேரிக்க கல்லூரிகளில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராய் ரிசர்வேஷன் உண்டு (இங்கே இருக்கும் affirmative action போல , அங்கே அமேரிக்காவில் அதிகபட்சம் இவ்வளவு சீன , இந்திய குழந்தைகளை மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம் என்ற விதிமுறைகள் உண்டு )

  இதெல்லாம் இருக்கட்டும்

  இந்தியா நாத்தம் புடிச்ச ஊர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் அமேரிக்கர்கள் , மற்றை ஐரோப்பியர்கள் , ஆங்கிலேயர்கள் இப்போது சாரி சர்ரியாய் நம் நாட்டில் வேலையில் அமர்கிறார்கள்

  இங்கேஉள்ள கம்பேனிகளும் நமக்கு கொடுக்க்கும் சம்பளத்தை விட அவர்களுக்கு அதிகம் கொடுக்க தயார் !!

  என்று தணியும் இந்த அடிமையின் மோகம் ??

  அன்புடன்
  சுப்பு

 20. jasdiaz

  Ref Subu’s comment.

  I think there is much more than what we think we see. Like average Indian, average American does not know anything happening in outside world. Actually I was shocked to know that a large number of Americans do not even step outside their county.

  The irrational dislike for Indians abroad can be compared with another similar dislike for Tamils in India. For eg in Bangalore Telegu Reddys own half of Bangalore. They are in politics also. There are huge number of Malayalees. But Tamils are outcast to Kannadigas, Telegus & Malayalees. In the North people make fun of you as “sambar’ & ‘idli’ and Tamils are always “Saala Madarasi” to them. I have been always wondering why Tamils are being disliked in most parts of the country. Some one can do a Ph.D on this topic!

  Is it due to some inferiority complex that Indians abroad and Tamils in India are treated like this? Is it due to Indians and Tamils in particular considered to be ‘brainy’?

 21. Subu

  //////////காட்டை விட்டு வெளியே வாங்க.. இல்லை காட்டை முடிந்தவரை மாத்துங்க பிரகாஷ்

  சிவா/////////////

  நல்ல பின்னூட்டம் சிவா.

  காட்டை விட்டு வெளியே வா … அல்லது காட்டை மாற்று : நான் கற்க வேண்டியவற்றுள் ஒன்று

 22. Subu

  ////Is it due to Indians and Tamils in particular considered to be ‘brainy’?

  By jasdiaz on Mar 10, 2010 ///////

  அம்மாடியோவ் ! ஜில்லுன்னு இருக்கு ;-)

 23. Subu

  /////இங்கு மனிதாபிமானம் என்பதெல்லாம் பேச்சளவில் மட்டும் தான்..இல்லையென்றல் கடினமான பொருளாதார நிலையிலும், நிறுவனத்தில் லாபத்தில் குறைவு வந்தது என – அதற்க்கு முந்தின வருடத்தை நிலையில் கொண்டு பார்க்கும்போது (நஷ்ட்டம் வரவில்லை) ஒரு வருடத்தில் நான்கு முறை வேலைக்கு ஆள் குறைப்பு செய்வார்களா என்ன தனியார் நிறுவனங்களில்…அமெரிக்கா ஒரு பேராசை பிடித்த நாடு…சாதாரண ஆட்கள் (வெள்ளந்தி?) இங்கு வெற்றிகரமான் வாழ்க்கை நடத்துவது கஷ்ட்டம்…மனிதர்களும் இயந்திரர்கள் இங்கு.

  வீடும் நாடும் நோக்கி வரும் நாட்களை எதி நோக்கி…
  வினோ.////////

  திரு ஜெயமோகன், திரு வினோ

  அடுத்த இருபதாண்டுகளில் இந்தியா சீனா அமேரிக்காவை விஞ்சு என ஒரு பேச்சு அடிபட்டதே …. அதைப்பற்றி ஒரு ஆய்வு, ஒரு கட்டுரை எழுதுங்களேன்

  அன்புடன்

 24. sankar.manicka

  //
  Is it due to some inferiority complex that Indians abroad and Tamils in India are treated like this? Is it due to Indians and Tamils in particular considered to be ‘brainy’?
  //
  இப்புடி சொல்லிச் சொல்லியே ஒடம்பு ரணகளமாகிப்போயிருச்சே!

 25. kevin jackson

  INDIA====I’ll Never Do It Again
  visit this website for more
  http://www.i-needtoknow.com/rick/update/Asia/1998_12_10.html

 26. prem

  ஜெ

  இந்த பதிவிற்கு சற்று சம்பந்தம் இல்லை என்றாலும் – இந்தியாவும் சீனாவும் ரேசில் இருக்கின்றன என்பது மட்டும் தான் ஊடகங்கள் பதிவு செய்கின்றன. உண்மையில் சீனா நம்மை விட சற்று வேகமாய் முன்னேறி கொண்டு இருக்கிறது( பொருளாதார அடிப்படையில் மட்டுமாவது) , நாம் என்ன நிலையில் உள்ளோம், என்பது போன்ற செய்திகளை பட்டவர்த்தனமாக பதிவு செய்ய ஊடகங்கள் மறந்து விட்டன என்றே தோன்றுகிறது. இப்படி தான் பல விஷயங்களில் உண்மைகளை சரியாக நம் பத்திரிகைகள் சொல்லவே இல்லை என நினைக்கிறன்.

  தன்னிலை அறியாமல், 2020 பற்றி வெறும் நம்பிக்கைகள் மட்டுமே தூவ படிருகிறது என்பது என் எண்ணம். ஒரு வேலை இந்திய அரசாங்கதிருக்கு தெரிந்திருக்கலாம், அதை கொண்டு அவர்கள் பல பிளான்கள் வைத்திருக்கலாம், அனால் இம்மாதிரியான ஒரு பெரிய இலக்கிற்கு ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் அவசியம் அல்லவா?

  இதை பற்றி தங்களின்/ மற்ற அறிஞர்களின் பதிவுகள் இருந்தால் பரிந்துரைக்கவும். இது வரை இதை பற்றி தாங்கள் எழுதவில்லை என்றால், தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்களேன் எங்களுக்காக.

 27. Prakash

  இங்கு சீனாவை பற்றி சொல்லும் பெரும்பாலனவர்களுக்கு சீன பற்றி ஏதாவது படிதிருகிரார்களா என்றே தெரியவில்லை. சீனர்கள் கடின உழைப்பாளிகள். மூளை இந்தியர் அளவுக்கு கிடையாது ( பொதுவா ). ஆனால் நாம் சோம்பேறிகள். யாரோ புண்ணியவான், சீன பசங்க நல்ல படிகிராங்கலாம் – அய்யா நான் பார்த்த, கேள்வி பட்ட வரை அமெரிக்கர்கள் பாதி ‘A grade’ இந்தியர்களும், சீனர்களும் ‘B grade’ , மிச்ச பாதி அமெரிக்கர்கள் ‘C’ grade’. என்னை பொறுத்தவரையில் சில அமெரிக்கர்கள் சீனர்களை போல கடின உழைப்பும, இந்தியர் போல நல்ல அறிவும் இருபதினாலேயே அமெரிக்கா இவ்வாறு உள்ளது.
  ஒரு உதாரணம். நான் ‘Evolutionary Computing’ என்ற கோர்ஸ்’யில் சுமார் முப்பது பேரில், என்னுடைய ப்ராஜெக்ட்’உம், ஒரு அமெரிக்கருடைய ப்ராஜெக்ட்’உம் best என்று விரிவுரையாளர் ? சொன்னார். உண்மையாக :) . ஆனால் நான் சோம்பேறித்தன பட்டு டாகுமென்ட் அடிக்க வில்லை. வெறும் ப்ரோக்ராம் மற்றும் விளக்கம் குடுத்தேன். நான் அதில் ‘B’ – அதற்கு காரணம் நான் டாகுமென்ட் குடுகாதது என்று அவரே சொன்னார்.

  சீன நெறய பொய் சொல்லும். அது சொல்றத நம்பவே முடியாது. என்னை பொறுத்த வரை சீன’வின் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை. ஒரே காரணம், அது அப்பட்டமா பொய் சொல்லுது.

 28. Prakash

  ///- அமேரிக்காவை ஜப்பானியர்கள் மிரட்டவில்லை என்றாலும் சராசரி அமேரிக்கர்களைவிட சராசரி ஜப்பானியர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர் !

  அமெரிக்காவில் சராசரி வருமானம் இந்தியர்களே அதிகம் எல்லோரையும் விட (ஜப்பானியர் உட்பட). வருமானம் மட்டும் அல்ல படிப்பிலும் மித்த எல்லா நாட்டினரையும் விட, இங்க இந்தியர்களே அதிகம் படித்தும் உள்ளனர் (வெள்ளையர்களையும் சேர்த்து).

  அதற்கு காரணம் இங்கு இந்தியர்கள் என்றால் டாக்டர், எஞ்சினீர் மற்றும் பிசினஸ் செய்பவர்கள் மட்டுமே. நான் சொன்னது என் கருத்தல்ல ‘அமெரிக்கன் இந்தியன்’ விக்கி செய்து பார்க்கவும், அதில் ஸ்டாடிஸ்டிக்ஸ் உள்ளது. இதைதான் நாம் ‘Brain Drain’ என்கிறோம்.

 29. balajivasan

  Hello JM,

  I was in USA for 2 years.

  One day I went for a hair cut in a barbershop.
  That barber who was in his sixties asked me “Do you have Golf grounds in india?”.
  Without knowing why he asked that, I said “Yes”.

  He said “USA geographically three times bigger than India but has 1/3rd of Indian Population, Then how come you have Golf grounds?.
  Is nt that a waste of space When people dont have houses, how will you have Golf clubs in cities?”

  I dont want to add anything more!

  Balaji S

 30. sivasakthi

  இந்த விஷயத்தை பற்றி எழுத்து எல்லாருக்கும்:

  இந்த நாட்டில் இருபத்தி ஆறு வருடங்களாய் வாழ்கிறேன். இங்கே படித்து கல்லூரியில் பேராசிரியை ஆகா வேலையும் செய்கிறேன்.

  சீனர்கள் இந்தியர்கள் நாற்றம் அடிக்கிறார்கள் என்று எண்ணும் அமெரிக்கர்கள் இன்னும் இருக்கிறார்கள். (இவர்களின் உணவு உருளை கிழங்கும் ரொட்டியும் பதபடுத்தபட்ட மாமிசமும்).

  நம் மசாலா வாசனையை தம்மை மறந்து இழுத்து அனுபவிக்கும் அமெரிக்கர்களும் உள்ளனர். ( இவர்கள் மாதம் ஒரு முறையேனும் இந்திய உணவை தேடி இரண்டு மணி நேரம் பயணம் செய்து உண்டு கழிப்பவர்கள்)

  அமெரிக்க பேராசை பிடித்த நாடு; ஆனால் ஒவ்வொரு அமெரிக்கரும் கிறிஸ்துமஸ் காலத்தில் தன்னால் முடிந்த அளவு ஏழைக்கு எதோ ஒரு பரிசு வழங்குவர். நாம்????!!!!

  லட்ச கணக்கிலும் கோடி கணக்கிலும் சம்பாதித்த எத்தனையோ அமெரிக்கர்கள் தம் குடும்பத்தை கவனிக்கவோ அல்லது கீழ்பட்ட மக்களுக்கு சேவை செய்யவோ அந்த செல்வதை துறந்து வந்தவர்களை நான் அறிவேன்.

  இந்தியர்கள் எல்லாம் எ க்ரேட் வாங்குபவர்கள். அபத்தம். எ க்ரேட் எல்லா நிறத்திலும் உண்டு.
  இந்தியர்கள் பாடத்தில் மட்டும் எ வாங்கலாம். வாழ்கையில் மற்ற பல விஷயங்களில் நாம் எல்லாம் பெயில் தான்.

  இந்தியர்கள் இந்தியர்கள் இல்லாத எவருடனும் பழகுவதில்லை. உண்மை.
  மேற்கிந்திய தீவுகளில் இருந்து இங்கு குடியேறிய இந்திய வம்ச வளியினரிடம் கூட நாம் பழகுவதில்லை. கருப்பு இனத்தவர் என்றால் இன்னும் விலகல்.
  நமது கல்ச்சர் சுபீரியர் தான்; அனால் நமக்கு கல்சுரல் சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளது.
  அதை விட்டு விலகி வந்தால் எல்லாரும் அடிப்படையில் ஒரே மாதிரித்தான் என்று உணர்ந்து ஒன்றாகலாம்.

 31. Prakash

  எனக்கு தெரிந்து சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் என்று ஒன்று கிடையாது. நான் பார்த்த வரையில். தாழ்வு மனப்பான்மையே சுபீரியாரிட்டி காம்ப்ளெக்சாக மாறுகின்றது. இன்னும் விளக்கமாக சொல்ல போனால், என்னை மட்டம் என்று நினைத்து விட்டாயா ? , என்னை நிராகரிகிறாயா ? நான் மேலே தான், தனி தன்மை உடையவன் என்பதை அப்பட்டமாக செய்வது தான், நான் பார்த்தவரையில் சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் . sivasakthi சொல்வதில் உடன்படுகிறேன். பல இந்தியர்கள் பயங்கர Rascist.

 32. stride

  “அமெரிக்கர்கள் பாதி ‘A grade’ இந்தியர்களும், சீனர்களும் ‘B grade’ , மிச்ச பாதி அமெரிக்கர்கள் ‘C’ grade’. ”

  பிரகாஷ் ஏதோ இந்தியர்கள் மேல் அமெரிக்கர் காட்டும் ஏளனம் என்று ஆரம்பித்து வெள்ளையர்கள் இந்தியர்கள் மீது காட்டுவதாக சொன்னதை அவர் சீனர்கள் மேல் காட்டுவது ஆச்சர்யம் தான்.

  அமெரிக்கா வரும் இந்தியர்கள் 95 சதவிகிதம் உயர்கல்விக்கு அல்லது கணிணி/மருத்துவ வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் அதிக வருமானம் ஈட்டுவது ஒன்றும் வியப்பில்லை. நண்பர் சொன்னது போல் A Grade ஆக இருக்கிறார்கள். சீனர்கள் நூறாண்டுகளுக்கு மேலாக வந்து கொண்டிருக்கிறார்கள். 1860 களில் ரயில் பாதை போடுவதற்காக கூலி வேலைக்கு கொண்டு வரப்பட்டு இன்று எல்லா விதமான பொருளாதார தளத்திலும் அவர்களை காணலாம். இன்றும் வருடம் ஆயிரக்கணாக்கான சீனாவின் ஏழை மக்கள் தங்கள் உடைமைகளை சொந்த பந்தங்களை மாஃபியாகளிடம் அடமானம் வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக அமெரிக்கா ஓடி வந்து வேலை செய்கிறார்கள். சீனாவிலிருந்து மருத்துவர்களும், மேல் படிப்புக்கும் வந்தவர்கள் நல்ல பொருளாதார நிலைமையில் இருக்கிறார்கள். கூட்டிக் கழித்தால் நண்பர் சொன்னது போல் B Grade ஆகிவிட்டனர்!

  “சீன நெறய பொய் சொல்லும். அது சொல்றத நம்பவே முடியாது. என்னை பொறுத்த வரை சீன’வின் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை. ஒரே காரணம், அது அப்பட்டமா பொய் சொல்லுது.” என்று நண்பர் சொன்னது சிரிப்பை வரவைத்தது. வெளிநாட்டில் வாழும் அனுபவம் நிறைய பேருக்கு பிராக்டிகலாக அளிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பரிணாம மாற்றத்தை நண்பர் அடைந்தால் இது போல பேச மாட்டார்.

  நன்றி

  சிவா

 33. Prakash

  நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. அமெரிக்கர்கள் பாதி ‘A grade’ (புள்ளி). இந்தியர்களும், சீனர்களும் ‘B grade’. என்று தான் சொன்னேன். அதுவும் “படிப்பில்” சராசரியாக நான் பார்த்த grade பற்றி தான் சொன்னேன் (நான் அவர்களை “Grade” பிரிக்க வில்லை). நான் சீனர்களை பற்றி மட்டமாக நினைக்க வில்லை. எனக்கு ஒரு நல்ல சீன நண்பனும் உண்டு. சீனாவை பற்றி சொன்னேன். எப்படி இந்திய beaurocracy வேறு இந்தியர்கள் வேறோ, அவ்வாறு சீனா பொய் சொல்வதை சொன்னேன். நீங்கள் சீன Stocks எப்படி உள்ளது என்று பார்த்தாலே தெரியும். அமெரிக்கா’வை தாண்டி பல Stocks’ku மார்க்கெட் காப் அதிகம். அனால் அந்த சீன கம்பெனி சீனாவை தவிர வேறு எங்காவது இருக்கிறதா என்றால் இல்லை. அமெரிக்க’வின் பணம் உலகத்தின் பணம். சீனாவின் பணம், சீன இருகின்றது என்று சொல்லும் பணம். யாரும் கேள்வி கேட்க முடியாது. அதை தான் பொய் நாடு என்று சொன்னேன்.

 34. Prakash

  முழு பூசணிகாயை சீனா சோற்றில் மறைகின்றது. பல சீனா நண்பர்கள் கனவிலும் நான் திரும்பி செல்ல மாட்டேன் என்று சொன்னதை கேட்டுள்ளேன். அங்கே ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு செல்ல Licence தேவை. சீனா அதன் அழகிய பக்கங்களை மட்டும் காட்டும். சீனாவை பற்றி கேள்வி பட்டதில், நான் இந்திய நாற்றம் அடித்தாலும், சுதந்திரமாக மூச்சு வாங்கவாது முடியும் என்று எண்ணுகிறேன். சீனர்கள் என்னை பொறுத்த வரை நம்மை போன்றே. இந்தியா நாற்றம் எடுக்க பாதி இந்தியர்கள் காரணம். அனால் சீனா செய்யும் அட்டுழியங்கள் ஒரு சிறிய Communist குரூப்’இனால். அங்கே நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் வித்யாசம்.

 35. stride

  அன்புள்ள பிரகாஷ் – உங்கள் எழுத்தை தவறாக புரிந்தமைக்கு மன்னிக்கவும். சிவா

 36. Vino Kingston

  நண்பர் GK – நான் தான் கிராமத்தில் வளர்ந்தேன் என்று சொன்னேனே.. அதனால் தான் இந்த சந்தை பொருளாதாரம் என்பது அவ்வளவாக தெரியவில்லை..மேலும் இடது சாரி பற்றுடன் வளர்ந்தவன் நான், அது எனக்கு இன்னும் அந்த சந்தை பொருளாதாரத்துக்கு ஒரு ஒவ்வாமையை அளிக்கிறது. மற்றபடி, எனக்கு அமெரிக்க மீது வெறுப்பு ஏதும் இல்லை, ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட நிலைபாடுகள் இருக்கும், அதனால் எந்த நாட்டு வழக்கை சிறந்தது என்பதி ஆராய்ச்சி செய்வது தேவையற்றது என்பது என் கருத்து..தனி நபர்கள் அவர்கள் சூழ்நிளைகேற்ற முடிவு எடுக்கட்டுமே.. எனக்கு என் பிறப்பு குறித்து மேலான எண்ணங்கள் இருக்கிறது, அதனால் நான் பிறந்து வளர்ந்த நாட்டையோ, அதன் குடி மக்களையோ ஏகபோகமாக குறை சொல்ல மாட்டேன்..(stereotyping?) . குறைகளும் நிறைகளும் எங்கும் உள்ளது..நம் மனக்கண்ணுக்கு தெரியும் வரை..

  அன்புடன்
  வினோ

 37. ramkathir

  இந்தியா, சீனா, அமெரிக்காவின் அதிக மக்கள்தொகை, இராணுவபலம் மற்றும் நிலப்பரப்பே அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு முதற்காரணமாக இருக்கலாம்.

  சீனர்களும், அமெரிக்கர்களும் அதிகப்பயணம் செய்யாதவர்கள். சராசரி அமெரிக்கர்களுக்கு உலகம் என்பது அமெரிக்கா மட்டுமே. துபாய் மற்றும் பிரபலாமான நாடுகளைக்கூட அவர்கள் அறிந்துவைத்திருப்பதில்லை.
  அவர்களுக்கு இந்தியா என்பதைவிட இந்தியர்களின் திறமை, உழைப்பு, தொன்மையான நம்மரபு நமக்களித்த பன்முகத்தன்மை ஆகியவற்றின்மீது உயர்வான எண்ணம் இருப்பதாகவே நினைக்கிறேன். நம்மக்களே நம்முடைய பலம்.

  அமெரிக்கனும், சீனனும் நம்மண்ணில் விமானநிலையத்தில் காலடி எடுத்துவைத்தவுடன் இந்திய அரசியல்வாதிகள் வெட்டிப்பெருமை பேசுபவர்கள், ஊழல்வாதிகள் என்பதை உணர்ந்துவிடுவார்கள்.
  நம் அரசியல்வாதிகளே நம்முடைய பலவீனம்.

  நமக்குத்தேவை காந்தி காமராஜ் போன்ற அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவன்.

  சிமிட்டி கட்டுமானங்களில் சீனா இந்தியாவைவிட ஒரு இருபது ஆண்டுகள் முன்னால் இருந்தாலும், அடக்குமுறை பேச்சு மற்றும் ஊடகசுதந்திரமின்மை போன்ற காரணங்களால் சீனமக்கள் கொந்தளித்து என்றாவது ஒருநாள் வெடிக்கும் சூழ்நிலை எற்படும். சீன அரசாங்கத்தாலும் தொழிற்சாலைகளாலும் சீனர்கள் நசுக்கப்படுவதால் சீனாவின் வளர்ச்சி முழுமையான் வளர்ச்சியல்ல. அது அமெரிக்காவின் ஒளிவுமறைவற்ற ஜனநாயக நிர்வகத்தினையும், பொருளாதரகட்டமைப்பினையும் நெருஙகமுடியாது. தமிழகத்தில் டெக்ஸ்டைல் ஆலைகளில் பெண்களை மாங்கல்யத்திட்டம் என்றபெயரில் அடிமைப்படுத்துவதற்கும் சீனர்கள் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்படுவதற்கும் பெரியவித்தியாசம் ஏதுமிலலை.

  கதிரேசன், ஓமன்

 38. சண்முகம்

  நான் அமெரிக்காவில் நியூயார்க்கிலும் வாஷிங்க்டனிலும் கூட பிச்சைக்காரர்களைக் கண்டிருக்கிறேன். லண்டனில் கண்டிருக்கிறேன். அவர்கள் இந்தியாவில் பிச்சைக்காரக்கள் அதிகம் என்று சொன்னால் சிரிப்பு தான் வரும்.

  அதே சமயம் வறுமையை ஒழிக்க காலம் தேவைப்பட்டாலும் ஊரை சுத்தமாக வைக்க மனம் தான் தேவை. மனமில்லாத மக்களைக் கட்டுப்படுத்த சட்டம் தேவை.

 39. vks

  இந்தியாவில் மிக வேதனை தரும் அசிங்கம் வெள்ளையருக்கு முன்னுரிமை அளித்து மற்றவர்களைப் புறம்தள்ளுவதுதான். விமான நிலையங்களில்கூட வெள்ளையர்கள் முன்னுரிமை மரியாதை அளிக்கப்படுகின்றது. அந்த சலுகை வெளிநாடு வாழ் வெள்ளையர் அல்லாதவர்களுக்கு மறுக்கப்படும். நாமே தாழ்வு மனச் சிக்கலில் இருக்கின்றோம்.
  நம்மை நாமே இரண்டாம் தர மக்கள் ஆக்குகின்றோம்.
  வாய் திறந்தால் ஆங்கிலம். அம்மா மம்மி ஆகிவிடார். உண்டால் சான்ட்விச்
  இதில் வெள்ளையனின் அவமதிப்பு மாத்திரம் எப்படிச் சுடுகிறதோ தெரியவில்லை?

Comments have been disabled.