«

»


Print this Post

ஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.


சற்றுமுன் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல். நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் மனிதர். கட்டுகளற்றவர், பயணிப்பவர். பொதுவாக எதிர்வினைகளே ஆற்றுபவரல்ல. சுருக்கமான சில வரிகள் எழுதியிருந்தார்.

அவர் சொன்னவை உண்மை என்று உணர்கிறேன். இந்த கட்டுரைகள் எனக்கு ஒருவகையான திருப்தியை அளிக்கலாம், சிக்கலான சிலவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறேன் என்று. மற்றபடி இவற்றின் பயன் மிகமிகக் குறைவே

ஏனென்றால் இந்த தளத்துக்கு ஏற்கனவே வந்து சேர்ந்தவர்கள் இயல்பாக இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்போதுகூட தங்களுக்கு தெரிந்தவையாக இவற்றை உருமாற்றிக்கொண்டே அறிகிறார்கள்

இந்த தளத்துக்கு வராதவர்கள் தங்கள் அனுபவம் மூலமே வரமுடியுமே ஒழிய சொற்கள் மூலம் அல்ல. இச்சொற்களுடன் அவர்களின் தர்க்க மனம் மோதும், விவாதிக்கும். கடைசியில் அவர்கள் விரும்பும் வழியை தேர்வு செய்வதற்கான நியாயங்களை இச்சொற்களின் ஊடாக உருவாக்கிக் கொள்வார்கள்.

ஆனாலும்  இவற்றைச் சொல்ல இது ஒரு தருணம். பிறிதொரு சந்தர்ப்பம் என்றால் வெறும் வம்புவழக்காகவே இது கொள்ளப்பட்டிருக்கும். ஒருபோதும் இந்தக் கவனத்தை ஈட்டியிருக்காது. ஏற்கனவே இந்த வகையில் யோசிக்க ஆரம்பித்திருக்கும் சிலருக்கு  அதற்கான சொற்களை இக்கட்டுரைகள் அளித்தன என்றால்கூட நல்லதே.

இதற்காக வந்த எதிர்வினைகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் பலர் எழுதியிருந்தார்கள். எதிர்வினைப்பகுதியையே மூடவேண்டும் என்றுகூட உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார்கள். காரணம் பல எதிர்வினைகள் இக்கட்டுரைகளை புரிந்துகொள்ளவோ உள்வாங்கவோ எந்த முயற்சியும் செய்யப்படாமல் தோன்றிய வாக்கில் எழுதப்பட்டவை, அவை கட்டுரைகள் உருவாக்கிய மனநிலையை சிதைக்கின்றன என்று சொன்னார்கள்

இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் எங்கும் கருத்துக்கள் பரவும் விதம் அப்படித்தான். ஏசுவின் சொற்களிலேயே ஈரநிலத்தில் விழுந்தவை சிலவே என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இச்சொற்கள் இந்த வகையில் ஒருபோதும் சொல்லப்படவேண்டியவை அல்ல என நான் பிற எவரை விடவும் அறிவேன். நேரடியான உணர்வுபூர்வமான உறவுள்ள, ஆர்வத்துடன் தன்னை திறந்து வைத்துக்கொள்ள முடிந்த, மிகச்சிலரிடம் அந்தரங்கமாக மட்டுமே பேசப்படவேண்டியவை. அப்படித்தான் என்னிடமும் இவை பேசப்பட்டன.

இப்படிச் சொல்லப்பட்டவற்றின் வழியாக இவையும்  அறிவுத்தள விவாதத்தின் ஒரு தரப்பாக மாறி குறைவுபட்டுவிட்டன என்று நன்றாக அறிவேன். அதற்காக எவரிடம் மன்னிப்பு கோரவேண்டுமோ அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனாலும் இவை ஒரு சிலருடன் அந்தரங்கமாகப் பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.

ஏனென்றால் நான் மொழியை ஆளத்தெரிந்த எழுத்தாளனும்கூட.

இங்கே முடித்துக்கொள்கிறேன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6695/

26 comments

Skip to comment form

 1. muthu prakash

  மௌனத்தில் உறைகிறது மனம் …இந்த கணத்தில் இது சாத்தியமென்றால் எப்பொழுதும் கூட சாத்தியம் என்கிறது ஆழ்மனம்…அருகிலிருப்பது போன்று தோன்றும் இலக்கு அருகே செல்ல செல்ல தொலை தூரமாகிறது…கடந்து சென்று விட வேண்டும் ,கடந்து சென்று விட வேண்டுமென்ற எண்ணத்தையும் தான்…பாதம் பணிகிறேன்

 2. ramji_yahoo

  என் பார்வையில் எல்லா வாசகர்கலுமே (பின்னூட்டம் இட்டவர்கள் ) அனைவருமே நல்ல வழியில் தான் விவாதித்து உள்ளனர், எனக்கு என்னவோ பின்னூட்டம் இட்டவர்கள் எவரும் வீண் விவாதங்களில், விதண்டா வாதம் கொண்டதாக தெரிய வில்லை.

  உலோகம், துப்பாக்கி, சயனைடு , ஆயுதம் ஏந்தல் போன்ற கட்டுரைகளில் இருந்து வாசகர்களாகிய எங்களுக்கு விடுதலை அளித்த நித்தி க்கு கோடானு கோடி நன்றிகள்.

 3. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்,
  ஆன்மிகம், போலி ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகளின் பயன் மிக மிக அதிகமே ஒழிய குறைவு அல்ல. ஞானத் தேடல் கொண்ட , சரியான தொடக்கம் இல்லாமல் திண்டாடுகின்ற பலருக்கு இவை மிக முக்கியமான எழுத்துக்கள். அந்தரங்கமாகவே நான் தங்களின் இந்த எழுத்துக்களுடன் உறவாடுகிறேன். தங்களின் சொற்களின் வழியாக ஒரு சரியான தொடக்கம் கிடைத்தது என்றால் அது மிகையல்ல.

  shankaran e r

 4. tamilsabari

  நன்றி ஜெயமோகன்,

  //இந்த கட்டுரைகள் எனக்கு ஒருவகையான திருப்தியை அளிக்கலாம், சிக்கலான சிலவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறேன் என்று. மற்றபடி இவற்றின் பயன் மிகமிகக் குறைவே//
  கடை விரித்தோம் கொள்வார் இலர் எனும் வள்ளலாரின் கருத்து ஞாபகம் வருகிறது. ஆனால் இன்று 19/20ம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மீக படைப்பாக இருக்கிறது.

  //ஆனாலும் இவை ஒரு சிலருடன் அந்தரங்கமாகப் பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.//
  அனுபவத்தில் அறிந்த சில கருத்துக்களையும், படித்து உணர முடியாத சில கருத்துக்களையும் உறுதி படுத்துவதாக அமைந்தது.

  இதைப்போன்ற கட்டுரைகள் மேலும் வரும் என எதிர்பார்க்கிறேன்.

  நன்றி

 5. jasdiaz

  The series of articles were very good and well-balanced. I do not know what the other person had said that had affected your enthusiasm (Am I right?), but it created an urge inside me ( I am a Catholic Christian) to know more about Hinduism and its various schools of thought.

  Hope to read more in coming months.

  jas

 6. seetha

  ஜெயமோகன்,

  என்னைபோன்ற தத்துவத்தில் “நிறைய படித்திருக்கிறேன் ” என்று பிம்பம் உள்ளவளுக்கு கூட சில கட்டுரையின் சில இடங்கள் மிக முக்கியமாக இருந்த்தது.நானும் ,என் வீட்டுக்காரரும் திருவண்ணாமலையில் வீடு கட்டி உள்ளோம்.ரமானஷ்ராம்திர்காக.அனான் நிறைய தடவை நான் என்னை கேட்பதுண்டு…WHat if somene were to say ramana is bogus?well, then it is my own self enquiry right? thankfully ramana never gives comfort.SO it is obivious that when we try to get rid off sorrow by astrology,godmen etc it is actually deviating from the core task? I must say i have gone behind all sorts of astrologers due to my own insecurities.I felt it was like being disciplined when i read your lines regarding how not to go to enlightened souls with our all sorts of “i want this , i want that” etc.It si nto easy to stay with pain. here i would like to refer to uloham story about pain………..

  Thank you.

 7. kalyaanan

  அன்புள்ள ஜெ

  நீங்கள் சொன்னது சரிதான். இந்தக் கட்டுரைகளை இதுவரை எதுவும் தெரியாதவர்கள் வாசித்து சரியாக புரிந்துகொள்ள முடியாது. அதேபோல நம்பிக்கைகள் இறுக்கமாக இருப்பவர்களுக்கும் புரியாது. அது எந்த நம்பிக்கையாக இருந்தாலும் சரி. மத நம்பிக்கை போலத்தான் அதற்கு எதிராக உள்ள நம்பிக்கையும். நான் நம்புவதே உறுதியானது என்று சொல்லக்கூடிய மொண்ணைத்தனம். அதேபோல நூல்களை கண்டமானிக்கு வாசித்துவிட்டு எதைக் கேட்டாலும் நூல்களைச் சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கும் உதவாது. இதே கருத்து அந்த நூலிலே இருக்கு இந்த நூலிலே வேற மாதிரி இருக்கு என்றுதான் தர்க்கம் செய்வார்கள்

  ஆனால் என்னைப்போல ஏறத்தாழ இந்த அளவிலே யோசித்து அனுபவங்கள் வழியாக வந்துகொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. இவை எங்க்கு நான் நினைத்தது சரிதான் என்ற உறுதியை அளித்தன. நான் எண்ணிய விஷயங்களை இன்னும் இன்னும் விரிவாக அறிய உதவின. அதிலும் நீங்கள் வரலாற்று ரீதியாகச் சொல்கிறீர்கள். அதேபோல சரியான சொற்களில் திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள். அது மிகவும் தெளிவான வழிகாட்டியாக இருந்தது. இந்தக்கட்டுரைகளை நான் பத்துவாட்டி படித்தேன். பிரின்ட் எடுத்து நிறைய பேருக்கு கொடுத்து படிக்கச் சொல்லி விவாதம் பண்ணினேன். எனக்கு அரிய வழிகாட்டியாக இருந்தது.

  ஆன்மீக விஷயங்களை சர்ச்சை பண்ணி தெஇந்துகொள்ள முடியாது. கவிதை மாதிரித்தான். உள்ளுணர்வை நம்பவெண்டியதுதான். ஆனால் மூடநம்பிக்கையாக ஆகவும் கூடாது. இதுதான் சிக்கலே. அதைத்தான் நுட்பமாகச் சொல்கிறீர்கள். ஒரு ஆன்மீக கருத்து சொல்லப்படும்போது மறுத்து வாதிட்டுப்பார்ப்பதைவிடவும் நம்ம சொந்த அனுபவத்தை வைத்து பார்ப்பதும் ஆழ்மனசை வைத்து பார்ப்பதும்தான் சிறந்த வழி

  நன்றி

 8. ஜெயமோகன்

  ஜெயமோகன்,

  மிகச் சரியான நேரத்தில் உங்களது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. என்னிடம் சிலர், உங்கள் தளத்திற்கு வந்து கட்டுரைகளைப் படித்த பிறகுதான் தெளிவு ஏற்பட்டது என்றனர். உங்கள் கட்டுரைகளின் அளவுக்கு விரிவாக இல்லை என்றாலும், என் எளிய புரிதலை சிறு கட்டுரையாக எழுதினேன். அது இன்றைய திண்ணை இதழில் வெளிவந்துள்ளது.

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003051&format=html

  உங்கள் கட்டுரைகளை ஒரு சிறு நூலாகவாவது வெளியிடுங்கள். நிரந்தரமாக பலருக்கும் பலனளிப்பதாக இருக்கும்.

  அன்புடன்,

  நேசகுமார்.

  அன்புள்ள நேசகுமார்

  நன்றி. இந்தக்கட்டுரைகள் தமிழினி மாத இதழின் அடுத்த இலக்கத்தில் ஒட்டுமொத்தமாக வெளிவரும்

  நீங்கள் சொல்வது நல்லதுதான். அதிகபட்சம் இவை 40 பக்கம் வரக்கூடும்- புத்தக அளவில். எவரேனும் துண்டுப்பிரசுரமாக வெளியிடலாம். யாருக்காவது பயனிருந்தால் நல்லதே

  உங்கள் கட்டுரை ப்டித்தேன். உங்களுக்கே உரிய தெளிவான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.

  ஜெயமோகன்,

 9. பிரேம் குமார்

  பன்னிரண்டு வயதிலேயே ரமணர் துறவு மேற்கொண்டார் என்கின்றனர். அவரின் அந்த இளவயதிலேயே அவருக்கு என்ன மாதிரியான மனமுதிர்வுக்கு ஆளாகியிருப்பார்? சாத்தியம் தானா? அவருடைய ஆண்மிக பயணத்திற்க்கு துணையிருந்த குரு யார்?

  ”ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப் புடைத்து.”

  என்பது போல் அவருடைய முன் ஜென்ம பலனா? அனைவருக்கும் அதுதான் விதியா?

 10. mmurali

  அன்புள்ள ஜே

  நகைச்சுவையாக.. ஒரு குறிப்பு.

  ‘ஆன்மீகம், போலி ஆன்மீகம்’ என்கிற சப்தம் ‘bond, james bond’ என்பது போல ஒலிக்கிறது.

  :)

  மிகவும் சிக்கலான தலைப்பு. சில சமயம் ஓரிடத்தில் குவியலாமென தோன்றினாலும், பல இடங்களில் மனமும் மனம் சார்ந்த இடமும் விரிகிறது.

  கருத்துக்கள் சட்டென குவிய மறுக்கிறது.

  ஆன்மீகத்தை பிரயாணம் என கொண்டால், போலி பிரயாணம் என ஒன்று உண்டா? விவாதத்தை எளிமை படுத்தும் முயற்சி அல்ல இது.

  தோன்றியதை சற்று பயிற்சி இல்லாமல் கூறியதால் கொஞ்சம் கூர்மையான வெளிப்பாடாக தோன்றியிருந்தால் மன்னிக்கவும்

  சிந்திக்க வேண்டிய எழுத்துக்களே

  அன்புடன்
  முரளி

 11. ஜெயமோகன்

  மல, அண்ணாமல என்று ஏன் சொல்லக்கூடாது? உள்ளூருக்கு வாங்க

 12. gomathi sankar

  இந்த தொடர் உதவியாக இருந்தது ஆனால் கடைசி பகுதியும் சில பின்னூட்டங்களும் திகைப்பை அளித்தது ஒரு மறைமுக செய்தியாக சொல்வதை கேள் திருப்பி பேசாதே என்பதுபோல் ….நான் அறிந்த ஜெமோ சுந்தரராமசாமி நித்யா போன்றவர்களிடம் ஓயாது விவாதித்து வளர்ந்தவர் அவரது தளத்தில் சிலர் இது வந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சில தபச்விக்களுக்கு மட்டுமே புரியும் என்பதும் அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்பவர்கள் சற்று மனவளர்ச்சி குறைந்தவர்கள் என்று பேசுவதும் புரியவில்லை ஒரு குரு என்பவர் தனது சிறிய உருவங்களையோ நகல்களையோ உருவாக்குவர் அல்ல அவரது பணி தனது மாணவர்களை அவரை தாண்டி கொண்டுவிடுவது தானே அது உபதேசம் மூலம் மட்டுமே தான் நிகழுமா விவாதம் மூலம் நிகழாதா என்ன அது ஆரோக்கியமாக அமையவேண்டும் அவ்வளவுதானே விவாதம் இல்லாத எதிர்வினைகள் வெறும் ரசிகர் கடிதங்களாகவும் குருவே சரணம் வாய் வார்த்தை மந்திரம் எனும் சிஷ்ய குழாம் ஆகவும் தான் ஆகும்

 13. M.A.Susila

  அன்பு ஜெ.எம்,
  இத் தொடர்கட்டுரையின் முன்பதிவொன்றின் எதிர்வினையில் நான் குறிப்பிட்டது போலத் தீமையில் விளைந்த நன்மைகள் இக் கட்டுரைகள்.
  இவை தமிழினியில் வெளிவருவதோடு நூல் வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா.
  காரணம், இவை பலமுறை வாசித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய அரிய
  செய்திகளின் கருவூலமாக இருப்பதுதான்.
  (பதிவுக்குப் புறம்பான பிறிதொரு கேள்வி.
  ’நாவல்’ திறனாய்வு நூல் வெளியாகிவிட்டதா.யார் வெளியீட்டாளர்.)
  எம்.ஏ.சுசீலா

 14. ஜெயமோகன்

  For your information

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41003052&format=html

  regards
  சின்ன்க்கருப்பன்

 15. ramasamy

  அன்புள்ள செயமோகன் அவர்களுக்கு,

  சின்னக் கருப்பனின் கட்டுரை மிக நன்றாக இருந்தது. நன்றி. அவரின் ஒரு வாக்கியம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. “இந்த ஒழுக்கபோலீஸ்தனத்தின் பின்னே இருப்பது தொலைக்காட்சிகள், பத்திரிக்கயாளர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள், கம்யூனிஸ தீவிரவாதிகள். ஆனால், இதே கும்பல்களின் உள்ளே நடக்கும் இவர்களது ஒழுக்க ஈனத்தனத்துக்கு ஒரு விளம்பரமும் இருக்காது” – இந்தக் கலவரத்தில் இந்து முண்ணனி என்றொரு நிறுவனமும் ஈடுபட்டதாகச் செய்திகளில் படித்தேனே – அது பொய்யா?? – இந்த விசயத்தை, இதற்கு முன் ஒரு விபசார வழக்கோடு சம்பந்தப் படுத்தி கலைச் சேவை செய்த நாளிதழான தினமலரும் மாறன் பிரதர்ஸ் நிறுவனமா??

 16. baski

  இந்தக் கட்டுரைகளுடன் அப்படியே பதஞ்சலி சூத்திரம் பற்றிய கட்டுரைகளையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். மறந்தும் போய் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அனுட்ப்பி விடாதீர்கள். பிறகு, ‘ஜெயமோகன் தளத்தை திறந்தால் விபூதி கொட்டுகிறது. மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்’ என்று உடனே பல பேர் உண்டியலைப் பக்கத்தில் வைத்து விடுவார்கள்.
  http://baski-reviews.blogspot.com

 17. Prakash

  இந்த ஆன்மீக விஷயங்களை, ஜெமோ மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்றாலும். உண்மையான ஆன்மீக குருக்களிடம் அறிந்து கொள்வதே நல்லது என நினைகிறேன். // அது தானே கஷ்டம் என்பது புரிகிறது :) //

  நான் அறிந்த ஜெமோ இந்த விடயத்தில் என்னை போன்ற குருடர். பார்வை இருக்கு என்று சிலர் உண்மையிலேயே சொல்லலாம் இல்லை பொய் சொல்லலாம். என்ன இருந்தாலும் என்னிடம் நீங்கள் கற்றால், அது ஒரு மொக்கை தனமாக தான் இருக்கும். ஏன் என்றால் நானே குருடன், உங்களுக்கு என்னால் வழி காட்ட முடியாது. இன்னொரு குருடனுக்கு பரஸ்பர sharing வேண்டுமானால் பண்ணலாம். ஜெமோ’வும் share தான் பன்னிருகார்’நு நம்பறேன். அதை வேத வாக்காக எடுக்காமல், நீங்கள் கொஞ்சம் தேடுங்கள்.

 18. kannankmb

  இந்து முன்னணி, நித்யானந்த விவகாரத்தில் ஆதரவாகவோ எதிற்ப்பாகவோ களத்தில் இறங்கவில்லை என்றே தெரிகிறது. அதன் நிறுவன அமைப்பாளரும் உண்மை வெளி வர வேண்டும் என்ற கருத்திலேயே அறிகையிட்டிருக்கிறார். ஆதரவு-ஏதிற்ப்பு போராட்டக்களத்தில் அவர்கள் இல்லை. இந்த விஷயம் குறித்து தினமணி தலையங்கம் கச்சிதமாக இருக்கிறது.”அந்த ந்டிகை செய்தது விபசாரம்; நித்யானந்தர் செய்தது அபசாரம்; ஊடகங்கள் செய்வது வியாபாரம்” இதில் கடுமையாக எதிற்கப்பட வேண்டியது எதுவென்றால் ஊடகங்களின் செய்கையே என்பது எனது தாழ்மையான கருத்து. விபசாரங்களும் அபசாரங்களும் நாடெங்கும் என்றென்றும் நடந்த்து கொண்டிருப்பதுதான்; இவற்றை எந்த அளவில் வெளிப்படுத்தலாம் என்பதில் கண்டிப்பாக வரையறை வேண்டும்; இல்லாவிட்டால் இவர்களை விபசார-அபசார பங்காளிகளாகவே கருதவேண்டும். கண்ணன், கும்பகோணம்.

 19. tdvel

  கீழை மதங்களின்ஆன்மீகத்தைபற்றிய ஒரு முழுமையான முன்னுரை.
  நீங்கள் அனைத்துபக்கங்களும் மருந்து தடவப்பட்ட தீப்பெட்டிபோல் இருக்கிறீர்கள். எப்பக்கம் நீங்கள் உரசப்பட்டாலும் எங்களுக்கு ஐயவிருளகற்றும் ஒரு தீபம் கிடைக்கிறது.
  த.துரைவேல்.

 20. gomathi sankar

  குண்டலினி பற்றி மட்டுமே நான் உங்கள் கருத்துக்கு மாறுபட்டு எழுதினேன் கோபிகிருஷ்ணா பற்றியும் மற்றவர்கள் பற்றியும் குறிப்பிட்டதன் காரணம் என்னுடைய சிறிய வாழ்வின் அனுபவங்களோடு அவர்கள் கருத்துக்கள் ஒத்துப் போவதுபோல் தோன்றியதாலும் என்னைவிட அவர்கள் அத்துறையில் விரிவாக பேசியிருக்கிறார்கள் என்பதாலும்தான் நான் அவர்களை உங்களுக்கு எதிராக நிறுத்தவில்லை I am not a name dropper also விவாதம் என்ற முறையில் அதை சொல்லவில்லைஅது சமநிலையில் உள்ளவர்களிடம் மட்டுமே நிகழ முடியும் இல்லையா ஆசிரியனிடம் மாணவன் கேட்கும் சந்தேகம் அவ்வளவே ஆனால் என்னுடைய பழைய அனுபவங்களும் ஆசிரியர்களும் வேறுமாதிரி சொல்கிறார்களே என்று சொல்லக் கூடாதா என்ன எல்லாவற்றுக்கும் வேதங்களை மேற்கோள் காட்டுவது ஒரு மரபு காலி கோப்பையாக வா என்பது ஒரு மரபு நான் முதல் மரபை சார்ந்தவனாகவே அந்த பதிவு இட்டேன் ஆனால் இங்கு வந்து ஆஹாகாரம் செய்தவர்கள் எல்லாம் அந்த அனுபவத்தளத்தை அடைந்து விட்டவர்களா என்ன அப்படியே இருந்தாலும் மருந்து என்பது நோயாளிக்கு தான் ஆரோக்கியமானவர்களுக்கு இல்லை அல்லவா

 21. Ramachandra Sarma

  கோமதி சங்கர்,
  என்ன ஆச்சு? ஜெ நீங்கள் சொல்வதை கவனித்துப்படிக்கிறார். இதற்கு ஏன் இப்படி ஃபீல் பண்ணுறீங்க? சந்தோஷப்படுங்க.

 22. gomathi sankar

  இந்த மாதிரி விஷயங்களை அறிவுப்பூர்வமாக விவாதிக்க தமிழில் இன்று வேறு வெளியே கிடையாது என்பதை உணர்கிறீர்களா மாற்றாக நாம் சாமியார்களைதான் நாடவேண்டிவரும் அவர்களோ பெரும்பாலும் நித்யானந்தர்களாக வே இருக்கிறார்கள் எல்லா ஞானிகளும் ஆரம்பத்தில் அணுக எளிதாக இருப்பார்கள் ஆனால் கொஞ்ச நாளிலேயே ஒரு ஆராதகர்களின் உள்வட்டம் உருவாகி உண்மையான தேடலுடன் வருபவர்களை புறம் தள்ளிவிடும் ஜேகே விசிறிசாமியார்வரை இது நிகழ்ந்து உள்ளது ஆராதகர்கள் சாமியார்களுக்கே சரி அறிஞர்கள் பெரும்பாலும் தன்னுடன் முரன்படுபவ்ருடனே பேசவேண்டும் ஆரோக்கியமான தளத்தில் அது நிகழும் வரை என்பது என் கருத்து[ இது நானே சொந்தமாக சிந்தித்து சொல்கிறேன் வேறு புத்தகங்களில் இருந்து அல்ல!]

 23. Ramachandra Sarma

  கோமதி சங்கர், நீங்கள் மனதை மிகவும் உழட்டிக்கொள்வதாகவே படுகிறது. ஒரு நாள் கழித்து நீங்கள் எழுதியதைப்படித்தால் உங்களுக்கே குறுநகை வரலாம். பொறுமையாக யோசித்துப் பார்க்கலாமே? ஆமாம். இந்த மாதிரி விஷயங்களை அறிவுப்பூர்வமாக விவாதிக்க தமிழில் (அதென்ன தமிழில், ஆங்கிலத்தில்? தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறீர்களா?) மட்டுமல்ல எங்குமே இடமில்லை. நம்பிக்கைகளில் திளைக்கும் இடத்தில் விவாதத்திற்கு இடமே இல்லை என்பது தெரிந்ததுதானே? முரன்படுபவருடனே பேசவேண்டும் என்பது சரிதான் ஆனால் அதை முடிவு செய்யவேண்டியது யார்? ஒன்று கவனியுங்கள், நீங்கள் கோபத்தில் இருப்பதாகப்படுகிறது. யார் உங்களிடம் கோபத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் நீங்கள் தோற்கிறீர்கள். சற்றே சமநிலையடைந்த பின் பின்னூட்டங்களை தொடரலாமே?

 24. ஜெயமோகன்

  ஆன்மீகத் தேட்டத்தில் தனிமை கொள்வதாகவும்,ஹரித்துவாரில் சந்தித்த ஆச்சாரியர்களின் ஆலோசனைப்படி தியான பீடத்தை புதிய குழுவின் வசம் விடுவதாகவும் நித்யானந்தர் அறிவித்துள்ளார்.தேவைப்படும் போது நேரில் தோன்றி உண்மைகளை உரைப்பதாகவும் சொல்லியுள்ளார். சட்டத்தின் தேடுதலுக்காளாகியுள்ள சூழலில்,எல்லோர் முன்னும் தோன்றி,தன் தரப்பு நியாயங்களை முன்வைத்துவிட்டு அஞ்ஞாத வாசம் போவதே அவர் தரப்பிலான நம்பகத்தன்மைக்கு வழிகோலும்.
  அவரை பொறுத்தவரை,அல்லது அவருக்கு ஆலோசனை சொன்ன ஆச்சாரியர்களைப் பொறுத்தவரை இது ஆன்மீகத் தேடலிலான அஞ்ஞாத வாசமாய் இருக்கலாம்.சட்டத்தையும் சமூகத்தையும் பொறுத்தவரை இது தலைமறைவு.தான் தலைமறைவாய் இருப்பதோடு மட்டுமின்றி,தன்மீது அக்கறை கொண்டு ஆலோசனை சொன்ன அந்த ஆச்சாரியர்களையும்,தேடப்படுகிற ஒருவரை தலைமறைவாய் போகத் தூண்டிய குற்றத்திற்கு ஆளாக்கி விடுவாரோ என்று அந்த ஆச்சாரியர்கள் தரப்பு கவலைப்பட வேண்டும்.இவ்வளவு அப்பாவிகளாய் இருக்கும் அந்த ஆச்சாரியர்கள் யாரென்றாவது நித்யானந்தர் சொல்லியிருக்கலாம்.
  இரண்டாவதாக புதிய நிர்வாகத்தின்கீழ் தியானபீடத்தை விடுவது பற்றியும் ஆச்சாரியர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்களாம்.தனிமனிதர்களின் தவறுகளால் நிறுவனங்கள் தடுமாறும்போது
  புதிய நிர்வாகம் பொறுப்பேற்பது புதிதல்ல.குளோபல் டிரஸ்ட் வங்கி தடுமாறிய போது ஓரியண்டல் வங்கிஉள்ளே வந்ததும்,சத்யம் நிறுவனம் தடுமாறிய போது மஹீந்திரா மனம் வைத்ததும் நிகழ்கால சாட்சியங்கள்.
  ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் கண்காணிப்புக்குக் கொண்டுவந்த பிறகு அரசின் மேற்பார்வையில் புதிய நிர்வாகக் குழு அமைய வேண்டுமே தவிர நித்யானந்தரின் நேரடி/மறைமுக
  ஆதரவாளர்களின் அரசாட்சியில் அந்த பீடம் பணிகளைத் தொடருமேயானால் ஆதாரங்கள் அழிப்பு,நிர்வாக சீர்கேடு ஆகியவை தொடர வாய்ப்புகளுண்டு.
  தன் சீடர்கள் ஆத்ம சாதனைகளைத் தொடர வேண்டும் என்று நித்யானந்தர் சொல்லியிருப்பது நியாயமானது.அத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம்.தீட்சை தருபவரைவிட தீட்சையே முக்கியம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

  ஆன்மீக மரபில்,தீட்சை தருபவரின் யோக்கியதையைப் பொறுத்தே தீட்சையின் சக்தி செயல்படும் என்பது காலங்காலமாய் நடப்பிலிருக்கும் வழக்கம்.”நிறைமொழி மாந்தர் கிளத்துபமறைமொழி” என்று இலக்கணமும்,”வாய்நல்லார் நல்ல மறையோதி”என்று இலக்கியங்களும் சொன்னது சூழ்நிலை காரணமாய்
  நித்யானந்தருக்கு மறந்திருக்கலாம்.
  அறிவுரை சொன்ன ஆச்சாரியர்களாவது நினைவூட்டியிருக்கலாம்.
  தன் சீடர்கள் இனியாயினும் உண்மையானவொரு குருவை நம்பி உபதேசம் பெற்று உய்வைத் தேடுமாறு உபதேசித்திருக்கலாம் நித்யானந்தர்.அவரை விடுங்கள் ! அந்த ஆச்சாரியர்களாவது அப்படிச் சொல்லியிருக்கலாம்.

  குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

  குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்

  குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி

  குருடும் குருடும் குழிவிழுமாறே

  என்றார் திருமூலர்.

  நித்யானந்தர்மேல் அக்கறையுள்ள அந்த ஆச்சாரியர்கள் நிச்சயமாக ஆன்மீகம் உலகில் மேம்பட வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள்.அவர்களுக்கு நித்யானந்தர் செய்ததெல்லாம் நியாயம் என்று தோன்றினால் அவர்களாவது ஊடகங்கள் முன் தோன்றி உண்மையைச் சொல்லலாம்.செய்வார்களா அந்த ஆச்சாரியர்கள்?

  MarabinMaindan Muthiah

 25. tdvel

  நித்தியானந்தர் இப்படி மக்கள் பார்வையிலிருந்து மறைந்துபோவதே நல்லதல்லவா. வலுவான சட்ட மீறல் எதுவும் அவர் செய்ததாய் தெரியவில்லை.
  அவரின் மிகப்பெரிய சருக்கலே அவருக்கான தண்டனையாய் ஆனபிறகு மேலும் மேலும் அவரை கீழ்மைப்படுத்துவதில் யாருக்கு என்ன நன்மை. தெரிந்தோ தெரியாமலோ அவரால் ஆன்மீகத்தின்பால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் மனத்தள்ர்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும். ஞானமார்க்கத்தின் வழி கத்தியின் மேல் நடப்பதற்கு சமம் என்னும்போது அதில் வழுக்கிவிழுந்து அடியும்பட்டுக்கொண்ட ஒருவரை மேலும் போட்டுத்தாக்குவது தேவையில்லை என நான் நினக்கிறேன்.

Comments have been disabled.