இனிய ஜெயம்,
ஒரு தொடக்கம் கட்டுரை வாசித்தேன்
அறிமுகமான நாள் தொட்டு இலக்கிய வட்டத்தில் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பவர் என் நண்பர் ரா கி.
அவரது ‘மழலை’ மொழிக்கு எப்போதுமே நான் அடிமை. இரவுகளில் உறங்காமல் ‘விஷ்ணுபுறம்’ குறித்து பேசியபடி கோவை வீதிகளில் அலைந்தது இன்று கனவு போல இருக்கிறது. [கோவையில் ஏன் இத்தனை பேக்கரி? கோவை வாசிகள் அனைவரும் மூன்று வேளையும் பன்னும் பொறையும் உண்டே உயிர் வளர்கிரார்களா என்ன?]
எனக்கு எப்போதுமே பிடித்த விளையாட்டு, ராகி பிசியாக ‘இரும்படித்துக்’ கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு தொலைபேசி நான் இப்போது எங்கு ‘பயணித்துக்’ கொண்டிருக்கிறேன் என வர்ணிப்பது.
பேசி முடித்ததும் இரும்பு இன்னும் பலமாக அறைபடும் ஒலி கேட்கும்.
‘யாருக்கும் சொல்லாமல்’ இருவரும் ஒரு பயணம் செல்லலாம் என திட்டம். பார்ப்போம்.
கடலூர் சீனு