முன்விலை- கடிதம்

நான் பகிரப்போவது உங்களுக்குத்தெரிந்ததே. தமிழைக்காட்டிலும் ஆங்கிலப்பதிப்புத் துறையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மெய்ப்பு நோக்குவது, பிரதிமேம்படுத்துவது, அட்டைவடிவமைப்பது போன்ற வேலைகளுக்கு ஊதியம் உண்டு. ஸ்திரமான பதிப்பகங்களில் entry level editor or rookie editors அவர்கள் பட்டமேற்படிப்பு முடித்து, நேர்முகத்தில் நடத்தப்படும் மொழி ஆளுமை மற்றும் இன்ன பிற தேர்வுகளில் வெற்றி பெற்றால். ஆரம்ப ஊதியம் 25 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கும். அதிலும் பல்கலைக்கழகங்களின் பதிப்பகங்களில் ஊதியம் (ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி மற்றும் கேம்ப்ரிஜ்) தனியார் பதிப்பகங்களை விட அதிகம்.
ஒரு 15-20 வருட அனுபவம் உள்ள எடிட்டரின் மாத ஊதியமும் மற்ற perks ம் சில லட்சங்களில்.

ஆனால் எழுத்து சார்ந்த பிற துறைகளின் ஆரம்ப ஊதியத்தை ஒப்பிட்டால் பதிப்பக துறையின் ஊதியம் மிக குறைவு. உதாரணத்துக்கு eLearning துறையின் writer ன் ஆரம்ப ஊதியம் 35-40 ஆயிரம் வரை கூட உண்டு – அதுவும் மென் பொருள் மற்றும் BFSI எனப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் learning division ஆக இருந்தால். என்ன ஒன்று, பணம் கிடைக்கும். ஆனால் உங்கள் மொழி பல்வேறு template களால் தட்டையாக்கப்படும். மொழியின் அனைத்து அழகுகளையும் – frills, bells, whistles – அனைத்தையும் மறந்து எழுத வேண்டும் என்பது thumb rule. Too British, a style மாற்றிக்கொள்ள வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப்பட்டது சுய அனுபவம். core publishing என்று சொல்லப்படும் இலக்கிய படைப்புகளை வெளியிடும் நிறுவனங்களில் இருக்கும் editors ன் இகழ்வான புன்னகையை – கிடைக்கும் பணம் ஈடு செய்யும். சிலர் பணத்துக்கு elearning, business writing போன்ற துறைகளில் பணி செய்து கொண்டு மொழியின் மீதான காதலை மற்றும் sanity ஐ தக்க வைத்துக்கொள்ள வேறு இதழ்களில் பணத்தை பெரிது படுத்தாமல் எழுதுவார்கள்/freelance செய்வார்கள். என்னுடைய sanity க்கு இப்போதைக்கு நான் நம்புவது வெண்முரசு.

ஆனால் ஒன்று. இங்கும் என் காதில் அடிக்கடி விழுவது – ஒரு எடிட்டரின் முக்கியமான!? வேலை costing and being cost-conscious என்பதே. The making of … (புத்தக தலைப்பு) என்று காணொளி, ஆசிரியருடன் நேர்காணல், author reading போன்றவை கொஞ்சம் எல்லை மீறும். சில சமயம் எழுத்தாளர் ஒன்றுமே இல்லையோ என்ற அளவுக்கு சில பதிப்பகங்களின் மார்க்கெட்டிங் எரிச்சல் அடைய வைக்கும். A book is like a soap box. If there can be a business model for a soap box, there can be a business model for a book’ என்பது ஆங்கில பதிப்பகங்களின் மார்க்கெட்டிங் சித்தர்களின் அசிங்கமான, தேய்ந்து போன எரிச்சலூட்டும்சொலவடை.

அன்புடன்
மங்கை

முன்விலையின் மெய்விலை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் எனும் கவிஞர்