அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவனைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல.
லூர்து சேவியர்
அன்புள்ள லூர்து
இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்]
1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். மகாபாரதகால அரசியல் அப்படியே அங்கே இன்றுமிருப்பதை கண்டேன்
ஜெ