அதே மொழி

சார்,
சுந்தர ராமசாமி – குரல் கேட்டேன். எனக்கும் இதுவே அவரது குரல் முதல் முறை கேட்கிறேன். அவரது குரல் நான் மிக எதிர்பார்த்திருந்த மாதிரி தான் இருந்தது. நான் கிட்டத்தட்ட அது உங்கள் குரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றமில்லை. சிறு மாற்றங்களுடன் அவரது பேசு முறை உங்களது பேசுமுறையோடு மிகவும் ஒத்துப்போகிறது. என்ன, நீங்கள் பேசுவது வேறு விஷயங்கள். :)

ஒருவேளை இது நாகர்கோவிலின், திருவிதாங்கூரின் பொது மொழியாக, அக்ஸண்டாக இருகக்கூடும். ஆனால் அவரது குரலில், பேசும் விதத்தில், கைகள் அசைப்பதில் உங்களை நினைவுபடுத்தும் பாவங்கள் அதிகம். உடல்மொழியும் பிராந்தியம் சார்ந்ததாகவே இருக்கக்கூடும் போலும்.

நன்றி
ராம்

அன்புள்ள ராம்

இளமையில் நாம் எவருடன் நெருக்கமாக அடையாளப்படுத்திக்கொள்கிறோமோ அவரது உடல்மொழி நமக்கு வந்துவிடும். அத்துடன் நம் தந்தையின் உடல்மொழியும் இருக்கும்.

என்னைவிட யுவன் சந்திரசேகரின் பேச்சிலும் பாவனைகளிலும் சுரா இன்னமும் துல்லியமாக வெளிப்படுகிறார் என்று தோன்றுகிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45
அடுத்த கட்டுரைஇனிப்பு