«

»


Print this Post

ஆயிரத்தில் ஒருவன், ராமச்சந்திரன்


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சம்பந்தமாக இணையத்தில் ஏராளமான விவாதங்கள் நடந்தன. இணையத்தில் எழுதுபவர்களின் பொதுவான வரலாற்றுப்புரிதல் ரசனை ஆகியவற்றின் குறுகலான எல்லையைக் காட்டுவனவாகவே அந்த விவாதங்கள் இருந்தன. எனக்கு தனிப்பட்ட முறையில் பல கடிதங்கள். அவற்றுக்கு விரிவாக பதிலளிக்க முடியாமல் பல வேலைகள், பயணங்கள்

அனேகமாக அந்த வினாக்கள் அனைத்துக்குமே ஆணித்தரமாக பதில் சொல்லியிருக்கிறார் வரலாற்றாய்வாளார் ராமச்சந்திரன். சொல்வனம் இதழில் அவரது பேட்டி விளக்கமானதும் தெளிவானதுமாக உள்ளது

சுட்டி

http://solvanam.com/?p=6441

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6615

4 comments

Skip to comment form

 1. chandanaar

  அன்புள்ள ஜெ..
  எஸ். ராமச்சந்திரன் சொல்லும் சரித்திர ஆதாரங்கள் ஆய்வுக்குரியது தான் என்றாலும் , அந்த படத்தின் மீதான எதிர்வினைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது திரைக்கதையின் அடிப்படை கோளாறும் எல்லோரும் நன்கு அறிந்த ஆங்கில படங்களின் காட்சிகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் எடுத்தாண்டதும் தான். தவிரவும் இது போன்ற சரித்திர பின்னணி கொண்ட ஆங்கில படங்களில் தெளிவான திட்டமிடல் இருக்கும். (உண்மையா கற்பனையா என்பது வேறு விஷயம்)கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணநலன்களை உறுதியாக தீர்மானித்து விட்டாலே திரைக்கதை தன்போக்கில் சிறப்பாக அமைந்துவிடும் என்று படித்ததுண்டு. இப்படத்தின் மிகப்பெரிய கோளாறே கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்க படாதது தான். சோழராஜா திடீரென குத்து ஸ்டைலில் நடனம் ஆடுவது, ஆரம்பம் முதல் டாப் லெஸ்சாக வரும் நாயகனின் முதுகில் வரையப்பட்ட புலி சின்னம் அவரை பின்னிருந்து அணைத்துக்கொள்ளும் முக்கிய பாத்திரமான ரீமா முதல் ரசிகர்கள் வரை யார் கண்ணிலும் படாத அதிசயமும் (!) படத்தின் மற்ற பின்னணி மற்றும் ஆய்வுகளை கேள்விக்குள்ளாக்கின. சரித்திர உண்மை தெரிந்தவரான ராமச்சந்திரன் சொல்லியிருந்தாலும் படத்தின் இயக்குனர் கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே. கதையாசிரியர் , திரைக்கதையாசிரியர் என்று தனிப்பட்டு இயங்க முடியாத தமிழ் சினிமா சூழலில் வரலாற்று பின்னணியில் நல்ல திரைப்படம் வருவது என்பது கஷ்டமான விஷயம் தான்.

 2. kuppan_yahoo

  அன்புள்ள ஜெமோ

  எஸ் ராமச்சந்திரன் சொல்லும் கருத்துக்கள் முழுமையாக இல்லை, அவர் சோழ கால தமிழ் சொற்கள், தமிழ் உச்சரிப்பு குறித்தே அதிகம் பேசுகிறார்.

  அந்த திரைப்படத்தில் வந்த தமிழ் குறித்து எனக்கு கவலை இல்லை. அது சோழர் கால் தமிழாக இருக்கட்டும், அல்லது சென்னை ராயபுரம் , நெல்லை, மதுரை, நாஞ்சில் தமிழாக இருக்கட்டும், அது முக்கியம் இல்லை எனக்கு.

  அந்த கட்டுரையில் உள்ளது போல, பொன்னியின் செல்வன், ராமாயணம் , மகா பாரதம் , சிலப்பதிகாரம் போன்ற புனைவு கதைகளில் உள்ள ஈர்ப்பு ஆர்வம் ஏன் மக்களுக்கு இந்த ஆயிரத்தில் ஒருவன் புனைவிற்கு இல்லை.
  காரணம் திரைக்கதையில் ஒரு கோர்வை, ஒழுங்கு அமைப்பு இல்லை.

 3. V.Ganesh

  பொதுவாக ஜெயமோகன் அவர்கள் தான் மிக காரசாரமாக வரலாறை துணிவாக கூறும் ஒரே ஆள் என்று நினைத்தேன். ஆனால் திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்களும்
  ” சொல்வனம் கட்டுரையில் ……….
  இவ்வாறு உரிமை கோருகின்றவர்கள், எதிர்த் தரப்பினருடைய கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதோ, எதிர்த் தரப்பினரின் சித்திரிப்பே திரிப்பு வேலைதான் என்று கூறுவதோ, வந்தேறிகள் என்பதுபோல வசைபாடுவதோ நியாயமாகாது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதைக்கூடச் சீரணித்துக் கொண்டிருக்கும் நாம் கேளிக்கை ஊடகமான திரைப்படத்தில் உள்ள வரலாற்றுச் சித்திரிப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுவதும் சரியானதுதாமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

  துணிவாக இருக்கிறார். ஆல் தி பெஸ்ட்.

 4. Ramachandra Sarma

  ராமச்சந்திரன் அவர்கள் கூறும் கருத்து பெரும்பாலும் ஒத்துக்கொள்ளக்கூடியது போலத்தெரிகின்றது. , தமிழகத்தின் வரலாற்றை ஆராய்வதாகப் பலர் கிளம்பியிருக்கிறார்கள். தமிழகத்தின் “வரலாறுகள்” பெரும்பாலும் கோடிட்ட இடத்தை நிறப்புவது போன்ற ஒரு முயற்சியாகவே எனக்குத்தோன்றுகிறது. ஒரு திட்டவட்டமான தென்னாட்டின் வரலாறாக ஒன்றைத்தொகுப்பது என்பது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். பழைய கல்வெட்டுக்கள் அனைத்துமே படிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இன்னும் நிறைய செய்தாகவேண்டிய நிலையிலேயே இருக்கிறது என்றே தோன்றுகிறது. பெரும்பாலும் அகழ்வாராய்ச்சிகள் நின்றுபோய்விட்டது என்றே சொல்லலாம். இப்போதைய வரலாற்று ஆராய்ச்சிகள் எல்லாம் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட, அல்லது கிடைத்த ஒருசில கல்வெட்டு ஆவணங்களையும், தாமிர பத்திரங்களையும் கொண்டு செய்யப்படும் ஊகங்களே என்று நம்புகிறேன். இதில் இருக்கும் இடைவெளிகளுக்கு நாம் சங்கப்பாடல்கள், கவிதைகளிலிருந்து தேவையானவற்றை இட்டு நிறப்புகிறோம். மேலும், அதீதமான பெருமித உணர்வுடன் இவற்றை அணுகும்போது, நம் பக்கத்து தவறுகளை மறைப்பது அல்லது நிராகரிப்பது என்பது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு செய்யும்போது உண்மையான வரலாறு என்பதே ஒரு நகைச்சுவையான விஷயமாகிவிடுகிறது. என் தமிழாசிரியர் ஒருவர் சொல்வார், புராணம் என்றால் பொய், பெரியபுராணம் என்றால் பெரிய பொய் அவ்வளவுதான் என்று. அதுபோல தென் தமிழ்நாட்டு அறிவியல்/ஆதார பூர்வமான வரலாற்று ஆராய்ச்சி என்றால் அது இன்னும் பெரியது. கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளையே பார்த்திருந்தால் வரலாற்றை மாற்றிவிடுவது எவ்வளவு எளிது என்பது மிகத்தெளிவு. வரலாறு என்பதே ஆவணப்படுத்தப்பட்ட பொய்கள்தான் என்ற கருத்தே மிகுகிறது.

Comments have been disabled.