பயணம்

இன்று, 18- 2- 2010 காலையில் திருவனந்தபுரத்தில்  இருந்து ஒரு சிறு நண்பர் குழுவும் நானும் ஒரு பயணம் தொடங்குகிறோம். ஒரு திரைப்படத்துக்கான இடத்தேர்வு என்று முகாந்திரம். ஆனால் சும்மா பேசியபடியே செல்வதே முதல் நோக்கம்.

கேரளக்கடற்கரை வழியாக கடலும் காடும் சந்திக்கும் இடங்களையும் சதுப்புகளையும் மட்டும் பார்த்துக்கொண்டு செல்வதாக இருக்கிறோம். கோவா தாண்டி ரத்னகிரி  செல்ல திட்டம். பத்துநாட்கள்

ஜெ