இன்று மதியம் முன்றரை மணிக்கு சென்னையில் ஞாநி அவர்கள் நடத்தும் கேனி இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். என்னுடைய நூல்கள் இங்கே விற்பனைக்கும் வைக்கபப்டும் என்று ஞாநி குறிப்பிட்டிருக்கிறார்
பிப்ரவரி 14 [இரண்டாவது ஞாயிறு] அன்று நிகழ்ச்சி. நேரம் மதியம் 3.30
“14 ஞாயிறு மதியம் சரியாக 3.30க்குநிகழ்ச்சியைத்தொடங்கி 6.30க்கு முடிப்போம். முதலில் உங்கள் பேச்சு, பின்னர் கலந்துரையாடல். பொதுவாக சர்ச்சைகள், அக்கப்போர்கள் முதலியவற்றை அனுமதிப்பதில்லை. இலக்கியம், சமூகம் சார்ந்து பேசவே பார்வையாளரை ஊக்குவிக்கிறோம். எந்தத்துறை பற்றியும் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் அவை தரம் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்பதை இதுவரை வெற்றிகரமாக அடைந்திருக்கிறோம்”
என்று அறிவிக்கிறார் ஞாநி. வாசகர்களை வருக என வரவேற்கிறேன்
விலாசம்: 39 அழகிரிசாமி தெரு கலைஞர் கருணநிதி நகர். சென்னை