«

»


Print this Post

கேணி கூட்டம்


இன்று மதியம் முன்றரை மணிக்கு சென்னையில் ஞாநி அவர்கள் நடத்தும் கேனி இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். என்னுடைய நூல்கள் இங்கே விற்பனைக்கும் வைக்கபப்டும் என்று ஞாநி குறிப்பிட்டிருக்கிறார்

பிப்ரவரி 14 [இரண்டாவது ஞாயிறு] அன்று நிகழ்ச்சி. நேரம் மதியம் 3.30

“14 ஞாயிறு மதியம் சரியாக 3.30க்குநிகழ்ச்சியைத்தொடங்கி 6.30க்கு முடிப்போம். முதலில் உங்கள் பேச்சு, பின்னர் கலந்துரையாடல். பொதுவாக சர்ச்சைகள், அக்கப்போர்கள் முதலியவற்றை அனுமதிப்பதில்லை. இலக்கியம், சமூகம் சார்ந்து பேசவே பார்வையாளரை ஊக்குவிக்கிறோம்.  எந்தத்துறை பற்றியும் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் அவை தரம் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்பதை இதுவரை வெற்றிகரமாக அடைந்திருக்கிறோம்”

என்று அறிவிக்கிறார் ஞாநி.  வாசகர்களை வருக என வரவேற்கிறேன்

விலாசம்: 39 அழகிரிசாமி தெரு கலைஞர் கருணநிதி நகர். சென்னை

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6542

6 comments

Skip to comment form

 1. nasser

  வணக்கம் சார்,

  பத்து நிமிடத்திற்கு முன்னாடி தான் தேர்த்தெடுக்கப்பட்ட தலைப்பு தான் என்றாலும் உங்க பேச்சு inspired me lot ..Thanks for coming..

  நாசர்

 2. aganazhigai

  அன்புள்ள ஜெயமோகன்,

  கேணி இலக்கிய சந்திப்பில் உங்களுடைய் பேச்சின் பொருள் முக்கியமானது. விவாதமும் அதையொட்டிய தீர்மானம் அல்லது வேறோர் தளத்திற்கு ஒரு கருத்தை கொண்டு செல்லுதல் என்பது நடப்பதற்கான சூழலே இல்லாமல் போனதற்கு யார் காரணம்? சிந்தனையாளர்களின் போக்கு பெரும்பாலும், ஒரு கருத்தைப் பற்றினால், அவர்களுக்கு பிடித்து விட்டால் அதை மறுப்பதற்கான வாய்ப்பிற்கு இடம் கொடுப்பதில்லை. சார்ந்தே வாழப்பழகிய பொதுப்புத்தியுடன் அவர் சொல்கிறார் சரியாகத்தான் இருக்கும் என்ற முற்சாய்வுடன்தான் எதிர்கருத்துகளை அணுக நேரிடுகிறது. கடந்த பல ஆண்டுகளாக புதிய தத்துவம் எதுவும் உருவாகாத சூழலுக்கு இதுவே காரணம். மார்க்சியம் பேசும் பலரும் மார்க்சியத்தை தாண்டி வெளியே வருவதில்லை, வரவும் விரும்புவதில்லை. மார்க்சியத்தை ஒரு உதாரணத்திற்குதான் கூறுகிறேன். எல்லா தத்துவங்களின் நிலையும் இதுதான். ஆளுமைகளின் கருத்துக்கு மாற்றுக்கருத்து கூற முனைந்தால் போட்டு மரண அடியாக அவ்வாளுமையின் ஆதரவு குவிகிறது.. இதில் விவாதத்திற்கான இடம் எங்குமே முக்கியத்துவமில்லாமல் போகிறது. நீங்கள் கூறியது போல விவாதம் அதையொட்டிய உரையாடலும் விருப்பு வெறுப்பற்று, முன்முடிவுகளற்று அணுகும் காலம் வராத வரை தத்துவங்களின் வளர்ச்சியும் நீட்சியும் சாத்தியமில்லாத ஒன்று என்றே கருதுகிறேன்.
  ௦௦௦௦..
  நான் உங்களிடம் நுண்ணுணர்வு மற்றும் ரசனை சார்ந்தெழும் அறங்கள் பற்றிய மற்றொரு கேள்வி (அ) ஐயத்தை கேட்டிருந்தேன். நுண்ணுணர்வும் ரசனையும் ஏற்படுத்தும் அறம் என்ற ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும். நான் ஜெயமோகன் அல்லது வேறொரு ஆளுமையை தொடர்ந்து வாசிக்கிறேன் என்றால் அது ரசனை ஏற்படுத்திய அறம். குறிப்பிட்ட ஆளுமையின்பால் ஈர்க்கப்பட்டு தனக்குத்தானே அறங்களை உருவாக்கிக் கொள்வதுதான் அந்த ரசனையின் நீட்சி. இதுபற்றி நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுங்கள்.

  – பொன்.வாசுதேவன் (அகநாழிகை)

 3. Dondu1946

  கேணி மீட்டிங் பற்றி எனது பதிவை பார்க்கவும்.
  http://dondu.blogspot.com/2010/02/14022010.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 4. V.Ganesh

  மயிலாப்பூர் இருந்து பேருந்தில் சென்ற நான் இடம் தெரியாது உதயம் அரங்குkகருகில் இறங்கி நட…. தேன். முதலில் Central Government quarters பிறகு PTR சாலை பிறகு லட்சுமணசாமி சாலை என்று ஜெயமோகன் அவர்கள் புண்ணியத்தால் ஒரு வாக்கிங். நான் செல்லும் பொழுது மணி நான்கு.
  நான் இரு கேள்விகள் கேட்டேன். தரமான விவாதத்திற்கு அரசின் பங்களிப்போ அல்லது அரசு உதவியோ வேண்டு என்பது. ஜெயமோகன் அது தேவையில்லை இன்றைய விவாதம் மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு அதை நாளைய அரசு நடை படுத்தலாம் என்றார்.
  அடுத்த கேள்வி time management பற்றி . ஜெயமோகன் முதலில் தொலைகாட்சி பார்ப்பதை நிறுத்தவேண்டும் என்றும கூறினார். ( நானும் சேதிகள் தவிர டிவி பார்ப்பது கிடையாது.)
  ஜெயமோகன் பேச்சில் குமரி மாவட்ட வாசனை இருந்தது. நம்ம ஊரு ஆளு என்று பெருமையாகவும் இருந்தது. ( உரிமை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம் அல்லவே). அடிக்கடி prem பற்றி குறிப்பிட்டார்.
  இரு புத்தககங்கள் வாங்கினேன் அதில் ஒன்று ரப்பர். மீசை வைத்த இளைஞன், முகத்தில் தெரியும் ஒரு மலையாளkகளை. typical குமரி முகம். முதல் நாவல் உழைப்பு இருக்கும். இனிமேல் தான் படிக்க வேண்டும். authograph வாங்கிக்கொண்டேன். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்த ஒரு கூட்டம். இன்னும் எழுதலாம்.
  ஞானி அவர்களுக்கு நன்றி. பெரிய அழகான கேணி உடைய வீடு. அரங்கு புல். எப்பொழுதுமே. இப்படியா அல்லது ஜெயமோகன் அழைப்பா என்பது தெரியவில்லை.

 5. Ramachandra Sarma

  புகைப்படங்கள் எதுவும் இல்லையா?

 6. kuppan_yahoo

  ஞானி மற்றும் ஜெமோ விற்கு ஒரு வேண்டுகோள், இந்த கேணி கூட்டம் குறித்த விழிப்புணர்வை கல்லூரிகளில், மேல் நிலைப் பள்ளிகளில் உருவாக்க வேண்டும்.

  ஏனென்றால் கல்லூரிப் பருவத்தில் ஒருவனுக்கு இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டால் அது அவனை நல்வழிப் படுத்தும், உணர்ச்சி மேலாண்மைக்கும் (emotional management) உதவியாக இருக்கும்.

  நான் லயோல கலூரி ரேக்டரிடம் இது குறித்து சொல்லி உள்ளேன்.

Comments have been disabled.