வெண்முரசு நூல்கள் விழாவில்

நண்பர்களுக்கு,

வெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

Mudar-kanal-600x600
முதற்கனல் 290 ரூபாய் விலை

Mazhai-padal-paper-pack-600x600

மழைப்பாடல் ரூ 840

vannakkadal

வண்ணக்கடல் ரூ 800

index

நீலம் ரூ 500

இவற்றில் முதற்கனல் தவிர்த்த பிற நூல்களில் செம்பதிப்புகள் குறைந்த பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை பதிப்பகம் யுகனிடம் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம். மழைபபடல் 1300 ரூபாய். வண்ணக்கடல் 1200 ரூபாய். நீலம் செம்பதிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

செம்பதிப்பு முன்பதிவுசெய்தவர்களுக்கு பிரதிகளை நான் கையெழுத்திட்டு வழங்கவேண்டும். நூல் இன்றுதான் அச்சில் இருந்து வந்துள்ளது. நான் கையெழுத்திடமுடியாத அளவுக்கு வேலைகள். 10 அன்று கையெழுத்திடுவேன். 11 அன்று தபாலில் அனுப்பப்பட்டுவிடும்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்
அடுத்த கட்டுரைகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து