«

»


Print this Post

இளையராஜா,ஷாஜி…கடிதங்கள்


அன்புள்ள ஜெ

இளையராஜாவைப்பற்றிய உங்கள் கட்டுரை கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்று நினைக்கிறேன். சில சில்லறை தவறுகளும் இருக்கின்றன. இளையராஜாவைப்பற்றி நீங்கள் சொன்னவற்றை யோசிக்கலாம். ஆனால் அவரே எல்லாம் என்று சொல்வதுபோல இருக்கிறது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ராமச்சந்திரா

பெங்களூர்

அன்புள்ள ராமச்சந்திரா,

உண்மைதான். பல சொற்றொடர்களில் மிகைவேகம் இருக்கிறது என்பது உண்மை — ஆனால் அது ஓர் எதிர்வினையாக உருவானது. இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கும் இளையராஜா பற்றிய ‘நஸ்டால்ஜியா’ உண்டு. நான் ‘அறிவுபூர்வமாக’ அணுகவுமில்லை.

என் கட்டுரையில் சங்கீதமல்லாத விஷயங்களை நான் சொல்லும் இடங்களே முக்கியமானவை என்பது என் எண்ணம் – அவையே என் கருத்துக்கள்.

மேலும் நான் பலமுறை சொல்வதுபோல எனக்கு இசை குறித்த கவனமும் ஆர்வமும் பெரிதாக இல்லை. என்னுடைய மனதில் உள்ள தகவல்கள் பல பலசமயம் தப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் திரையிசையை அல்லது வேறு ஏதேனும் இசையைக் கூர்ந்து கவனித்தவனல்ல. சொல்லப்போனால் 80களில்தான் நான் தமிழ்ச் சினிமாவையே கூர்ந்து பார்த்திருக்கிறேன். அதெல்லாம்கூட நினைவிலேயே உள்ளன.

என்னுடைய எதிர்வினை இந்த எல்லைக்குள்தான். நான் கேட்டு அறிந்த நிபுணர்களின் கருத்துக்களையே சொல்லியிருக்கிறேன். எனக்குப்புரிந்தவரை சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான். பாதிவிஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன என்று தெரிகிறது. ஒன்றும்செய்யமுடியாது.

ஜெ

*

அன்புள்ள ஜெ

இளையராஜாவைப்பற்றிய இந்த விவாதத்தில் சில முக்கியமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். 1. இளையராஜா தமிழில் யதார்த்த சினிமா வருவதற்கு ஆற்றிய பங்களிப்பு. 2 இளையராஜாவின் சங்கீதம் தமிழில் சினிமாமொழி மேம்படுவதற்கு அளித்த பங்களிப்பு. இதைப்பற்றிய விவாதம் நிகழும் என்று நினைக்கிறேன். நன்றி

சிவராம்

அன்புள்ள சிவராம்,

அப்படி ஏதும் நிகழும் என நான் நினைக்கவில்லை. இது முற்றிலும் ‘ஈகோ’ சம்பந்தமான விஷயம். ஆகவே மட்டம்தட்டும் முயற்சிகள் மட்டுமே நிகழும். நான் என் தரப்பை பதிவுசெய்து வைக்கிறேன், அவ்வளவுதான். கொஞ்சநாள் திட்டி மட்டம்தட்டி எதையாவது எழுதி ஓய்வார்கள். இதுவும் சிலர் மனதில் இருக்கட்டுமே.

ஜெ

*

அன்புள்ள ஜெமமோகன்

ஷாஜியுடன் சண்டையா? செய்தி படித்தேன்

ஜெயலட்சுமி

அன்புள்ள ஜெயலட்சுமி

நள்ளிரவில் சேட்டில் வந்து என்ன கேள்வி? ‘செய்தி’ எங்கே படித்தீர்கள்?

காலையில்தான் ஷாஜியிடம் இக்கட்டுரை பற்றி பேசினேன். மும்பையில் ஒரு ரிக்கார்டிங்கில் இருக்கிறார். அவரிடம் பலர் போனிலே ஜெயமோகன் உங்களை போட்டுத்தாக்கிவிட்டாரே என்று துக்கம் கேட்டிருக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது சரி. இதுவே ஒரு தமிழக நண்பர் என்றால் உறவு முறிந்ததுமாதிரித்தான். ‘மலையாளத்தான்’களுக்கு நடுவே எல்லாமே ‘நேரம்போக்கு’தான். ஷாஜிக்கு நன்றாகவே சிரிக்கத் தெரியும்.

ஜெ

*

ஜெ,

ஷாஜிக்கு இசை தெரியாது என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் அவர் கட்டுரைகளை ஏன் நீங்கள் மொழியாக்கம் செய்தீர்கள்?

கணேசன் மாம்பாடி

அன்புள்ள கணேசன்

சுத்தம். என்ன ஒரு தெளிவான புரிதல்!

தனக்கு கர்நாடகசங்கீதத்தின் ராகநுட்பங்கள் அல்லது மேலைச்செவ்வியலின் அமைப்புநுட்பங்கள் தெரியும் என ஷாஜி எங்குமே சொல்லமாட்டார்.அந்த அளவுக்கு நேர்மை அவருக்கு உண்டு.

ஷாஜியின் இசையறிதல் இரு தளங்களைச் சேர்ந்தது. ஒன்று, மேலைநாட்டு பாப் இசை. அந்த தளத்தில் அவரளவுக்கு விஷயமறிந்தவர்கள் இங்கே மிகமிகச் சொற்பம். 2. இந்தியதிரையிசை.  ஆறு இந்திய மொழிகள் அறிந்தவர் என்ற முறையில் இந்திய திரையிசையின் எல்லா முகங்களையும் அவர் பலகாலமாகக் கூர்ந்து கவனித்து வருகிறார்

இதற்கு அப்பால் , மக்னா சவுண்ட் நிறுவனத்தின் இசைவெளியீட்டாளராக இருந்தவர் என்ற முறையில் ஒலிப்பதிவு, இசைக்கோர்ப்பு, குரல்சேர்ப்பு,சுருதி முதலிய தொழில்நுட்பங்களைப்பற்றிய துல்லியமான ஞானம் அவரிடம் உண்டு. 

இந்த தளங்களில் அவருடன் சாதாரணமாக ஒப்பிடக்கூட தமிழில் எழுதும் எவரும் இல்லை. அதற்கு முன்பு தமிழில் மேலைநாட்டு பாப் இசை பற்றி வந்த கட்டுரைகள் எல்லாம் குப்பை என்று அதிக ஞானமில்லாத என்னாலேயே  உணர முடிந்தது. ஆகவே நான் தான் அவரை கேட்டுக்கொண்டு எழுதச் செய்தேன்

அவரது எழுத்து இசைவிமரிசனம் என்றால் என்ன என்று தமிழுக்குக் காட்டியது என்றுதான் நினைக்கிறேன். அதில் எனக்கு பங்குண்டு என்பதில்  எனக்கு மகிழ்ச்சி.

இளையராஜாவைப்பற்றி அவர் விமரிசனம் செய்வதிலும் என்னால் எந்தப் பிழையும் காணமுடியவில்லை. அது விமரிசகனின் சுதந்திரம். அதற்கான தகுதியும் அவருக்குண்டு. ஆனால் அந்த விமரிசனம் அவர் இதுவரை தன் கட்டுரைகளில் கட்டிக்காத்துவந்த தரத்துடன் இல்லை. அதுவே என் குறை.

இசை விமரிசனத்தின் எல்லையை மீறிச்சென்று தனிப்பட்ட உணர்ச்சிகளைக் கலந்துகொண்டு கையில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்து வீசுவதுபோல் உள்ளது அது என்றும், அவர் இளையராஜாவின் வரலாற்றுப் பங்களிப்பை கணக்கில் கொள்ளவில்லை என்றும் சொல்கிறேன். அவ்வளவுதான்.

ஒரு கட்டுரை எழுதினால் அதை விளக்கிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது இங்கே. ஆகவே இனிமேல்  ஆளை விடுங்கள்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6493

23 comments

Skip to comment form

 1. velparasu

  அன்புள்ள ஜெயமோகன்,
  நலம். நலமா? ஒரு சராசரி இலக்கிய ரசிகனாய் நூல்களை, விமர்சனங்களை படிக்கையில் எழுதுபவர் மீது ஏற்படும் உணரவுகளை ஏன் இன்னது என வகை படுத்த முடிவதில்லை? இதற்கென தனியாக உணர்வு பாடம் படிக்க வேண்டுமா..?

 2. velparasu

  அன்புள்ள ஜெயமோகன்,
  இன்னும் இரண்டு நாட்களில் வர இருக்கும் காதலர் தின கொண்டாட்டங்களை சீர்குலைத்து கலாசாரத்தை காக்க விழையும் ஒரு சில போலி கலாசார விரும்பிகளை பற்றிய உங்களின் கருத்துகளை எதிர் பார்க்கிறேன். வாழ்த்து அட்டைகளை கொளுத்துவது, கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துவது என நீண்டு கொண்டே இருக்கும் இந்த பட்டியலுக்கு சொந்தகாரர்களை என்ன செய்யலாம்?

  பிரசன்னா

 3. velparasu

  அன்புள்ள ஜெயமோகன்,
  இதோ மூன்றாவதாக என்னை பற்றிய சிறு குறிப்பு. நான் கல்கி, விகடன் உள்ளிட்ட வார இதழ்களில் கேள்வி பதில் விமர்சன கடிதம் உள்ளிட்டவற்றை எழுதி கொண்டு இருக்கும் ஒரு கடை கோடி ரசிகன். (ரா.பிரசன்னா- மதுரை ) கேள்வி பதில், விமர்சன கடிதம் என்ற எல்லையை கடந்து செல்ல என்ன மாதிரியான பயிற்சி தேவை படும்? ஒரு கதையோ கவிதையோ எழுத முயற்சி செய்கையில் ஏதோ ஒன்று குறைவதாக ஒரு தோற்றம். அது என்னவாக இருக்கும்?

  பிரசன்னா

 4. Ramachandra Sarma

  //அது என்னவாக இருக்கும்?
  முயற்சி. ;)

 5. velparasu

  அன்புள்ள ராமச்சந்திர ஷர்மா அவர்களே..
  இந்த முயற்சி என்னும் விடை எனக்கானதாக இருந்தால், நன்றி உங்களுக்கு. ஆனால் நான் கேட்பது வேறு. பட்டை தீட்டி கொள்ள அல்லது கூர் தீடிகொள்ள என தனியாக எதாவது செய்ய வேண்டுமா என்பது தான் எனது கேள்வி..?

  பிரசன்னா

 6. Ramachandra Sarma

  பிரசன்னா, உங்களைத்தான் குறித்திருந்தேன். எனக்குத் தெரிந்தவரையில் ஓரளவுவரை ஒரு எழுத்தாளனோ கலைஞனோ தன் முயற்சியால் எழுதத்தொடங்கலாம். ஆனால் ஒரு நிலைக்கு மேல் “ஏதோ” ஒன்று நம்மை எழுதவோ, பாடவோ வைக்கிறது. தானாக நிகழ்ந்துபோகிறது அது. இதுவரை நீங்கள் பயணங்கள் எதுவும் பெரிய அளவில் செய்யவில்லை என்றால் அதை முதலில் செய்யுங்கள். மனிதர்களையும், இடங்களையும், நேரிடையான அனுபவத்தின் மூலம் அறியும்போது நமது மனம் அடையும் விரிவு கலைகளையும், அறிதலையும் நோக்கித்திரும்புகிறது. ஏதாவது எழுதவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு உட்கார்ந்து நானும் பலமுறை முயன்றதுண்டு. ஆனால் ஏதாவது எழுத இருந்தால் அல்லவா வரும். எனவே இப்போதைக்கு அறிதல் முறைக்கு தாவியிருக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாம்.

 7. vettai

  அப்பனே ஷர்மா…. ராமச்சந்திர சர்மா….அவர் ஏதோ ஜெயமோகனிடம் கேட்டால் கேட்டுவிட்டுப்போகட்டுமே. ஜெ ஏதாவது உருப்படியாகச் சொல்லி அவர் ஏதாவது எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம். அதற்குள் நீ மூக்கை நுழைத்து பயணம் அது இது என்று அந்த பச்சை மண்ணைப் பயமுறுத்துகிறாயே இது சரியா…? நாம் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு ஆயிரம் மயில்களைத் தாண்டி பைக்கில் சுற்றினோமே…? நீயென்ன ஐயாயிரம் பக்கத்தில் ஒரு நாவலை எழுதி முடித்துவிட்டாயா…? இல்லை நான் தான் அண்டா சுப்பனுக்கு அப்புறம் எதையாவது எழுதிக் கிழித்தேனா? அட போப்பா…

 8. Ramachandra Sarma

  அட பெருமாள் சார், நீங்களா? இங்கேயா? நம்பவே முடியவில்லையே? நாம் பயணங்கள் மேற்கொண்டபோது நடந்த அனுபவங்களை எழுதவேண்டும் என்று ஒவ்வொருமுறையுமே யோசித்திருக்கிறோம் இல்லையா? அதற்கு முயன்று நேரம் ஒதுக்கவில்லை என்பது நமது தவறு. ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். அதில் எழுத எதுவுமே இல்லையா என்ன? இருக்கிறது நாம் செய்யவில்லை. அவ்வளவே. பயணங்கள் எப்போதுமே நம்மை ஏமாற்றுவதில்லை, மிக அதிகமாகவே கொடுத்தனுப்புகிறது. விரைவில் மீண்டும் ஒரு பயணம் தொடங்குவோம்.

 9. Ramachandra Sarma

  //அதற்குள் நீ மூக்கை நுழைத்து – என் மூக்கின் நீளம் நீங்கள் அறியாததா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கருத்துசொல்லாவிட்டால் தூக்கம் வரமாட்டேன் என்கிறது என்ன செய்ய?

 10. prk

  சரியாய் சொன்னீர்கள் வேட்டை. . உங்கள் நண்பர் என்ற உரிமையில் சொல்லி இருக்கலாம். ஆனால் எனக்கும் அதே தான் தோன்றுகிறது. எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைக்கிழார் நம்ப ஷர்மா அண்ணாச்சி. என்னவோ இவர் கருத்தை தான் நாங்க எல்லாரும் கேக்க வந்த மாதிரி. கொஞ்சம் அடக்கி வாசிச்சா தேவல.

 11. Ramachandra Sarma

  ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள் prk. எனக்கும் இதே கேள்விதான். ஆனால் எல்லா பின்னூட்டங்களுமே மட்டுறுத்தித்தான் போடப்படுகிறது. எனவோ போங்க. ஆனால் சில முடிவுகள் எடுக்க இது ரொம்ப உதவியாக இருக்கிறது. சிலசமயம் தடுத்தாட்கொள்ளவும் சில நண்பர்கள் இருப்பார்கள்தானே? மொத்தமாக நிறுத்திவிடுவோம். சந்தோஷம் தானே?

 12. vettai

  சர்மா… முதலில் நீ ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். நீ என்னை நீங்கள், வாங்கள், போங்கள், பொங்கல் என்று விளிப்பதான் நானும் அதே மாதிரி சபையில் மரியாதையாக அழைப்பேன் என்று கனவு காண வேண்டம். அடுத்தது… நண்பர் எழுதுவது எப்படி என்று கேட்டிருந்தது ஜெயமோகனிடம். அதற்கு அவர் பதிலளிக்கும் முன் ஏன் நீ முந்திரிக்கொட்டை மாதிரி முந்துகிறாய் என்பதுதான் என் கேள்வி. ? அவர் எழுதுவதைப் பற்றிக் கேட்டால் நீ பாடுவது பற்றி இலவச இணைப்பாக கருத்து சொல்கிறாய். மற்றபடி நான் உன்னோடு ஊர் சுற்ற எப்போதுமே காத்திருக்கிறேன்.

 13. perumal

  என்னை பொறுத்தவரையில் திரு.ராமச்சந்திர சர்மா சாரின் பின்னூட்டங்கள் பயனுள்ளதாகதான்
  தெரிகிறது.

  சர்மா சார் உங்களின் எழுத்துநடை ஜெ மோ வை போலவே உள்ளது.

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 14. prk

  ஷர்மா ஜி,

  நான் சொல்ல வந்தது என்னனா, ஒரு வேளை ஜெ பதில் உங்க பதிலை விட ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கலாம். உங்கள் பதிலை விட அவர் பதிலை பலர் ஏற்று கொள்ள தயாராக இருக்கலாம். உங்கள் பதில் எபோழுதும் சின்ன கிண்டலோடு இருபதாக எனக்கு படுகிறது. ஜெ வின் பதிலுக்கு முன் உங்கள் கருத்தை பதிவு செய்வதை சற்று குறைக்கலாம் என்பது தான். அதை கொஞ்சம் உங்க ஸ்டைல் ல கொஞ்சம் கிண்டலோட சொல்றத நெனச்சு ஏதோ சொல்ல போய் கொஞ்சம் அதிகபடிய போச்சுன்னு நினைக்கிறேன்.

  பெருமாள் சொல்லியது போல் உங்கள் பின்னூட்டங்கள் பலருக்கு உதவியாக இருப்பின், என்னையும் என் பதிவையும் நீங்கள் கண்டுக்கவே வேண்டாம், உண்மையா தான். :)…

 15. velparasu

  அன்பு நண்பர்களே,
  இனிய காலை வணக்கம். இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. நான் கேட்ட கேள்வி எங்கே சிறுபிள்ளைதனமாக இருக்குமோ என்று தான் யோசித்து இருந்தேன். ஆனால் இந்த கேள்விக்கு ஜெயமோகனுக்கு முன்னதாக பதில் அளித்து அதன் தொடர்ச்சியாக பல நண்பர்களின் கருத்து பரிமாற்றங்களும் கிடைத்ததை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அணைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதை பற்றி ஜெயமோஹனும் கருது கூற வேண்டும் என்பது என் சிறு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பின் வெற்றி ஜெயமோகன் அவர்களை சார்ந்தது.
  மேலும் ஷர்மா கூறுவதை நான் ஏற்று கொள்கிறேன். பயணம் தான் நல்ல சிந்தனைக்கு வழிகாட்டும் என்பதை. ஆனால் என்னுடைய பெரும்பாலான பயணங்கள் பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளால் தான் சூழப்பட்டு விடுகின்றன.
  முயற்சிக்கிறேன்.

  பிரசன்னா

 16. vettai

  நண்பர் ரமேசுக்கு…. உங்களுடைய மூன்று கேள்விகளிலும், ஜெயமோகனிடம் உரையாடவேண்டும் என்ற வேட்கை புலப்படுகிறது. நல்ல விஷயம் தான். ஆனால்… அந்தக் கேள்விகளில் சிறுபிள்ளைத்தனம் இருப்பது உண்மைதான். நாங்கள் நான்கு பேர் மாங்கு மாங்கென்று இது குறித்து விவாதித்ததால் அது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம்பிவிடவேண்டாம். இப்படி எழுத வேண்டுமா..? அப்படி எழுதவேண்டுமா..? என்றெல்லாம் என்று கேட்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. யாரும் யாருக்கும் பயிற்சி கொடுக்க முடியாது என்பது என் கருத்து. எல்லோரும் சொல்வதுதான். நானும் சொல்கிறேன். நிறைய படியுங்கள். நண்பர் ஷர்மா சொன்னது போல் பயணம் செய்யுங்கள். அது பொருளாதராம் சார்ந்ததாக இருந்தால் கூட பரவாயில்லை. இடத்தை விட்டு நகர்ந்தால் சரி. உங்களால் எழுத முடியும் என்று நம்புங்கள்.
  நன்றி

 17. vettai

  பிரசன்னா… உங்களை ரமேசு என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். மேற்கண்ட பதில் உங்களுக்கானது தான்.

 18. V.Ganesh

  நண்பர்களே திரு.பிரசன்னா எழுதியதை போல் சில நேரங்களில் நானும் ஜெயமோகன் அவர்களிடமிருந்து பதிலை எதிபார்க்கிறேன்/ பார்த்தேன்.
  ஆனால் கேணி கூட்டத்தில் சில விஷயங்கள் புலப்பட்டது.
  ஒன்று அவரை தவிர இன்னும் நான்கு பேர் இந்த தளத்தை சரி பார்கிறார்கள். எனவே ஜெயமோகன் எல்லா கடிதமும் பார்க்கிறார் என்று கூற முடியாது. ஆனால் அன்று சந்தித்த பொழது தான் எல்லா கடிதமும் படிக்கிறேன் என்று கூறினார்.
  இரண்டு ஜெயமோகன் பதில் தரும் இன்றைய நண்பர்கள் பெரும்பாலும் அவர்க்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். அல்லது தனியாக தளம் அமைத்து எழுதுபவர்கள்.
  மூன்று அவருடைய நேரம்
  நான்கு நாம் கேட்கும் கேள்விகள் அவரை எதாவது ஒரு விதத்தில் தூண்ட வேண்டும் அல்லது நம்மிடையே அவரை impress செய்யுமாறு ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த அறிமுகம் அவரை தூண்டலாம்.

  எனவே
  ஜெயமோகன் நம் கடிதத்திற்கு பதில் தர நாம் இன்னும் சில காலம் காக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட். எனக்கும் சேர்த்து. :)

 19. Arangasamy.K.V

  //ஆகவே இணையத்தில் எழுதுவதை கொஞ்சம் குறைத்தாகவேண்டும். இணையத்தில் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதே எனக்கு நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதைக் குறைத்துக்கொள்வதற்காக என் இணையதளத்தில் பின்னூட்டப்பெட்டி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் சிறில். வாசகர் தங்கள் கருத்துக்களை அதில் பதிவுசெய்யலாம். எனக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் நானும் அதில் பதிவுசெய்கிறேன். //

  http://www.jeyamohan.in/?p=5891

  மிக நீண்ட நாட்கள் பின்னூட்டங்கள் அனுமதிப்பது பற்றி பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்டது ,

  எல்லா கமண்ட்களையும் ஜெயமோகன் பார்க்கிறார் , பதிலளிக்க நேரமிருப்பதில்லை என நினைக்கிறேன் , பின்னூட்டங்கள் அனுமதிக்க துவங்கியபின் ஒரு 1000 மாவது போடப்பட்டிருக்கும் , அத்தனைக்கும் பதிலளிப்பது சிரமம்தானே , தினமும் இணையத்தில் எழுதுகிறார் , அது தவிர நாவல்கள் , கடிதங்களுக்கு பதில்கள் ,

  இதுவரை ஒரு 10 பதில்கள் அளித்திருப்பார் , ஏற்கனவே அறிமுகம் , நண்பர்கள் என்பதால் அல்ல , சொல்வதற்க்கு ஏதாவது இருந்திருக்கலாம் ,(நானும் நிறைய கமண்ட் போட்டிருக்கிறேன் , அதில் ஒன்றுகூட எனக்கான பதில் இல்லை :) )

  இதுதான் சரி என நினைக்கிறேன்

  ”“நான்கு நாம் கேட்கும் கேள்விகள் அவரை எதாவது ஒரு விதத்தில் தூண்ட வேண்டும் அல்லது நம்மிடையே அவரை impress செய்யுமாறு ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த அறிமுகம் அவரை தூண்டலாம்.””

  பிரசன்னாவுக்கான பதில் ஏற்கனவே இந்த தளத்தில் பல இடங்களில் எழுதியுள்ளார் , தொடந்து படிப்பவர்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  —–
  இது முழுக்க என் எண்ணம் மட்டும்தான் ,

 20. velparasu

  அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும்,
  இனிய மாலை வணக்கம். இன்றைய இந்த உரையாடல்கள் எனக்கும் என் எழுத்துக்கும் சற்றாவது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இனி என்னிடம இருந்து எப்படி என்ற கேள்விகளே வராது. இப்படி செய்யலாமா என்ற ஆர்வமே வரும். உங்களை போல என்றாவது ஒரு நாள் என் கருத்துக்களுக்கும் ஜெயமோகன் பதில் கூறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

  தொடர்ந்து நம் வாசிப்புகளுடன் சிந்திப்போம்

  நன்றி
  பிரசன்னா
  .

 21. perumal

  இரண்டு மூன்று நாட்களாக திரு. ராமச்சந்திர சர்மா சாரின் பின்னூட்டங்களை பார்க்கமுடியவில்லை. அவரின் பின்னூட்டங்கள் இல்லாதது எனக்கு எதையோ இழந்ததைப்போல உள்ளது.

  சர்மா சார் எங்க போயிட்டீங்க?

  சீக்கிரம் வாங்க சார்.

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 22. vettai

  அடடா… பெருமாள் சார்…. உங்கள் ஷர்மா புலம்பலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டதே. உங்களுடைய எழுத்து ஜெயமோகனைப் போல் உள்ளது என்பதில் தொடங்கி…. எதையோ இழப்பதுபோல் உள்ளது என்பது வரை தாங்க முடியலடா சாமி. நீங்கள் கிட்டத்தட்ட ஷர்மாவின் பக்தராகவே ஆகிவிட்டீர்கள்? வாழ்த்துக்கள். ஷர்மாவிடம் ஏகப்பட்ட கருத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல கோணிப்பையாக எடுத்துத் தயாராக வைத்திருங்கள்… வேண்டுமளவு பிடித்துக்கொள்ளலாம்.

 23. perumal

  திரு . vettai சார்,

  கண்டிப்பாக நான் சர்மாவின் பக்தன் தான். அவர் பின்னூட்டங்களில் எழுதும் எழுத்து எனக்கு எனக்கு ஒரு தாயின் அரவணைப்பை போல உள்ளது.

  தயவு செய்து அவரைப்பார்த்தால் இந்த பின்னூட்ட வெளிக்கு வரச்சொல்லுங்கள் ப்ளீஸ்!

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

Comments have been disabled.