அஞ்சலி, ஜெயந்தன்

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் இந்த செய்தியை அனுப்பியிருக்கிறர்:

அன்புள்ள ஜெயமோகன், 

எழுத்தாளர் ஜெயந்தன் இறந்த போன விஷயத்தை இப்போதுதான் மரத்தடி குழுமத்தின் மூலமாக அறிந்தேன். அவரது மகன் அந்தத் தகவலை அனுப்பியிருக்கிறார். சிறுகதையாசிரியர்களில் ஜெயந்தன் முக்கியமானவர் என்பது என் அவதானிப்பு. பிப் 7-ந் தேதி இறந்து போயிருக்கிறார்.

இது உங்களின் தகவலுக்காக.


சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com
ஜெயந்தன் தமிழில் எழுபதுகளில் உருவான நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர். அதிகமும் பெரிய இதழ்களிலேயே எழுதியவர். ஆனால் வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரிசனத்தன்மை கொண்டவை அவரது சிறுகதைகள்.

ஜெயந்தனின் சாதனை என்பது ‘நினைக்கப்படும்’ என்ற வரிசையில் அவர் எழுதிய நாடகங்கள். விஜய் டென்டுல்கர் பணியிலான அதிர்ச்சியூட்டும் சமூக சித்திரங்கள், கசப்பான விமரிசனங்கள் அவை. உரையாடல்தன்மை மேலோங்கியவை. எழுபதுகளில் அவை குமுதம் இதழில் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்றன

இந்தியசமூகத்தின் தார்மீர்க வீழ்ச்சியை சித்தரிக்கும் அந்நாடகங்கள் இன்றும் முக்கியமானவை

ஜெயந்தனுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைஇளையராஜா மீதான விமர்சனங்கள்..
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 2