«

»


Print this Post

இளையராஜா மீதான விமர்சனங்கள்..


அன்புள்ள ஜெ,

உயிர்மை இதழில் ஷாஜி இளையராஜாவைப்பற்றி எழுதிய் கட்டுரைக்கு உங்கள் பதிலை நான் மிகவும் எதிர்பார்த்தேன். இரண்டுமுறை சேட்டிலே வந்து கேட்டேன் நினைவிருக்கும். நீங்கள்தான் ஷாஜியின் கட்டுரைகளை அறிமுகப்படுத்தினீர்கள். உங்கள் வழியாகவே எனக்கு அவரை தெரியும். நீங்கள் ராஜாவுக்கு ஓரளவு நெருக்கமாக தெரிந்தவர். இசையைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால் நான் கேட்பது அவரது தனிப்பட்ட விஷயங்களைப்பற்றி அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பதனால்தான்…நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருப்பது தந்திரமாகவே எனக்கு தோன்றுகிறது மன்னிக்கவும். இந்தக்கட்டுரையைக் கவனித்தீர்கள் அல்லவா?

 http://chandanaar.blogspot.com/2010/01/blog-post_22.html

போஸ்

அன்புள்ள போஸ்,

எனக்கு எப்படியும் ஒரு முப்பதுநாற்பதுபேர் எழுதியிருப்பார்கள். நான் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்றால் நீங்கள் சொல்வதுபோல உண்மையிலேயே இசையைப்பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதனாலேயே. எல்லா நல்ல பாடல்களையும் ரசிக்கக்கூடியவன் நான்.

மேலும் ஷாஜி என் நெருக்கமான நண்பர். அவரை நான் நன்கறிவேன். உணர்ச்சிகரமானவர். விமரிசனங்களால் அழமாக புண்படுபவர். ஆகவே ஒன்றும் சொல்லவேண்டியதில்லை என நினைத்தேன். ஆனால் கடிதங்களைப் பார்க்கையில் எது மனதில்பட்ட உண்மையோ அதை சொல்வதே நல்லதென்று பட்டது. நண்பர் என்ற முறையில் அவர் அதை புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரே வழி

நான் அக்கட்டுரை வெளிவந்த சிலநாட்களிலேயே ஷாஜியிடம் என் கருத்தை தெளிவாகவே சொல்லிவிட்டேன்.  நான் அக்கட்டுரையை நிராகரிப்பது எந்த அபிமானத்தின் அடிப்படையிலும் அல்ல. அதில் பல அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன என்பதனால்தான். அதாவது அது சாரு நிவேதிதாவின் பாணியில், அத்தகைய வாசகர்களை உத்தேசித்து எழுதப்பட்ட கட்டுரை.

முதலாவதாக,  ஷாஜியின் கட்டுரைவிமரிசன ஒழுங்கு இல்லாதது. இளையராஜாவின் இசையின் எல்லைகளை  அல்லது சரிவுகளைப்பற்றி இதைவிட தீவிரமாகவேகூட எழுதலாம். ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி இசைவிமரிசகனின் எல்லைகளை மீறிச் செல்கிறார். அவரது ஆன்மீகம்,சமூக அக்கறை போன்றவற்றை இசைக்கு அளவுகோலாகக் கொள்கிறார் என்றால் இந்த அளவுகோலை எந்தவிதமாக இவர் அடைந்தார், இதற்கு முன் எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள்.

இளையராஜாவின் சமூகப்பங்களிப்பு குறித்தெல்லாம் சமூக விமரிசகன் எழுதலாம். உதாரணமாக  என் பெருமதிப்புக்குரிய இதழாளரான ஞாநி கடுமையாகவேகூட எழுதியிருக்கிறார். அவர் சமூக விமரிசகராக தொடர்ந்து செயலாற்றுபவர். ஆகவே அவர் கருத்துக்களுக்கு ஒரு தர்க்கபூர்வமான நீட்சி உண்டு. அவரது ஆய்வுக்கருவிகள் நாம் அறிந்தவை. அவர் அனைவர்மேலும் அதை சீராக கையாள்கிறார்.

ஷாஜி இவ்விஷயங்களைப்பற்றி எழுதுவதற்கு அவருக்கு தமிழ்ச்சமூகச்சூழலைப்பற்றி என்ன தெரியும், அவரது அளவுகோல்கள் என்ன என்பதெல்லாம் நமக்குத்தெரியாது. அப்படி சமூகவியல்கோணத்தில் அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தன்னுடைய ஆய்வுகளையும் அணுகுமுறையையும் தெளிவாக முன்வைத்து எழுதவேண்டும். நாம் அவற்றை பரிசீலிக்கலாம். தீர்ப்புகளை மட்டுமே எழுதிசெல்வது சரி அல்ல. 

இரண்டாவதாக, ஷாஜி இப்படி ஒரு தனிப்பட்ட மதிப்பீடுகளை தொடுப்பதற்கு உரிய ஆதாரங்களை நேர்மையாக திரட்டிக்கொள்ளவில்லை. அவர் பெரும்பாலும் இதழ்களில் வெளிவந்த ஆதாரமில்லாத கட்டுரைகள் கிசுகிசுக்கள் செய்திகள் போன்றவற்றை நம்பி, அவற்றை உறுதிசெய்துகொள்ளக்கூட முயலாமல், எழுதுகிறார். அவர் அதில் ராஜா குறித்துச் சொன்ன பல விஷயங்கள் பிழையானவை.

ஒருசாதாரண எழுத்தாளனாகிய என்னைப்பற்றி அச்சில், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒருவர் மதிப்பிட ஆரம்பித்தால் தமிழகத்தின் முதல்தர அயோக்கியர்களில், பொறுக்கிகளில் ஒருவன் நான் என எழுதிவிடமுடியும். நான் மறுக்காதவை எல்லாம் உண்மையே என்றும் ஒருவர் வாதிடலாம். ஆனால் எந்த ஒரு அறியப்பட்ட ஆளுமையும் தன்னைப்பற்றி எழுதப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சொன்னால் வேறு வேலையும் நடக்காது.

முன்தீர்மானத்துடனும் மனக்கசப்புடனும்தான் தகவல்களை அணுகினார் ஷாஜி. உதாரணமாக, பழசிராஜா பாடலில்  இளையராஜா ஓ.என்.வி குறித்து என்ன சொன்னார் என்று அப்படத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் நானே அவரிடம் விளக்கினேன். ‘ஓஎன்வி அவருக்கு மெட்டு அனுப்பியும்கூட களநடைப்பாடலாக பாடல்வரிகளை எழுதிக்கொடுத்தார், நான் அதை புதிய மெட்டுக்கு மாற்றினேன்’ என்று சொல்லி அதை எனக்குப் பாடியும் காட்டியிருந்தார் ராஜா.

ராஜா அதைத்தான் பின்பு மேடையிலும் சொன்னார். எரிச்சலுடனோ, எதற்கும் விளக்கமாகவோ அல்ல. பொதுவாக பட ‘பிரமோ’க்களில் இதழாளர்கள் செய்திபோட வசதியாக இம்மாதிரி சில துணுக்குகளை கொடுப்பார்கள். அந்த நோக்கில், அந்த மனநிலையில்.  அதாவது இது ஒருவகை ‘வொர்க்கிங் ஸ்டில்’ மட்டுமே. பழசிராஜா பாடல்கள் ‘வெற்றியா’ என்ற கேள்வியே எழவில்லை.

மலையாள மனோரமாவின் சென்னைநிருபர் செய்தியைத்  திரித்தார். அதற்கு ஓர் கேரள அமைச்சர் பதில்சொல்லப்போக அங்கே அலைகளை கிளப்பியது. ராஜா பேசியதன் வீடியோ கிளிப்பிங் வெளிவந்தபோது அலை அடங்கியது. அந்த கிளிப்பிங் யூடியூபில் கிடைக்கிறது. ஆனால் மனோரமாவின் பதிவே ஆதாரம் என்று ஷாஜி உறுதியாகச் சொன்னார். நான் நிறுத்திக்கொண்டேன்.

இளையராஜாவின் குணநலன்களைப் பற்றி ஷாஜி எழுதியதை அவதூறு என்று மட்டுமே சொல்லமுடியும். இத்தனை வருடங்கள் ஒரு பொதுவெளியில் செயல்பட்ட மனிதரைப்பற்றி கசப்புகள் இருக்கும்தான். மேலும் பொதுவாக படைப்பாளிகள் உள்சுருங்கியவர்கள். நிலையான உணர்வுகள் இல்லாதவர்கள். மிகையாக எதிர்வினையாற்றுபவர்கள். இதற்கு எவருமே விதிவிலக்கல்ல.

its me shaji

ஆனால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கனவு தவிர எந்த ஆதாரமும் இல்லாத ஆரம்ப இயக்குநர்கள், இளைஞர்கள் முழுநம்பிக்கையுடன்  வெறும் கையுடன் சென்று நிற்கும் வாசலாக இளையராஜாவின் இசையலுவலகம் இருந்திருக்கிறது. அவர்களை ஆதரித்து, சர்வதேசத்தரம் கொண்ட இசையை அளித்து, மனம்சோரும் தருணங்களிலெல்லாம் ஆறுதலும் ஊக்கமும் அளித்து மேடையேற்றிவிட்டவர் ராஜா.  அப்படி ஒரு பெரும்பட்டியலே உண்டு. அந்த கனிவும் பண்பும் கொண்ட இன்னொரு முன்னிலை கடந்த அரைநூற்றாண்டு தமிழ் சினிமாவில் இருந்ததில்லை

சந்தேகமிருந்தால் பாலாவிடம் ஷாஜி கேட்டுக்கொள்ளலாம். கண்ணீரில்லாமல் அதைப்பற்றிப் பேச பாலாவால் முடியாது. அப்படி  ராஜாவை எண்ணும் குறைந்தது நூறு இயக்குநர்கள் தமிழில் உண்டு. அவர்கள்தான் தமிழின் நல்ல சினிமாவின் தூண்களும்கூட.

மேலும் கலைஞர்களை நல்ல மனிதர்களா, அன்பானவர்களா என்று பார்க்கும் பார்வையும் சரி; அதைவைத்து கலையை மதிப்பிடும் போக்கும் சரி மிக மிக ஆபத்தானவை. ஒரு கலைஞனின் கலையின் அந்தரங்கமான சில தளங்களை புரிந்துகொள்ள அவனது தனிவாழ்க்கை உதவும். புரிந்துகொள்ள மட்டுமே, மதிப்பிட அல்ல. அதற்குமேல் தனிவாழ்க்கையில் நுழைவதென்பது வெறும் வம்பு மட்டுமே.    

மூன்றாவதாக, ஷாஜியின் கட்டுரைக்கு தனிப்பட்ட பின்னணி உண்டு. அதை அவர் கட்டுரையில் சொல்லியிருக்கிறார், ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை. பாடகி கல்யாணி ஷாஜிக்கு குடும்பநண்பர். அவருக்காக ஷாஜி பலவகைகளில் வாய்ப்புகளுக்காக முயல்வதுண்டு. விளம்பரப்பாடல்களில் அவரை பயன்படுத்துவதுண்டு. கஸ்தூரிமான் படம் ஆரம்பிக்கும்போது கல்யாணிக்காக இளையராஜாவின் சொல்லும்படி ஷாஜி லோகியை கட்டாயப்படுத்தினார். லோகி ராஜாவின் கல்யாணியை அறிமுகம் செய்தார்.

அந்த குரல்சோதனையின்போது கல்யாணி வித்யாசாகர் பாடிய பாடலைப் பாடியபோது ராஜா கோபம் கொண்டது உண்மை. ஆனால் கல்யாணி நிராகரிக்கப்பட்டதற்கு அது காரணம் அல்ல. லோகியிடம் நிதானமாகவே அதை ராஜா விளக்கினார். ‘நல்ல குரல், ஆனால் குரலில் புதுமை இல்லை’ என்றார். ‘அப்படியானால் குரல் இனிமையாக இருக்கவேண்டாமா’ என்று லோகி கேட்டதற்கு ‘தேவையே இல்லை’ என்று ராஜா சொன்னதாகவும் அதில் தனக்கு உடன்பாடே இல்லை என்றும் லோகி சொன்னார்.

இந்த நிராகரிப்பில் இருந்துதான் ஷாஜியின் இளையராஜா வெறுப்பு ஆரம்பமாகிறது. கடந்த இருவருடங்களில் அவர் எப்போதுமே ராஜாவை கடுமையாக நிராகரித்து மட்டுமே பேசி வந்தார் என்பதை நண்பர்கள் அறிவார்கள். அதற்கு முன் அப்படியல்ல என்பதையும் நண்பர்கள் அறிவார்கள். இக்கட்டுரையில் ஷாஜி விட்டுவிட்டது அவருக்கு இளையராஜாவை முன்னரே தெரியும் என்பதுதான்.

பலவருடங்களுக்கு முன்னர் சலீல் சௌதுரி ·பௌண்டேஷனின் செயலர் என்ற முறையில் சலீல் சௌதுரிக்கு ஒரு விழா எடுத்து அதில் இளையராஜாவை பங்குகொள்ளும்படி அழைத்தார். ராஜாவின் உச்ச நாட்கள் அவை. ராஜா அப்போது ஷாஜி யாரென்றே அறியாதவர். விழா மிகச்சிறிது. ஆனால் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு அவரே வந்தார், சலீல் சௌதுரி மீது இருந்த மதிப்பு காரணமாக மட்டும்.

சலீல் சௌதுரிக்கு வந்திருக்கும் அந்த மிகக் குறைவான கூட்டத்தைப்பற்றி மேடையில் மனக்குறைப்பட்டு பேசிய ராஜா சலீல் சௌதுரியின் இசையின் பல நுட்பங்களை தொட்டுக்காட்டி பேசினார். இசையின் ‘அரேஞ்ச்மெண்ட்’ குறித்து அவர் அன்று பேசியது மிக முக்கியமானது என்று ஷாஜி பலமுறை சொல்லியிருக்கிறார்.

சலீல் சௌதுரியின் பல பாடல்கள் மீது திருட்டுக்குற்றச்சாட்டு உண்டு. அதற்கு விளக்கமளித்து பேசிய ராஜா இசை என்பது எல்லைக்குட்பட்ட ஸ்வரங்களால் ஆனது என்னும்போது சாயல்கள் ஏற்படும். சிலசமயம் பிறிதொரு இசை மனத்தூண்டலாக அமையலாம். ஆனால் அந்த தொடக்கத்தில் இருந்து எப்படியெல்லாம் மேலே செல்லமுடிந்திருக்கிறது என்பதையே அளவாகக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் ஷாஜி சொல்லி நான் அறிந்ததே. இச்செய்தியை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஷாஜி சொல்லியிருக்கிறார்.

கடைசியாக, ஷாஜிக்கு இளையராஜாவின் இசையில் மையமான சில விஷயங்களை மதிப்பிடும் ஆற்றல் இல்லை. காரணம் அவருக்கும் கர்நாடக சங்கீதமோ, ராகங்களோ தெரியாது. மேலையிசையில் செவ்வியலிசை இலக்கணமும் தெரியாது. ராஜா அவரது முக்கியமான சோதனைகளையும் சாதனைகளையும் அந்த தளங்களில்தான் நிகழ்த்தியிருக்கிறார்.

அவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக தெரியாமல் விமரிசிக்கக் கூடாதா என்றால் செய்யலாம் என்றே சொல்வேன்.  காரணம் சினிமாப்பாடல்கள் பொதுரசிகனுக்குரியவை. ஆனால் அந்த எல்லையை புரிந்துகொண்டு அதற்குள் தன்னை நிறுத்திக்கொண்டு செய்யவேண்டும். நான் எதிர்மறை விமரிசனத்தில் எனக்கு தெரியாத இடங்களைச் சுட்டிக்காட்டியபின்னரே பேச ஆரம்பிப்பேன்.

இளையராஜா இசையில் என்ன செய்தார் என்று தெரியாத நிலையில் ஷாஜி அவரது ‘வெற்றி’களை கொண்டே அவரை மதிப்பிடுகிறார். மேலைநாட்டு பரப்பிசையைப் பற்றிப் பேசும்போது அவர் எப்போதுமே வணிக வெற்றியையே அளவுகோலாகக் கொள்கிறார். அப்பாடல்களின் நயம் குறித்து ஏதும் சொல்வதில்லை. அப்படியானால் வெகுஜன வெற்றிதான் இசையை அளக்க அளவுகோலா என்றால் அவர் மதன்மோகன் போன்ற ‘தோல்வி’ அடைந்த இசைமேதைகளைப்பற்றிச் சொன்னது இடையூறாக இருக்கிறது.

வணிக வெற்றியை அளவுகோலாகக் கொண்டால் ராஜா தொண்ணூறுகள் வரை முப்பது வருடம் ஈடிணையில்லாத புகழுடன்தான் இருந்தார். ஷாஜி அவர் முதல் பத்து வருடங்களுடன் தீர்ந்துவிட்டார் என்கிறார். இசையின் தரம் அல்லது நுட்பத்தை வைத்து அளவிடுகிறார் என்றால் அதற்கான அவரது அளவுகோல்கள் சொல்லப்பட்டாக வேண்டும். அதைச் சொல்ல அவரது தகுதி வெளிப்பட்டாக வேண்டும்.

ஆக, வெறுமே ஒரு மனக்கசப்பில் இருந்து ஆரம்பித்து வம்புகளைக்கொண்டு நிரப்பி ஷாஜி தன் கட்டுரையை எழுதியிருக்கிறார். நானறிந்த ஷாஜி சிறந்த நகைச்சுவை உணர்ச்சியும், ஆழமான நல்லியல்புகளும், நுட்பமான ரசனையும் கொண்ட நல்ல நண்பர். இந்தக் கசப்பு அவரது சமநிலையை இல்லாமல் செய்துவிட்டது. அதை அவர் உணர்ந்தாரென்றால் இந்த மனநிலையைப் பற்றி கவனமாக இருக்க முடியும். அது அவரது நம்பகத்தன்மைக்கு நல்லது.

மாறாக, எவரை வசைபாடினாலும் உடனே வந்து ஆதரவு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தின் கைத்தட்டலையோ அல்லது வம்புகளை எழுதிவாங்குவதில் குறியாக இருக்கும் இதழாசிரியரின் தூண்டுதலையோ ஆதாரமாகக் கொள்வாரென்றால் அது அவரை இன்னொரு சாரு நிவேதிதாவாகவே ஆக்கும். அதை ஷாஜி எந்த அளவுக்கு வெறுப்பார் என்பதை அவர் அறிவார்.

ஒருவரை பாராட்டும்போது சமநிலைகுலையலாம்,  எதிர்க்கும்போது நம் சமநிலையைப்பற்றி மேலும் மேலும் கவனம் கொள்ளவேண்டும். அம்மாதிரி சமநிலை இல்லாமல் நானும் பலவற்றை ஆரம்பகாலத்தில் எழுதி பின்னர் வருத்தப்பட்டிருக்கிறேன். இதை நான் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பராகிய ஷாஜியிடம் வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

*

சிலமாதங்கள் முன்பு நானும் ஷாஜியும் தனிப்பட்டமுறையில் ராஜாபற்றி பேசினோம். அப்போது இக்கட்டுரையில் உள்ள ‘ராஜா ஒன்றுமே செய்யவில்லை’ என்ற வரியை ஷாஜி வேறுவகையில் சொன்னார். ராஜா அவர் சொன்ன எதுவும் நடக்கும் என்ற நிலை இருந்தபோது தமிழ்சினிமாவுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்றார் ஷாஜி.

நான் அதை திட்டவட்டமாக ஆதாரங்களுடன் மறுத்தேன். ஷாஜிக்கு தமிழ்சினிமா வரலாறே தெரியவில்லை என்றேன். அதன் பின் அவர் தன்  கட்டுரையில் அந்த குற்றச்சாட்டு இல்லாமல் எழுதியிருக்கிறார். மாறாக ‘ சமூகத்துக்கு’ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். செய்தாரா என ராஜா விளம்பரப்படுத்த வேண்டுமா என்ன?

தமிழின் நல்ல சினிமாவுக்காக இளையராஜா அளவுக்குப் பங்காற்றிய இன்னொரு ஆளுமையே கிடையாது. இன்னும்கூட பதிவுபெறாத ஒரு மகத்தான பக்கம் அது. 1976ல் ராஜா திரையுலகுக்கு வந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி யுகம் முடிந்து எழுபதுகளில் உருவான யதார்த்தவாத அலைக்குக் காரணமாக அமைந்ததே ராஜாவின் வருகைதான். இன்றுவரை தமிழ்சினிமாவின் பொற்காலமாக திகழ்வது அதுவே. இப்போதுவரும் யதார்த்தவாதபடங்களின் இலக்கணம் அமைந்ததும் அப்போதே.

அந்த அலையின் ஒரு பகுதியாக இளையராஜா திகழவில்லை. மாறாக அவர்தான் அந்த அலையை வழிநடத்திய சக்தி. பாரதிராஜா படவுலகில் நுழைய முனைந்தபோது எஸ்.ஏ.ராஜ்கண்ணு போட்ட ஒரேநிபந்தனை இளையராஜா இசையமைப்பாரா என்பதே. அந்த உறுதியை வாங்கியபிறகே பாரதிராஜாவால் படம் தொடங்க முடிந்தது.

நட்சத்திரங்கள் இல்லாமல், நாடகத்தன்மை இல்லாமல், மிகச்சிறிய யதார்த்தப் படங்கள் வணிகவெற்றி பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியது இளையராஜாவின் துடிப்பான இசைதான்.  புதியவர்களின் சிறு முதலீட்டுப் படங்கள் வென்றால்தான் திரைக்கலையில் மாற்றம் வரும். இளையராஜா அக்காலத்தில் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு துணிந்து இசையமைத்தார். மிகத்தரமாக.  அதற்கு மிகமிகக் குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டார். அவரது பங்களிப்பு இல்லாமல் அந்தப் படங்கள்  உருவாகியிருக்க முடியாது, வெற்றி பெற்றிருக்கவும் முடியாது என்பது வரலாறு. அவையே தமிழ்சினிமாவை மாற்றியமைத்தன.

மலையாள சினிமாவும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் யதார்த்தவாதம் நோக்கி வந்தது. பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி போன்றவர்கள் உள்ளே வந்தார்கள். புதுநடிகர்கள் அறிமுகமானார்கள். ஆனால் மலையாள சினிமா அந்த மாற்றத்தைக் கொண்டுவர பாலுணர்ச்சியை நம்பியிருந்தது. துணிச்சலான செக்ஸ்படங்கள் வழியாகவே மலையாள சினிமாவில் சிறு படங்கள் வென்றன. மலையாளசினிமா உலகம் அதன்வழியாகவே தன் அமைப்பு, சூழல் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டது. அதாவது அங்கே செக்ஸ் செய்ததை இங்கே ராஜா செய்தார்.

பாரதிராஜா, தேவராஜ் மோகன், மகேந்திரன், துரை, ருத்ரையா,பாக்யராஜ் என ஆரம்பித்து மணிரத்தினம், பாலா வரை தமிழில் தீவிரமான இலக்குகளோடு நுழைந்த அத்தனை இயக்குநர்களும் ராஜாவிடம்தான் முதலில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவரால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.  ஐ.வி.சசி, பரதன்,பாசில் முதலிய தரமான மலையாள இயக்குநர்கள் தமிழுக்கு வந்தபோது அவர்களின் வருகையை மிகச்சிறந்த இசையால் கௌரவித்திருக்கிறார் ராஜா.

ஓர் இளம் இயக்குநருக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மிகச்சிறந்த இசையை அளிப்பதென்ற ராஜாவின் கொள்கையை தொடர்ச்சியாக முப்பது வருடம் தமிழில் நாம் காணமுடிகிறது. ராஜாவின் மகத்தான பாடல்கள் பல புது இயக்குநர்களின் படங்களில்  அமைந்தவை என்பதை பலர் நினைப்பதில்லை. தமிழில் புதிய விஷயங்கள் வருவதற்கு அமைப்புக்கு உள்ளே இருந்து வரும் ஒரே ஆதரவுக்கரம் இளையராஜாவுடையதாகவே இருந்திருக்கிறது என்பது வரலாறு.

பலசமயம்  அந்த முதல்படங்கள் காணாமல் போயிருக்கின்றன, இசையால் மட்டுமே அறியப்படுகின்றன. சிலசமயம் நல்ல படங்கள்கூட. ச்சிறந்த உதாரணம், சின்னத்தாயி. திருநெல்வேலியின் ஆத்மா பதிவான ஒரு நல்ல படம் அது. மிகமிகக் குறைவான செலவில் எடுக்கப்பட்டது. அனேகமாக ராஜாவுக்கு சில ஆயிரங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம், அதைக்கூட முழுமையாகக் கொடுத்தார்களா என்பது ஐயத்திற்குரியது. அற்புதமான இசையால், நெல்லை நாட்டுப்புறத்தன்மை அதற்கே உரிய வாத்தியங்களுடன் வெளிப்பட்ட பாடல்களால் அந்தப்படம் அழுத்தம் பெற்றிருந்தது. துரதிருஷ்டவசமாக அது வெற்றி பெறவில்லை. அதன் இயக்குநர் இளமையில் இறந்தும் விட்டார் என்றார்கள். அப்படி எத்தனை படங்கள்.

சிந்தித்துப் பார்த்தால் இது எவ்வளவு பெரிய ஓர் வாய்ப்பு என்பது தெரியும். இன்று நல்ல படம் எடுக்க முனையும் இயக்குநர்களுக்கு இருக்கும் சிக்கலே இசைதான். தரமான இசை தேவை என்றால் அது படத்துக்கான செலவில் மூன்றில் ஒருபங்கை சாப்பிடும். செலவைக்குறைத்தால் இசை வெளிறிக் கிடக்கும். சமீபகாலத்தில் வெற்றிபெற்ற சின்னப்படங்களின் இசையைக் கவனித்தால் இது தெரியும்.

ராஜா அவரது இசையை அது மிகமிக விரும்பப்பட்ட நாட்களில்கூட வியாபாரப் பொருள் ஆக்கவில்லை. அதனால் அவர் கோடிகளை இழந்திருக்கக் கூடும். ஆனால் தரமான ஒரு திரை இயக்கத்தின் பகுதியாக தன் இசை இருக்கவேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தார். வேறெந்த திரைச் சாதனையாளரும் ராஜா அளவுக்கு நல்ல சினிமா மீது இத்தனை பற்றுடன் இருந்ததில்லை.

கடைசியாக ஒன்று.பாலுமகேந்திரா தனிப்பேச்சில் சொன்னது இது. ராஜா தமிழில் அறிமுகமானபோது தமிழ்சினிமாவின் திரைமொழி மிகப்பழமையாக இருந்தது. காரணம் அது அனைவருக்கும் புரிந்தாகவேண்டும் என்ற கட்டாயம். திரைக்கதையில் ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் அடுத்த காட்சிக்கான குறிப்பு இருக்கும். ‘எங்கே அந்த சண்முகம், வாங்க போய் பாப்போம்’ என்பது போன்ற வசனங்கள். அல்லது காட்சி அடையாளங்கள். ஏன், பாடலிலேயே அடுத்த காட்சிக்கான தொடக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.  இல்லாவிட்டால் தொடர்ச்சியை  அன்றைய ரசிகன் உணர முடியாது.

அதேபோல காட்சி மாறும்போது ‘ர்ரீங்’ என்பது போல ஒரு சத்தம் இருக்கும். கதை பின்னுக்கு நகர்ந்தால் அது தெளிவாகவே காட்டப்படும். ஆரம்பத்தில் கொசுவத்திச் சுருள். பிற்காலத்தில் பிம்பம் மீது பிம்பம் ஏறுவது, அணைந்து மீள்வது போன்ற காட்சிகள். கதாபாத்திரம் ஓர் அறைவிட்டு இன்னொரு அறைக்குப் போகவேண்டுமென்றால்கூட அதைக் காட்டியாக வேண்டும். ஒரு கதாபாத்திரம் நல்லவிஷயம் சொல்லப்போகிறதா கெட்ட விஷயம் சொல்லப்போகிறதா என்பதை தனித்தனி  அண்மைக்காட்சிகள் மூலம் காட்ட வேண்டும். வசனத்தில்கூடச் சொல்ல வேண்டும். கதாபாத்திர மனநிலைகளை தெளிவாக வசனம் மூலம் காட்டியாகவேண்டும்.

ஏன், நடிப்புக்கே இந்தச் சிக்கல்கள் இருந்தன. அக்கால நடிப்பு ஏன் செயற்கையாக இருந்தது என்றால் திரையில் உணர்ச்சிகள் தெளிவாக புரியவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது என்பதனால்தான். திடுக்கிடுவது, அதிர்ச்சி அடைவது, துயரப்படுவது எல்லாவற்றையும் முகத்தசைகள் உடலசைவுகள் மூலம் காட்டியே ஆகவேண்டியிருந்தது. தமிழ் ரசிகனின் எல்லை அது.

இந்த எல்லையைப் புரிந்துகொண்டு, நவீன சினிமாவின் சாத்தியங்களையும் தெரிந்துகொண்டு  பின்னணி இசையமைக்க இளையராஜா முன்வந்த ஒரே காரணத்தால்தான் தமிழ் சினிமாவின் காட்சிமொழியை துணிந்து மாற்ற முடிந்தது. இளையராஜா எழுபதுகளின் கன்னடநவசினிமா அலையில் இருந்து நவீனக் காட்சிமொழியின் சாத்தியங்களை நன்றாகப் புரிந்துகொண்டு உள்ளே வந்தவர் என்பதே அதற்குக் காரணம்.

ராஜாவின் பின்னணி இசையை இந்த வரலாற்றுச்சூழலை புரிந்துகொள்ளாமல் எவரும் மதிப்பிட்டுவிடமுடியாது. ராஜாவுக்கு முன்னால் பின்னணி இசையில் இசையமைப்பாளர்கள் கவனம் செலுத்தியதில்லை. அவற்றை அனேகமாக அவர்களின் உதவியாளர்களே அமைபப்பாகள். அவை ‘இ·பக்ட்’ என்ற அளவிலேயே இருக்கும். கதையைப்புரிந்துகொண்டு தொடர்ச்சியான இசை அமைக்கப்படுவதில்லை. மாறாக தனிக்காட்சிகளுக்கே இசை அமைக்கப்படும்.

ராஜா முழுப்படத்துக்கும் மொத்தமாக இசையமைத்தார். படத்துக்கு அதன் சாரம்புரிந்து தீம் இசையை உருவாக்கினார். உதாரணமாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படம் ஒரு குடும்பத்தின் கதைதான். ராஜா தன் தீம் இசை மூலம் அதை அக்குழந்தைகளின் கதையாக அழுத்தம் கொடுப்பதைக் காணலாம். உதிரிப்பூக்கள் தொடர்ச்சியே இல்லாத தனிச்சம்பவங்களால் ஆன படம். பின்னணி இசையே அதை கோர்வையாக கொண்டுசெல்கிறது.

படத்துக்கு ராஜா இசைமூலம் தொடர்ச்சியை உருவாக்கினார். அழுத்திக் காட்டவேண்டியதை அழுத்திக்காட்டினார். உணர்ச்சிகளை திட்டவட்டமாக அடையாளப்படுத்தினார். கதாபாத்திரங்களுக்குக் கூட தனியான இசை அடையாளங்களை உருவாக்கினார். பல படங்களில் இயக்குநர் சொல்ல வருவதைக்கூட இசை விளக்கியது. ‘நிறம் மாறாத பூக்களில்’ கதை முன்னும்பின்னும் நகர்வதை இசைதான் காட்டியது

இந்த வசதியைக் கொண்டுதான் இயக்குநர்கள் திரைமொழியை மாற்றியமைத்தார்கள். மிதமான நடிப்பு போதும் என்ற நிலை வந்தது. செயற்கையான காட்சிமாற்றமும் ‘க்ளூ’ கொடுக்கும் வசனமும் தேவையில்லை என்றாகியது. தன்னுடைய ‘மூடுபனி’ படத்தில் சாதாரணமான ஆரம்பக் காட்சியிலேயே அதை ‘சைக்கோ திரில்லர்’ என ராஜா காட்டிவிட்டார் என்றார் பாலு. இல்லாவிட்டால் அதற்கு நான்கு காட்சிகளை ‘சமைக்க’ வேண்டியிருந்திருக்கும் என்றார்.

ஒரு கலைவடிவம் என்பது அது உருவான சமூக,பண்பாட்டுச்சூழலை ஒட்டி அதன் இடைவெளிகளை நிரப்பியபடி வளர்வது. உலகமெங்கும் முதிர்ச்சி உள்ள விமரிசகர்கள் கலையை அப்படித்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கலையின் நுட்பங்களையும் அதன் வரலாற்றுப் பரிணாமத்தையும் கூர்ந்து அவதானிக்கும் விரிவான ஆய்வுமனநிலை தேவை. இங்கே பொத்தாம் பொதுவாக ‘அமெரிக்காவிலே வேறமாதிரி தெரியுமா?’ என்றவகை எழுத்துக்களே விமரிசனமாக முன்வைக்கப்படுகின்றன. எல்லா தளத்திலும். நம் துரதிருஷ்டம் இது.

அதிலும் குறிப்பாக வெகுஜனக்கலை என்பது  அது எதிர்கொள்ளும் சமூகத்துடனான உரையாடல் வழியாகவே உருவாகக்கூடியது. அச்சமூகத்தின் போதாமைகள நிரப்பிக்கொண்டு உச்சங்களை உள்வாங்கிக்கொண்டு அது முன்னகரும். எந்த இடத்தில் அது கலைஞனின் வெளிப்பாடு எந்த இடத்தில் சமூகத்தின் விழைவின் வெளிப்பாடு என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. அண்டோனியோ கிராம்ஷி முதல் டில்யூஸ் கத்தாரி வரை பற்பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் இது. அக்கப்போர் தளத்தில் இதை அணுகும் பார்வைகள் அபத்தமான விளைவுகளையே உருவாக்குகின்றன.

படத்துக்குப் படம் ராஜா மாறிக்கொள்வதைப் பார்க்கும் எவரும் அவர் எந்த அளவுக்கு இயக்குநருக்கு தன்னை அளிக்கிறார் என்ற வியப்பை அடைவார்கள். ‘புதியவார்ப்பு’களில் உள்ள இசைக்கும் ‘அவள் அப்படித்தா’னில் உள்ள இசைக்கும் உள்ள வேறுபாடுகளையே பார்த்தால் போதும். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட படங்கள். புதியவார்ப்புகளில் பின்னணி இசை பாடிக்கொண்டே இருக்கிறது. அவள் அபப்டித்தானில் அது வெறுமே முனகுகிறது.

திரைமொழி வளர்ந்தபோது காலப்போக்கில் இளையராஜா இசையில் காட்சிகளுக்கு பரஸ்பரத் தொடர்பு கொடுப்பது விளக்குவது போன்றவற்றில் இருந்து முன்னகர்ந்து மேலும் நுட்பமான பல விஷயங்களைச் செய்திருக்கிறார். என்னைப்போன்ற எளிய ரசிகனே உணரும் நுட்பங்கள். பல படங்களில் பின்னணி இசை ஒரு ஆழ்ந்த வேறு பொருளையும் காட்சிக்கு சேர்ப்பதைக் காணலாம்.

இன்றைய யதார்த்த தமிழ் சினிமாவுக்கு ராஜாவின் பங்களிப்பு  என்ன என்பதைப்பற்றி இன்றுவரை விஷயமறிந்த எவரும் எழுதியதில்லை. தகவலறிவுடன், சமநிலையுடன் எழுத நம்மிடம் ஆட்கள் இல்லை. தெரிந்தவர்கள் எழுதுவதும் இல்லை. ஆகவேதான் என்ன ஏது என்றறியாமல் எழுதும் எழுத்துக்களையும், அசட்டு பீற்றல்களையும் நாம் சகித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.

இளையராஜாவின் இசையின் இன்னொரு பக்கம் என்பது அவர் கர்நாடக இசையின் அமைப்பில் செய்த சோதனைகள். அவற்றை அத்துறை சார்ந்தவர்களே சொல்லமுடியும். பத்து வருடம்முன்பு ‘சொல்புதிது’ இதழுக்காக தமிழிசை அறிஞர் நா.மம்முதுவை நான் பேட்டி எடுத்தேன். அப்போது அபூர்வமான ராகங்களுக்கான, ராகங்களை பயன்படுத்துவதில் உள்ள அழகியல்சாத்தியங்களுக்கான நுட்பமான உதாரணமாக அவர் சுட்டிக்காட்டிய எல்லா பாடல்களும் இளையராஜாவின் சினிமாப்பாடல்கள். இளையராஜா தேங்கி அழிந்துவிட்டார் என்று ஷாஜி ‘அறிவித்த’ பிற்காலப் பத்து வருடங்களைச் சேர்ந்த பாடல்கள் அவை. அந்தப்பேட்டி என் ‘இலக்கிய உரையாடல்கள்’ என்ற நூலில் உள்ளது [எனி இண்டியன் பிரசுரம்]

அதன்பின் நான் முக்கியமான பல மரபிசை நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன். ராஜாவின் மிகச்சிறந்த,நுட்பமான இசைப்பின்னல்களுடன் சோதனைநோக்குடன் அமைந்த, படைப்புகள் என அவர்கள் சொன்னபல பாடல்கள் அவர் பிற்காலத்தில் அமைத்தவை. அவர்கள் சொன்ன பல விஷயங்கள் எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் அந்தப்பாடல்கள் வெகுஜன அளவில் பெரிதும் ரசிக்கப்பட்டவை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

உதாரணமாக திருவாரூரைச் சேர்ந்த ஒரு வயதான நாதஸ்வரக் கலைஞர் ஒரு ராகத்தின் அழகை காட்டும் பாடலாக ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாட்டை சுட்டிக்காட்டினார். தாளம் மூலம் அந்த ராகத்தின் காலக்கட்டுமானத்தை எப்படியெல்லாம் மாற்றலாம், ஆலாபனையை எப்படி விசித்திரமாக உடைத்து செய்யலாம் என்பதற்கான அற்புதமான உதாரணமாக அதை அவர் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டே இருந்தார்.

இளையராஜாவின் இந்த தளத்தில் உள்ள சாதனைகளை இந்த தளத்தில் பயிற்சியும் ரசனையும் உடையவர்களே சொல்லமுடியும். மற்றவர்கள் கருத்துச் சொல்லும்போது தங்களுடைய எல்லைகளை உணர்ந்து அதற்குள் நின்று பேசுவதே கௌரவமான விஷயமாகும். வெறும் வம்புதான் நோக்கம் என எண்ணுபவர்களுக்கு எதையும் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் இசைவிமரிசகனுக்கு அவன் பேசுதளம் சார்ந்த புரிதல் இருக்க வேண்டும்.

அனைத்துக்கும் அப்பால் மேதைகளைப் பற்றிப் பேசும்போது நம் எளிய தீர்ப்புகளை அவர்கள் மேல் போடக்கூடாது என்ற அடக்கம் எந்த விமரிசகனுக்கும் தேவை. சாதாரணர்களின் விதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல மேதைகள். உதாரணமாக நா.மம்முது இளையராஜாவின் அதிநுட்பமான பாடல்கள் என்று சுட்டிக்காட்டிய பாடல்களை போட்ட காலத்தில் அவர் வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு இரண்டுபாடல்களைக்கூட போட்டிருந்தார். இதை புரிந்துகொள்வதுதான் விமரிசகனின் வேலையே ஒழிய கலைஞனுக்கு ஆலோசனை சொல்வதல்ல.

தன்வாழ்நாளில் தல்ஸ்தோய் எழுதியது ஒரு குட்டி நூலகம் அளவுக்கு! டாக்டர் சிவராம காரந்த் எழுதிய மொத்த பக்கங்கள் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம்! அவற்றில் இரு முழு கலைக்களஞ்சியத்தொகுதிகளும் அடக்கம். இத்தனையும் எழுதிவிட்டு அவர் யட்சகான நடனமும் கற்றுக்கொண்டு மேடையில் ஆடினார். சிற்பக்கலை குறித்து புகைப்பட நூல்களை வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்காக கிட்டத்தட்ட நூறு வழக்குகளை நடத்தினார். மிச்ச நேரத்தில் இந்திய சட்டநூல்களை கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார். விதிகளை யார் சொல்வது, விமரிசகனா?

வாழ்நாள் முழுக்க பிற எழுத்துக்களை வாசித்த இலக்கிய மேதைகள் உண்டு. தன் சொந்த எழுத்துக்களை அல்லாமல் எதையுமே வாசிக்காத மேதைகளும் உண்டு. வாழ்நாள் முழுக்க அலைந்து திரிந்து அனுபவங்களில் திளைத்த மேதைகள் உண்டு, அறையை விட்டு வெளியே செல்லாதவர்களும் உண்டு. ‘நான் பயணங்களை அறவே வெறுக்கிறேன்’ என்றார் போர்ஹெஸ். வாழ்நாள் முழுக்க பயணங்களை பற்றி எழுதிக்கொண்டுமிருந்தார்.இலக்கியத்தில் என்றல்ல, எந்த துறையிலும் இம்மாதிரி எளிமைப்படுத்தல்களுக்கு இடமில்லை. கலையின் பித்தெடுத்த இயக்க விதிகளை அறிந்த ஒருவன் கலைஞன் எப்படி இயங்கியிருக்க வேண்டும் என சொல்ல துணிவானா? எங்கோ ஒரு இடத்தில் அவனது அகம் கூச வேண்டாமா?

கடைசியாக மீண்டும், இளையராஜாவை மிகக் கடுமையாக கறாராக விமரிசனம் செய்யும் தரமான கட்டுரைகள் இன்னமும் தமிழில் வரவேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். அவருக்கு பாடலின் கவித்துவம் மீதிருக்கும் உதாசீனம் பற்றி எனக்கே கடுமையான விமரிசனம் உண்டு. ஆனால் அந்த விமரிசனங்கள் தங்கள் எல்லையை உணர்ந்த விமரிசகர்களால் சமநிலையுடன் செய்யப்படாவிட்டால் எந்த மதிப்பும் இல்லை.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6473/

47 comments

Skip to comment form

 1. Arangasamy.K.V

  இசைவிமர்சகரின் நண்பராயிருப்பதின் இம்சைகள் மூலம் அறிமுகப்பட்ட ஹாஜி அந்த கட்டுரை மூலம் மிக வருத்தப்பட வைத்து விட்டார் , ம்ஹீம்

 2. venkkiram

  அருமையான அலசல். ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய கட்டுரை இது. ராஜாவின் இசையை போல, இக்கட்டுரையும் நீண்ட நாள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.

  முத்தாய்ப்பாய் முடிக்கப்பட்ட முடிவுரை உச்சம்..
  ————
  கடைசியாக மீண்டும், இளையராஜாவை மிகக் கடுமையாக கறாராக விமரிசனம் செய்யும் தரமான கட்டுரைகள் இன்னமும் தமிழில் வரவேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். அவருக்கு பாடலின் கவித்துவம் மீதிருக்கும் உதாசீனம் பற்றி எனக்கே கடுமையான விமரிசனம் உண்டு. ஆனால் அந்த விமரிசனங்கள் தங்கள் எல்லையை உணர்ந்த விமரிசகர்களால் சமநிலையுடன் செய்யப்படாவிட்டால் எந்த மதிப்பும் இல்லை.
  ————
  மறக்காமல் அதைக் குறிப்பிட்டு, நீங்கள் எனது மனதில் இன்னும் ஒரு படி உயர்ந்த நிலையை அடைந்துவிட்டீர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

  அப்படிப்பட்ட கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்குமானால், நீங்களே அந்தக் கட்டுரையை ஆரம்பித்து வையுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் நிலைமை என்னவென்று? இது இணைய விவாதங்களில் நான் கண்ட உண்மை.

 3. Ramachandra Sarma

  ஹாஜியா? ஆரம்பிச்கிட்டாங்கப்போவ்…!!

 4. sarvachitthan

  ”இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது” என்றார் காந்தி. அந்தக் கிராமங்களின் மூச்சினை இசையாக அளித்ததில் வெற்றிகண்டவர் இளையராஜா அவர்கள்.அவரை அறிந்த உங்களைப் போன்றவர்கள் இது போல் இன்னும் பல கட்டுரைகளை அவரளித்த /அளித்துவரும் இசை குறித்து வெளியிடவேண்டும். இது தமிழுக்கும்,இசைக்கும் மேலும் பெருமைசேர்க்கும்.’இசை நுணுக்கம் அறியாதவன்’ என்னும் பீடிகையோடு ஆரம்பித்த உங்கள் ‘இசை அரசன்’ பற்றிய பார்வை அற்புதம்.

 5. writevishy

  அன்புள்ள ஜெமோ,
  மிகவும் தரமான, ஆழ்ந்த கட்டுரை.

 6. nilavukavi

  இளையராஜா, கட்டை விரல் கேட்டால் திரை உலகத்தில் பலருக்கு கட்டை விரல் இருக்காது. அவர் இசைத்துறையை தாண்டியும் பலருக்கு மானசீக குரு.

 7. gomathi sankar

  என்னுடைய புரிதல் தவறெனில் மன்னிக்கவும் உங்களுடைய எம் எஸ் பற்றிய கட்டுரைக்கும் ஷாஜி கட்டுரைக்கும் உள்ள தார்மீக வித்தியாசம் என்ன இரண்டுமே இரண்டு ஆளுமைகளின் இசை தவிர்த்த வேறு விஷயங்கள் பற்றியும் பேசுகின்றன அல்லவா அடிப்படையான கேள்வி மேதைகளின் குணாதிசயங்கள் பற்றி நாம் பேசலாமா என்பதே கலைஞ்சனை அவனது கலை மூலமாக மட்டுமே அணுகவேண்டுமா என்பதே ஷாஜியின் தவறென நான் நினைப்பது ராஜாவின் இசை குறித்த விமர்னத்துடன் அவரது ஆளுமை குறித்த விமர்சனத்தையும் குழப்பிக்கொண்டதே

 8. prem

  அன்புள்ள ஜெ,

  மிக நீண்ட கால வாசகன் இல்லை நான். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால், அதுவும் வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். என் சம வயதில்( 25) உள்ள எந்த ஒரு நண்பருக்கும் உங்களை பற்றியோ அல்லது குறைந்த பட்சம் வார மலர்களில் உள்ள எழுத்தாளர்கள் பற்றியோ கூட தெரியவே இல்லை.

  ஞாநி, சாரு இவர்களை எனக்கு அறிமுக படுத்தியது நீயா நானா நிகழ்ச்சி தான். அவர்களின் சிந்தனை, பேச்சு என் சிற்றறிவுக்கு புதிதாக படவே, வார இதழ்களில் வரும் அவர்களின் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் பொதுவான விஷயங்களில் தான் கருத்துகளோ விமர்சனங்களையோ அவர்கள் பதிவு செய்திருந்தார்கள். நான் படித்து ரசித்தது அவர்களின் வழக்கு தமிழை, சிறு கிண்டலை தான். கருத்துக்களை அல்ல. ஏனெனில் அவர்கள் எழுதிய எல்லாவற்றை பற்றி ஏற்கனவே எனக்குள் ஒரு கருத்து/ நம்பிக்கை இருந்தது. சொல்ல போனால் அவற்றை மாற்றும் அளவுக்கு அந்த கற்றுரைகளில் ஒன்றும் இல்லை. ஆயினும் ரசித்தேன். அப்படியே மெல்ல சம கால தமிழ் நூல்களை தேடி வாசிக்க ஆரம்பித்தேன். பாரதியின் மூலமாக மட்டுமே தமிழறிந்த எனக்கு(அவருக்கு பின் தமிழின் பிரதிநிதியாக நான் நினைத்தது கண்ணதாசன், வாலி, வைரமுத்து அவர்களை மட்டுமே :):)) தேடி தான் பிடிக்க வேண்டி இருந்தது உங்களையும் ஜெயகாந்தன் போன்றோரையும். இரண்டு/மூன்று வருடங்கள் முன்பு புத்தக கண்காட்சியில் என்னவென்றே தெரியாமல் எடுத்த ஜெயகாந்தனின் புத்தகங்கள் என் பார்வையை புரட்டி போட்டது. எழுத்தின் வலிமையை எனக்கு சொன்னது. மிகவும் ஆர்வமுடன் பல நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவைகள் எனக்குள் செய்த மாற்றங்கள் பல. ஒரு நல்ல மனிதனை, பக்குவபட்ட நிலையை(ஓரளவாவது) அடைய புத்தகங்களை தவிர வேறு வழி இல்லை. அதுவும் தாய் மொழியில் படிக்கும் புத்தகங்கள் என்பது என் நம்பிக்கை.

  ஆனந்த விகடனின் தொப்பி திலகம் – கலகத்தின் மூலமாக தான் நீங்கள் எனக்கு அறிமுகம். அதன் பின் உங்களின் வலைபூவை (அந்த பதிவை முழுமையா படிக்க தான் தேடினேன் முதலில் :)) கண்டு பிடித்து படிக்க ஆரம்பித்தேன். பழைய கோப்புகளில் இருந்து பலவற்றை படித்து நாளுக்கு நாள் பக்குவமடைந்து வருவதாக நம்புகிறேன். உங்களின் தீவிர வசகனவே மாறி விட்டேன்.

  இவற்றை எல்லாம் சொல்வதற்கு காரணம், தமிழ் படிக்க ஆவலாக இருந்த எனக்கே தங்களை எல்லாம் அறிமுக படுத்த நீயா நானாவும், சாரு, ஞானி போன்ற பத்தி எழுத்தாளர்களும் தேவை பட்டனர் என்றால், இன்னுமும் உங்களை அறியாத என் நண்பர்கள் போன்றவரின் நிலை? உங்களை போன்றோரின் சமூகம்/வரலாறு/அரசியல் சார்ந்த நடு நிலையான குறிப்புகளை, உண்மைகளை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள போவதே இல்லை. கணினியும் காசுமே வாழ்க்கையாகி விட்ட இளைஞர் கூட்டத்தை எப்படி சுயமரியாதை, சொந்த வரலாறு, மனிதாபிமானம், சமூக கடமை, தனி மனித ஒழுக்கம், இவற்றை பற்றி எப்படி சொல்லி தர போகிறீர்கள். உங்களை போன்றோருக்கு அந்த கடமை உண்டென்று அழுத்தமாக நம்புகிறேன்.

  அதை விட முக்கியமான ஒன்று சாரு, ஞானி போன்றோரின் அர்த்தமற்ற ஆழமற்ற, வாசிக்க ஆரம்பிக்கும் காலத்தில் சரியாக தோன்றுகிற வார்த்தைகளை தங்களை அறியாமல் ஏற்று கொள்ளும்/ பின் பற்றும்/ நம்பும் தன்மை வர வாய்பிருக்கிறது. எனக்கு மிகவும் வருத்தம். இதை இந்த கட்டுரையின் பதிலாக சொல்லவும் இது தன காரணம்.

  இதற்கு ஒரே வழியாக எனக்கு தோன்றுவது உங்களை போன்ற எழுத்தாளர்கள், குறிப்பாக நீங்கள் மேலும் உங்களை சாமானியனுக்கு அறிமுக படுத்தி கொள்ள வேண்டும். டிவி நிகழ்சிகளில் தான் இபோதைய இளைஞர்களுக்கு நாட்டம். நீங்கள் அதையே செய்தால் நான் வரவேற்பேன்.
  எந்த வகையிலாவது நீங்கள்/ உங்களை போன்றோர் மேலும் மக்களை சென்றடைந்தால் மிகவும் மகிழ்வேன். வெறும் எழுத்துக்களை மட்டும் வைத்து புரட்சியை உண்டு பண்ண இக்காலத்தில் முடியாது. காரணம் படிக்கும் பழக்கம் குறைந்ததல்.

  டிவி நிகழ்சிகளில் பங்கு பெறுவது பற்றி உங்களுக்கு சரியான அபிப்ராயம் இருக்காதென நெனைக்கிறேன். அனால் எதாவது ஒரு ஊடகதின் மூலமாக நீங்கள் மக்களை சேர வேண்டும். எந்த வகையிலாவது நான் அதற்கு உதவுவேன் என்றால் காத்திருக்கிறேன். சுய விளம்பரம் செய்யுங்கள். உங்கள் புத்தகங்களை விளம்பர படுத்துங்கள். சீக்கிரம் அனைவரையும் வந்து சேருங்கள். மிக பெரிய சமுதாய மற்றதின் பொறுப்பு உங்களை போன்றோரிடம் இருக்கிறது.

  இது என் வாழ்வில் நான் எழுதுகிற முதல் கடிதம். என்னெனவோ சொல்ல நினைத்து கடைசியில் குறைந்த பட்சம் அதன் கருவையவது சொல்லி விட்டேன் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன். பதில் வந்தால், என் விருப்பங்கள் நியாயமாய் இருக்கும் பொருட்டு அதை நீங்கள் செயல் படுத்த முயன்றால் மிகவும் மகிழ்வேன்.

  பிரேம்.

 9. Ramachandra Sarma

  கட்டுரை நன்றாகவே இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஷாஜியைப் பற்றிய பொது மதிப்பீடுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் தரப்பை சொல்ல கருத்துக்களுடனான வாதங்கள் போதுமானதாக இருந்திருக்கும்.

 10. SUKA

  http://vallinam.com.my/issue14/column1.html

 11. jeevartist

  http://jeevartistjeeva.blogspot.com/2010/02/blog-post.html

  என் பதிவு!

 12. tamilsabari

  //ஆனந்த விகடனின் தொப்பி திலகம் – கலகத்தின் மூலமாக தான் நீங்கள் எனக்கு அறிமுகம். அதன் பின் உங்களின் வலைப்பூவை (அந்த பதிவை முழுமையா படிக்க தான் தேடினேன் முதலில் :) ) கண்டு பிடித்து படிக்க ஆரம்பித்தேன். பழைய கோப்புகளில் இருந்து பலவற்றை படித்து நாளுக்கு நாள் பக்குவமடைந்து வருவதாக நம்புகிறேன். உங்களின் தீவிர வாசகனாகவே மாறி விட்டேன்.//

  //ஆனால் எதாவது ஒரு ஊடகத்தின் மூலமாக நீங்கள் மக்களை சேர வேண்டும். சீக்கிரம் அனைவரையும் வந்து சேருங்கள். மிகப்பெரிய சமுதாய மாற்றத்தின் பொறுப்பு உங்களை போன்றோரிடம் இருக்கிறது.//

  வழிமொழிகிறேன்.

 13. Ramachandra Sarma

  அப்புறம் என்ன ஜெ, இத்தனை பேர் சொல்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்துவிடலாமா? ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த அதுதான் சிறந்த வழி. நடிகர்கள் கூட அங்கேதான் வந்து நிற்கிறார்கள். (எல்லாரும் வரிசைலதான் நிக்கோனம். தலைவர் கொடுக்கும் பதவியைத்தான் வாங்கிக்கோனம்) :) :) இவ்வாறு அனைவரையும் சேரும் வழி உங்களை நீர்த்துப்போக, சமரசப்படுத்திக்கொள்ள வைக்கும் என்பது உறுதி.

 14. prem

  ramachandra sarma,

  not sure if its a sarcastic note… அனால் சமுதாய மாற்றம் என்று நான் சொன்னது நகைச்சுவையாக தோன்றினும், அதன் உண்மை உங்களை போல் நீண்ட கால வாசகனுக்கு( assumption than) தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இருக்கும் 40 நண்பர்களுக்கு படிக்கும் பழக்கம் இல்லை. சமுதாய எண்ணமும் இல்லை. அதன் அடிப்படியிலேயே எழுதினேன். மாற்றம் என்று நான் சொன்னது ஒவ்வொருவனின் மனதில் ஏற்படும் தெளிவை தானே அல்லாமல் வேறொன்றும் இல்லை.

 15. Arangasamy.K.V

  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் – ஜெயமோகன்

  http://www.jeyamohan.in/?p=6057

 16. prem

  நன்றி அரங்கசாமி,

  ஏற்கனவே அலசி ஆராய்ந்து முடிவு செய்யப்பட்ட விஷயத்தை பற்றி கிளற விருப்பம் இல்லை. இந்த பதிவை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.

  /*வாசகர்களிடம் செல்வதல்ல வாசகர்களை வரவழைப்பதே இலக்கியவாதியின் பணி. வாசகர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வதல்ல, தன் வாசகர்களை மாற்றுவதே அவன் வேலை.
  */

  அவரின் இந்த கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடில்லை. வாசகர்களுக்காக மாற சொல்லவில்லை நான். மாறினால் அவர் இலக்கியவாதியே இல்லை. இன்றைய சூழ்நிலையில் வாசகர்களை வரவழைப்பது என்பது தான் கடினம். முதலில் வாசகனாக அல்லது தமிழ் படிக்கதெரிந்தவனாக இருக்க வேண்டும் அல்லவா. ஆகவே தான் கூறினேன் எதாவது ஒரு வழியில் வந்தடையுங்கள் என்று. உண்மையில் நான் சொல்லும் என் நண்பர்கள் தான் பரிதபதிற்குரியவர்கள். இப்படி எல்லாம் ஒரு களம் இருப்பதை அறியாதவர்கள். அவர்களாக தான் வர வேண்டும் என்பது நியாயமாக பட வில்லை.

 17. mmurali

  Dear JM,

  I like Ilayaraaja’s music and the way he found a ‘good note’ on western classical and indian classical (includes Hnidusthani and Carnatic). I am not an expert – but I am a very keen listener. My comments are not about the cirticism or articles – but on a totally unrelated on.

  I use to find the similarity between Ilayaraaja and Mathematician face strikingly similar. Specifically the younger days of Ilayaraaja.

  I use to have a link the B&W Photograph link of Ilayaraaja – I lost it. I have only the color one. Ramanujan, of course is in B&W. I find the B&W Photos more lyrical

  Here are the links
  http://www.abelprisen.no/aimbilder/cca73bf2e958bad7a0707ef43ab3cf70_vis.jpg/Scale?geometry=320×600
  Srinivasa ramanujan

  http://2.bp.blogspot.com/_bD7IoPbVPM4/Sp4eD_smgaI/AAAAAAAAAjA/OrfStD-n1z4/s1600-h/55.jpg
  Ilayarajaa

  My office network restrictions – allows me to type only in english

  regards
  M.Murali

 18. Sanjeevi

  நல்ல பதிவு ஜெயமோகன்

  இங்கே தன் மன அழுக்கை கொட்டி விமர்சனம் பண்ணுகிறவர்கள் தான் அதிகம், என்ன செய்ய.

 19. Ramachandra Sarma

  //அவருக்கு பாடலின் கவித்துவம் மீதிருக்கும் உதாசீனம்
  ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் எளிதில் விளக்கிவிடும். ஆயிரம் படங்கள் சொல்லவருவதை ஒற்றை வயலின் சொல்லிவிடும்.
  நான் முன்னமே சொன்னதை இப்போதும் சொல்கிறேன். இசைக்கு பாடல் வரிகளோ அதன் கவித்துவமோ தேவையில்லை. இசைக்கு வரிகள் ஒரு பாவனை மட்டுமே. வார்த்தைகளின் தேவைகளைத் தாண்டியது இசை. வார்த்தைகள் சொல்ல முடியாததை சொல்வது இசை. எனவே நல்ல இசைக்கு, வரிகளும், அதன் கவித்துவமும் தேவையில்லை. இசையாலும் சொல்லமுடியாததைச் சொல்வது மௌனம். இது என் நிலைப்பாடு அவ்வளவே.

 20. Ramachandra Sarma

  ப்ரேம் காரு, உங்களுக்குத் தெரிந்த அந்த நாற்பது நண்பர்களுக்கு நீங்கள் தான் அறிமுகப்படுத்தவேண்டும். அதேசமயம், அவர்களுக்கும் அதற்கான தேடுதல் இருக்கவேண்டும். ஆறு மக்களைத்தேடி வருவதில்லை. தாகமெடுத்தவன் அங்கே வந்தே தீருவான். இதற்காகவெல்லாம் தொலைக்காட்சியில் வாருங்கள், ஆனந்தவிகடனில் தொடர்கதை எழுதுங்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது. ;) உதாரணமாக நீங்கள் சொல்வதுபோல தொலைக்காட்சியில் வந்து ஈராறு கால்கொண்டெழும் புரவி மாதிரி ஏதாவது பேச ஆகுமா? இல்லை விஷ்ணுபுரம் இரண்டாம் பகுதி போல பேச ஆகுமா?
  ஜெ முன்னமே சொன்னதுபோல “அனுபவமான ஒன்றை மொழியினூடாக பிறருக்கு அனுபவமாக ஆக்க முயல்வதே என் கலை” என்ற வேலையை நிம்மதியாக செய்யவிடுங்களேன். இவர் பலரைச்சென்று சேரவேண்டும் என்று நினைத்தால் அது நாம் செய்யவேண்டிய வேலை. நாம்தான் தகுதியான நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். செவ்வியல் சார்ந்த கலைஞன் ரசிகர்களை நாடிச்சென்று படைக்கமாட்டான். ரசிகர்கள் அவனை நோக்கி வந்து சேர்வார்கள். சமரசம் என்று தொடங்கிவிட்டால் செவ்வியல் எதற்கு?

 21. kalyaanan

  இப்போது நீங்கள் எழுதிய இந்தக்குறிப்பை வாசிக்கும்போது பல விதமான எண்ணங்கள் மனதில் வருகின்றன. ஏ. ஆர் ரகுமான் அவரது இத்தனை வருட சினிமா வாழ்க்கையிலே ஒரு நல்ல படத்துக்கவது அது நல்ல படம் என்பதற்காக இறங்கிவந்து இசையமைத்திருக்கிறார? ஒரு சின்ன தயரிப்பாளரையவது ஆதரித்திருக்கிறார? ஒரே ஒரு புதிய இயக்குநருக்காவது ஆதரவை அளித்திருக்கிறாரா? இல்லை!

  ரகுமான் ஒரு கனகச்சிதமான பிசினஸ் மேன். எக்ஸிக்யூட்டிவ். பணம் புகழ் அல்லமல் எதைப்பற்றியுமே கவலைப்படத புரபஷனல். அவரது புகழை தூக்கிப்பிடிக்கும் பெரிய பேனர்கள் பெர்ய ஊதியம் இரண்டை மட்டுமே அவர் குறியகக் கொண்டிருக்கிறார். நல்ல கலை ,நல்ல சினிமாஎன்றெல்லம் அலட்டிக் கொண்டதே இல்லை. பக்கா பிஸிமஸ் வழிமுறைகள் வழியக மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறார்

  அனால் முப்பது வருடம் ராஜா நல்ல படங்கலுடன் சேர்ந்து நின்றர். புதியவர்களுக்கு வாய்ப்பளித்தர். அவர்களை ஊக்குவித்தார். அதற்காக பணமும் இழந்தர். இப்போது பாருங்கள் நம் இளைய தலைமுறைக்கு ரகுமான் தான் ஆதர்சமக தெரிகிறர். அவர்தானே வெற்றி பெற்றவர். ஆகவே அவர் தன் நல்ல கலைஞர். இளையரஜா தப்பன ஆள். ஷாஜி ரகுமானைப்பற்றி எழுதிய புகழ்மொழிகளை இங்கே நாம் நினைவிலே கொள்ள வேண்டும்

  அதாவ்து தெளிவாகவே ஷாஜி ஒரு செய்தியைச் சொல்கிறார். கலையாவது மண்ணவ்து./ பணம் இருக்கிறதா வெற்றி இருக்கிறதா நீ பெரிய ஆள். அன்பே உருவனவன். கலைஞன்…. இல்லாவிட்டல் அயோக்கியன்… எல்லாம் மீடியா தொடர்பு உருவாக்கும் மாயவினோதம்!

  ஏ. ஆர் . ரகுமானைப்பற்றிஉ ஷஜி காவியங்களை எழுதி தள்ளுகிறார். ரகுமானை ஒரு புதிய இளைஞர் போகட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் தயரிப்பாளரே சந்திக்க முடியது என்பது எல்லாருக்கும் தெரியும். மாதக்கணக்கிலே காத்திருந்து அவமனப்பட்டு பத்து நிமிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி சந்திக்கவேண்டும். கொடுத்த இசையை கைகூப்பி வாங்கிக்கொன்டு வரவேண்டும். சொன்ன தேதிக்கு ஆறுமதம் கூட தாமதமாகும்…முகம் கொடுத்தே பேசமட்டார்…

  ஆனல் அவர் ரொம்ம்ப நல்லவர் . அன்பே உருவாகி இசையமைப்பவர். ஏனென்றல் வெற்றி. ஆஸ்கர். கிராமி! இளையராஜா அன்பில்லாதவர். எல்லாரையும் சந்தித்து அவமானப்படுத்துபவர். ஏனென்றல் அவர் இப்போது ஓட்டத்திலே இல்லை

  இதுதான் உலகம். ஆனல் இசை விமரிசகர் என்பவர்கள்கூட இந்தமதிரி இறங்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிரது

 22. ஜெயமோகன்

  Hello Jeyamohan sir,

  I am Suresh. I write about Indian film background scores in backgroundscore.blogspot.com. I have been reading your articles on Ilaiyaraaja, his music and his background scores. I am happy that you emphasize more on Raaja’s film background scores when you write about him. The recent one against Shaji’s post is one of your best. You may want to read something I wrote in my blog – Pithamagan and Kaadhalukku Mariyaathai’s background score analysis with l background score audio clips.

  http://backgroundscore.blogspot.com/2008/03/listening-pithamagan.html

  http://backgroundscore.blogspot.com/2008/05/listening-kaadhalukku-mariyaathai.html

  Smile,
  P.S. Sureshkumar.

 23. ஜெயமோகன்

  ஜெ,

  உங்களை சேட்டில் பார்த்ததும் கேட்கத் தோன்றியது…நீங்கள் அப்போது ஆன்லைனில் இல்லை என்று நினைக்கிறேன்…அதனால் இந்த தனிமடல்.

  இளையராஜா பற்றிய கட்டுரை படித்தேன்…நல்ல அலசல்…’ஆட்டமா தேரோட்டமா’ பாட்டு பற்றிய நுணுக்கம் கொஞ்சம் சரியாக இல்லை என்று தோன்றியது…

  எம் எஸ் வி era முடிந்தது இளையராஜா வந்தது போல, இளையராஜாவின் era-வும் முடிவுக்கு வரும்தானே…90-களின் பிற்பகுதிக்குப் பின்னும் ராஜா நன்றாகத்தான் இசை அமைத்தார் என்று நிறுவுவது தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது….

  இளையராஜாவின் பாடல்கள் மூலமாகத்தான் கர்நாடக இசையை என்னால் ரசிக்க முடிந்தது. அவர் பாடல்களை முன்பெல்லாம் வெறித்தனமாய் கேட்டிருக்கிறேன். இப்போது அவ்வளவு மயக்கம் இல்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர் இசைக்கு தீவிர ரசிகன்தான். கடந்த பத்து ஆண்டுகளில் வந்துள்ள அவர் பாடல்களில் உள்ள புதுமைகள் அவர் முன்பு புகுத்தியவைகளைப் பார்க்கும் போது மிகக் குறைச்சல் என்றே தோன்றுகிறது.

  ஒரு பாடலுக்குள் எண்ணற்ற பரிமாணங்களை திணிக்கும் மாயம் காலப்போக்கில் குறைந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

  இளையராஜாவின் ’மனித’த்துக்கும் அவரது இசைக்கும் முடிச்சுப் போடுவது அபத்தமென்பது என் எண்ணம்.

  லலிதா ராம்

  http://carnaticmusicreview.wordpress.com/

  அன்புள்ள லலிதா ராம்

  எப்பவும் ராஜா என்று நிறுவும் நோக்கமெல்லாம் எனக்கில்லை. ஆனால் இசை தெரிந்து மதிப்பிடுவதே உயர்வு என்று நினைக்கிறேன், அவ்வளவுதான்.

  இசை அல்லது இலக்கிய விமரிசனம் அதற்கான ஃப்ரேம் ஆஃப் ரெஃபரன்ஸுக்குள் இருக்கவேண்டும் என்பதே என் கட்டுரையின் இன்ன்னொரு தளம்

  கடைசியாக, போகிறபோக்கில் முடிவுகளைச் சொல்லும் நாம் இன்னமும் இளையராஜாவின் பங்களிப்பை ஒரு குறைந்தபட்ச வரலாற்றுப்பார்வைக்குக் கூட ஆளாக்கவில்லை என்றும் சுட்டுகிறேன். அதைந் ஆம் செய்யாதபோது நம் நிராகரிப்புகளுக்கும் எந்த மதிப்பும் இல்லை

  ஜெ

 24. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ..
  மிக சரியான அளந்தெடுத்த வார்த்தைகளால் ராஜா பற்றிய ஷாஜியின் வழக்கத்துக்கு மாறான கட்டுரைக்கு பதில் தந்திருக்கிறீர்கள்,

  ராஜாவின் இசை பற்றி சரியான பதிவுகள் வராத நிலையில் அவரை character assassination செய்யும் எழுத்தாளர்கள் இனிமேலாவது தங்கள் வன்மத்தை குறைத்து கொள்ளவேண்டும். மிக அருமையான பதிவு.
  என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

  எப்போதும் எல்லா விஷயங்களிலும் குறை காணும் என் இலக்கிய நபர் ஒருவர் உங்கள் பதிவை மிக நேர்மையான பதிவு என்றார்..
  விரிவாக நிறைய உங்களுக்கு எழுத வேண்டும்..chandra mohan

 25. ஜெயமோகன்

  ஜெ,

  நீங்கள் சொல்வது சரி. இளையராஜாவின் பங்களிப்பை பதிவு செய்வது மிகப் பெரிய வேலை. அப்படிச் செய்ய முயன்ற அனுராதா ஸ்ரீராமின் தீஸிஸைப் படித்து இருக்கிறேன். மிக மிகச் சுமாரான ஒன்று.

  2001-ல் இருந்து 2003 வரை நான் அவர் இசையை ஆய்வதில் ஈடுபட்டிருந்தேன்.

  அப்போது அமெரிக்காவில் படித்ததால், சில மேற்கத்திய இசைக் கலைஞர்களுக்கு இளையராஜாவின் இசையைப் போட்டுக் காட்டி, அவர்கள் விமர்சனங்களக் கேட்டுக் கொண்டேன்.

  கர்நாடக இசையை அவர் கையாண்டதைப் பற்றி எழுதியதுதான் என் முதல் எழுத்தாக்கம். (இங்கு பார்க்கலாம்: http://www.tamiloviam.com/html/Isaioviam1.asp – இந்த முதல் சுட்டியிலிருந்து மற்ற சுட்டிகளுக்குத் தாவ முடியும்…அப்போது யூனிகோட் வராத காலம். திஸ்கி எழுத்துருவில் படிக்க முடியும் என்று நினைக்கிறேன்). இந்தக் கட்டுரைகள் ராஜாவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை அல்ல என்ற போதும், நிறைய பாடல்கள் அவருடையதே.

  அதன் பின், என் கவனம் வேறு விஷயங்களுக்கு சென்றுவிட்டது.

  லலிதா ராம்

  என் கடித்தை மதித்து பதில் போடுகிறீர்கள். நன்றி. இதை எல்லாம் உங்கள் வலைத்தளத்தில் போடுவானேன்?

  88888

  பொதுவாக ஒரு விவாதம் பல தளங்களாஇ நோக்கி சிந்தனையை நகரச்செய்யும். ஆகவே கடிதங்களுக்கு ஒரு முக்கியமான பங்கலிப்பு உள்ளது

  மேலும் உங்கள் கருத்துக்கள் – இணைப்புகள் வாசகர்களுக்கு உதவலாமே

  ஜெ

 26. Karthik Nagarajan

  லலிதா,

  அனுராதா ஸ்ரீராம் இன் ஆராய்ச்சி ஒரு புருடா வேலை. அது சும்மா பல்வேறு இதழ்களில் வந்த கட்டுரைகளின் கட் அண்ட் பேஸ்ட் வேலை. எனக்கு தெரிந்தவரை அவர் இன்னொரு வைரமுத்து……..தப்பாக நினைக்க வேண்டாம் உள் தகவல்கள் தெரிந்தவன் என்ற விதத்தில் சொல்கிறேன்

  நன்றி
  கார்த்திக்

 27. krishnan ravikumar

  எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை. பாலகுமாரன் அரட்டை அடிக்கிறார் என்று எழுதியிருந்ததற்கு கோவப்பட்டு சிறிது நாள் உங்கள் தளம் பக்கம் வரமால் இருந்தேன். ஆனால் இன்று கட்டுரையை படித்து மனம் அயர்ந்து விட்டது. வாழ்க நீவீர் பல்லாண்டு. உங்கள் எழுத்து தமிழின் வரம். நன்றி.

 28. stride

  போகிற போக்கில் சாருவை தாக்கி விட்டீர்கள் சரி. ஆனால் கடைசியில் மனுஷ்யபுத்திரனையும் ஒரு போடு போட்டது நியாயமா? நீங்கள், சாரு, மனுஷ் நடத்தும் முக்கோண காதல் கதையில் ஷாஜியையும் சேர்த்து சதுரமாக ஆக்கிவிட்டீர்கள். சதுரத்தில் நடைபெறும் கதை கதையே இல்லை என்பது என் எண்ணம் :)

  ஷாஜி இளையராஜா மீது வைக்கும் விமர்சனத்தில் சில எனக்கு உடன் பட்டதாக இருந்தாலும் அவர் விமர்சித்த விதமும் தனி நபர் தாக்குதலும் சரியாக இல்லை. பதிலுக்கு நீங்கள் ஒரு விமரிசகன் எப்படி இயங்க வேண்டு என்று பாடமே எடுத்து விட்டீர்கள். நீங்கள் கூறியதில் எனக்கு முக்கியமானதாக கருதுவது இது தான் “ஒருவரை பாராட்டும்போது சமநிலைகுலையலாம், எதிர்க்கும்போது நம் சமநிலையைப்பற்றி மேலும் மேலும் கவனம் கொள்ளவேண்டும். அம்மாதிரி சமநிலை இல்லாமல் நானும் பலவற்றை ஆரம்பகாலத்தில் எழுதி பின்னர் வருத்தப்பட்டிருக்கிறேன்.”

  முன்பு பசும்பொன் பற்றிய கடிததுக்கு எழுதிய பதிலில் நீங்கள் “நான் ஒரு விஷயத்தை எழுதும்போது அதனால் என்ன பயன் என்றே சிந்திக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்டவிதமாக காட்டும்பொருட்டு எழுதுவதில்லை. குற்றம்சாட்டியோ தூண்டிவிட்டோ எழுதுவதனால் என்ன பயன்?” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கருத்து எழுதும் எவருக்கும் முக்கியமான வரையறைகள் இவை இரண்டும். கடினம் தான் ஆனாலும் நான் அதை கடைப்பிடிக்க முயலுகிறேன்.

  எனக்கு இசை ஞானம் சிறிது கூட கிடையாது. ஆனாலும் ஒரு பார்வையாளனாக நான் ராஜாவை பார்க்கும் போது குறைகளாக தெரிவது, ஒன்று – நீங்களே சொன்னது தான் – பாடல்களில் கவித்துவம் பற்றிய கவனமே இல்லாமலிருப்பது. இது என்னைப்பொறுத்த வரை மிகப்பெரிய குறை, இரண்டு – சினிமாவை மட்டுமே சார்ந்து இசையமைத்தது, மூன்று – அளவுக்கதிமாக இசைஅமைத்தது – 900+ படங்கள். மூன்று குறைகளுமே ராஜா சினிமா உலகை விடாமல் அதிலிலேயே உழன்று இருந்ததினாலேயே என்று எனக்கு தோன்றுகிறது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சினிமா மூலம் பெரும் பணமும் புகழும் பெற்று விட்டார். அவரால் சினிமாவுக்கு வெளியில் இசை அமைத்திருக்க முடியும். இல்லாத காரணம் அவரே தான் சொல்ல வேண்டும். எனக்கு தோன்றுவது அவருக்கு இசைஅமைக்க தூண்டுவது அவரிடம் வந்த இளம் இயக்குனர்களும் அவர்கள் இயற்றிய படங்களின் காட்சியமைப்பும் தான். சிட்டுவேஷனுக்கு பிரமாதமாக இசையமைத்தார். சினிமா தூண்டுதல் இல்லாமல் தானாக இயைந்து இசைஅமைக்க அவரால் முடியுமா என்று எனக்கு கேள்வி எழுகிறது. இங்கே ரஹ்மானும் நூறு படங்களுக்கு மேல் இசைஅமைத்து இன்னமமும் பெரும்பாலும் சினிமாவிலேயே இயங்கி கொண்டிருப்பதால் அவரிடமும் இதே கேள்வி எழுகிறது.

  மற்றும் ஷாஜியின் தனி நபர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ராஜா பல இயக்குனர்களை காப்பாற்றினார், காசு வாங்காமலேயே இசைஅமைத்தார் என்று நீங்கள் கூறினாலும் சாதாரண இசை ரசிகன் என்ற நோக்கில் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனி நபர் வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தாலும் அவர் இசை முன்பு அப்படி இப்போது எப்படி என்று மட்டுமே என்னால் பார்க்க முடியும். இல்லாவிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராகி விடுவார் ராஜா.

  கடைசியில் இளையராஜா என்று வரும்போது மட்டும் தங்கள் எழுத்தில் சர்வதேச இசையுடன் ஒப்பிட மறுக்கும் ஒரு உள்ளோட்டம் எனக்கு தெரிகிறது.(இல்லை என்றால் அது என் பிழை தான்). அது ஏன் என்று புரியவில்லை. இலக்கியத்தில் மட்டும் அடிக்கடி டால்ஸ்டாய், டாஸ்டயெவ்ஸ்கி, போர்ஹெஸ் என்று குறிப்பிடுகிறீர்கள். அவர்களுடன் தமிழ் எழுத்துக்களை ஒப்பிட்டு நீங்கள் பார்த்துக்கொள்வதாக நான் நினைக்கிறேன். ராஜா என்றால் மட்டும் தமிழ் நாட்டுப்புற இசை பண்பாடுடன் ஒற்று நோக்கி பார்க்க வேண்டும் என்று கூறுவதாக நாம் புரிந்து கொள்கிறேன். அவரின் இசையை கறாராக சர்வதேச தரத்துடன் ஒப்பிட ஏன் தயங்குகிறீர்கள்? உதாரணமாக இளையராஜா வயதே ஒத்த பாப் டிலனை எடுத்துக்கொள்ளலாம். நாற்பது வருடத்தில் 60 இசை தொகுதிகளே வெளியிட்ட அவர் சாதாரண அமெரிக்க நாட்டுப்புற இசையில் தானே இயற்றிய பாடல்களை இசைக்க அரம்பித்து பின்னர் ப்ளூஸ், ஜாஸ், ராக் அண்ட் ரோல் போன்ற இசைகளை பயன் படுத்தி ஒரு லெஜெண்ட் ஆகிவிட்டார். அவருடன் ராஜாவை ஒப்பிட்டு இசை, சமூக பங்களிப்பு பற்றி பேசுவது தப்பில்லையே.

  நன்றி

  சிவா

 29. lalitharam

  ஜெ,

  7-8 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகளுக்கு சுட்டியை உங்களுக்கு அனுப்பியதும், ஒரு முறை அவற்றைப் படித்துப் பார்த்தேன். 2-3 கட்டுரைகளில் பிழைகள் உள்ளன (உதாரணமாக சிம்மேந்திர மத்யமத்தை கீரவாணி என்றுள்ளேன்).

  கார்த்திக்,

  எனக்கு உள்குத்து தெரியாது. ஆனால் தீஸிஸ் ரொம்பவே சுமார்:-)

 30. mmurali

  Dear JM,

  Quick comment on Siva’s – Not a criticism – Just an observation.

  This only highlights the comment that JM had made earlier – not enough people had written about Ilayaraaja’s music in depth. Even with in Cinema as the industry and Film Music as the framework.

  On Music – Perhaps, few topics are written about his handling of carnatic music. His presentation in relation in western classical – one could say, almost nothing is written. Few exceptions being, agilan’s blog. His inspirational influence appears in songs and BGM – mainly from JS.Bach, and few from Mozart – this way again he leaned more with traditional music compare to the more contemporary – like John adams, or John Cage or even Philip Glass
  On classical literature we have the references to the Global efforts, only because, someone had spent time and effort to write about it. Such effort is needed in the Indian film music world and contribution from Ilayaraaja needs to be at least recorded- one may criticize the music, however one has to keep in mind that it is necessary to maintain civility.

  Outside film world – Actors attempting on drama is very popular in western world. In a limited fashion, Sivaji and Sundararajan (Major) had done this. This must have sharpened their presentation in film (I guess). I think, in film music, earlier to Ilayaraaja – no attempt was made – exceptiion – thillana – by Shyam with Lalgudi Jeyaraman,

  However, I think, it is important to note that ‘How to name it?’ and ‘Nothing but Wind’ are notable effort on presenting Carnatic, Folk and western classical. Thiruvasagam is also notable oratory work – There are some comments I have – about changing the text for the music – That may not be relevant here.

  I am not sure about his contribution, related to blue grass, or Jazz adaptation. or even Rock and Roll.

  I think his strength is more in understanding the harmony of traditional music. This way, he probably should look at Australian aboriginal music, Native American music that have long tradition. If we were to construct an opera ever – in the line of Puccini – like taking in silappathikaram for Opera work – I am very positive Ilayaraja can do this.
  If we were to present the world classical traditions to Ilayaraaja, his response to that, musically is really worth listening to.

  I do think this blog is useful to discuss these matters

  thanks and regards
  M.Murali

 31. Ramachandra Sarma

  நம்ம ஏன் எப்பவுமே சிலப்பதிகாரம் இல்லாட்டி குறள் இது ரெண்டப்பத்தி மட்டுமே பேசிகிட்டு இருக்கோமுன்னு தெரியல. ஏன் கம்பராமாயணம், பெரியபுராணம், நானூறுகள் என எல்லாமே ஓபராவிற்கு தகுந்ததுதானே. ஏன் காளிதாசனை எடுத்து செய்யக்கூடாதா? இன்னும் தமிழ்நாட்டின் பௌத்த ஹேங்ஓவர் நீங்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

 32. appavi

  ஷாஜியின் கட்டுரை முழுக்க ராஜாவை பற்றி அவரின் தனிப்பட்ட காழ்புனற்சியே தெரிந்ததே ஒழிய அவரின் இசையை பற்றி பேசியது மிக மிக குறைவு.இசைக்கும் மனித நேயத்திற்கும் முடித்து போட்டதை விட ஒரு நகைச்சுவை இருக்க முடியாது.எம் ஜி ஆர் பல குடும்பங்களை வாழ வைத்தார் ஆதனால் சிவாஜியை விட எம் ஜி ஆர் சிறந்த நடிகர் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவும் அக்கட்டுரையில்..
  மேலும் ராஜாவின் தனிப்பட்ட மத நம்பிக்கையை தாக்கும் விதத்தில் இவர் எழுதியது மத துவேஷமேயன்றி வேறேதும் இல்லை.
  இவர் ஒரு இசையமைப்பாளரை புகழ வேண்டுமெனில் அவரின் பெயர் “ஜான்” இல் ஆரம்பிக்க வேண்டும்,அல்லது அவர் ஆஸ்கார் வாங்கியிருக்க வேண்டும்.மற்றவர்களெல்லாம் இசையைமைப்பலரே அல்ல .

 33. Ramachandra Sarma

  ஷாஜியின் கட்டுரை குறித்து நாம் இந்த அளவுக்கு விவாதிப்பது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஷாஜிக்கு மேலும் ஒரு நல்ல அறிமுகமும் ஹிட்ஸும் கிடைக்க உதவலாம். ஆனாலும், இவ்விஷயத்தில் ஷாஜி ஒரு வெளிப்படையான விவாதத்திற்கு தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. அவர் சொன்ன கருத்துக்களுக்கு இத்தனை எதிர் வாதங்கள் வரும்பொழுது, அவரது நிலைப்பாட்டை விளக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. அவரோ வாயைத்திறக்கமாட்டேன் என்கிறார். அவரது தளத்திலும் இதுகுறித்து எதுவும் எழுதவில்லை. அப்படியிருப்பின் இது வெறும் தரமற்ற விளம்பரத்திற்காகவும், அதிர்ச்சிக்காகவும் செய்ததாகவே நான் கருதுவேன். அவரைப்போன்ற ஒரு அறியப்பட்ட ஆளுமைகள் ஒரு கட்டுரையை எழுதிவிட்டு சும்மானாச்சுக்கும் இருப்பது தவறு. இதை முடிந்தால் அவரித்தே சொல்லுங்கள்.

 34. appavi

  அவர் சொன்ன கருத்துக்களுக்கு இத்தனை எதிர் வாதங்கள் வரும்பொழுது, அவரது நிலைப்பாட்டை விளக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. அவரோ வாயைத்திறக்கமாட்டேன் என்கிறார்.///

  சரியாக சொன்னிர்கள் Ramachandra Sarma .நான் இது குறித்து அவருக்கு ஒரு நீண்ட ஓர் கடிதத்தை அவருக்கு அனுப்பினேன்.ஆனால் அவர் அளித்த பதில் “I dont know what to say”.
  நீங்கள் கூறுவது போல் ஹிட்ஸ் பெறுவதற்காகவே இவ்வாறு அவர் வசை பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது.
  மேலும் அவருக்கு ஒரு அனுகூலம் என்னவெனில் அவரை பற்றி இதுவரை தெரியாத(பெரும்பாலானோருக்கு அவரை தெரியாது .அந்தளவு அவர் பிரபலம்!!)வாசகர்களும் அவரை பற்றி(நாம் உட்பட)விவாதங்கள் பல வலைதளங்களில் சூடாக நடந்து கொண்டிருக்கிறது.இது வெறும் விளம்பரதுக்குக்காகாவே.பத்திரிகை விற்க கிசு கிசு போடுபவர்க்கும் இவருக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

 35. mmurali

  Sure.. We will patronize any laudable effort opera related to Tamil literature – Thembavani – and Seerappuranam included – We can positively extend our true secular orientation here with our multifaceted expressions in poetic tradition

  Thanks and regards
  M.Murali

 36. perumal

  எனது நண்பன் ஒருவன் சொன்னான், ”இளையராஜா தான் முன்பு போட்ட ஹிட்டான ஒரு மெட்டை பா படத்தில் பயன் படுத்தியுள்ளார்.இனிமேல் அவர் தமிழில் போட்ட அருமையான மெட்டுக்கலையே ஹிந்திப்படத்திலும் பயன்படுத்த ஆரம்பித்தால் ஷாஜியின் நண்பரான ரகுமானுக்கு ஹிந்தியில் மவுசு இருக்காது. அதனால் தான் அவர் இளையராஜா மீது கோபத்தில் இருக்கிறார். என்று.”
  எனக்கு நண்பன் சொன்னதில் உடன்பாடு இல்லை. இருந்தாலும் அவன் சொன்னதை இங்கு தெரியப்படுத்துகிறேன். நிற்க

  குணா படத்தில் வரும் ”கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடல் அவரின் பிற்காலத்தில் போட்டது தானே? அந்த பாடல் அவரின் ஆகசிறந்தது இல்லையா?

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 37. usha sankar

  Dear Jayamohan,
  Ungalin indha padhiviruku – vambu thanamana kelvigal varum podhu, avaigaluku ellam neengal bhadhil solla vendam enbadhu en karuthu.

  am Usha Sankar. IR Fanatic.

  pona varudam , oru naalil, ungalin
  blog paarka nerndhadhu.
  Adhil – Tharamangalam, Salem Dt, kovil patri ezhudhi irundheergal.
  Andha oor dhan ennudiaya oor. Andha kovilin arugil dhan engalin veedu.
  apozhudhae ungaluku bhadhil koduka ninaithen.Anal, ungalin blog ai
  tholaithu vitten.
  Adhan pin, ipodhu dhan, IR in indha padhivil dhan ungalin blog ai
  parka nerndhadhu.

  shaji ku – Ganniyamana oru bhadhil dhan thandhu irukireergal.
  Adharku ennudiaya Nanri.

  Tharamangalam patriya padhivai – engae parpadhu. Thedi parthen. kandu pidika theiryavillai.

  With Love,
  Usha Sankar.

 38. Arangasamy.K.V

  தாரமங்கலம் -http://www.jeyamohan.in/?p=641

  தளத்தில் தேட லிங்கை அழுத்தி தமிழில் தேடினால் அடையலாம் .

  இந்த கமண்ட் பெட்டியிலேயே தமிழில் டைப் செய்யும் வசதி உள்ளது

  Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g) டிக் மார்க் இருந்தால் amma என டைப் செய்து ஸ்பேஸ் பார் அழுத்தினால் அம்மா என தமிழில் வரும் ,

  jeyamookan=ஜெயமோகன் .

  ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் மாற Ctrl+G உபயோகியுங்கள் .

 39. Ramachandra Sarma

  //அந்த பாடல் அவரின் ஆகசிறந்தது இல்லையா?

  இல்லை. அதில் எந்த ஒரு கலாசாரத்தின் பிரதிபலிப்பும் இல்லை. அது இசை தரப்பிலும் சிறந்தது என்று ஒத்துக்கொள்ள முடியாது. அதை விட பல மடங்கு சிறந்த பாடல்கள் அவர் தந்துள்ளார். (எல்லா மெலடி பாட்டும் நல்ல பாட்டல்ல)

 40. perumal

  to Ramachandra Sarma சார்,

  அந்த பாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அது எனக்கு தீவிரமான ஒரு அனுபவத்தை கொடுத்தது.ஏனென்றால் எனக்கும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 41. Sanjeevi

  >>
  //அந்த பாடல் அவரின் ஆகசிறந்தது இல்லையா?

  இல்லை. அதில் எந்த ஒரு கலாசாரத்தின் பிரதிபலிப்பும் இல்லை. அது இசை தரப்பிலும் சிறந்தது என்று ஒத்துக்கொள்ள முடியாது. அதை விட பல மடங்கு சிறந்த பாடல்கள் அவர் தந்துள்ளார். (எல்லா மெலடி பாட்டும் நல்ல பாட்டல்ல)
  <<

  கண்மணி அன்போடு நல்ல இசை கிடையாதா? அப்படியே பகல்ல வெளிச்சம் இருக்காது, பணிக்கட்டியுல தண்ணி இல்லைன்னு சொல்ல வேண்டியது தான!

 42. Pulikesi

  ///கடைசியில் இளையராஜா என்று வரும்போது மட்டும் தங்கள் எழுத்தில் சர்வதேச இசையுடன் ஒப்பிட மறுக்கும் ஒரு உள்ளோட்டம் எனக்கு தெரிகிறது.///

  ///உதாரணமாக இளையராஜா வயதே ஒத்த பாப் டிலனை எடுத்துக்கொள்ளலாம். நாற்பது வருடத்தில் 60 இசை தொகுதிகளே வெளியிட்ட அவர் சாதாரண அமெரிக்க நாட்டுப்புற இசையில் தானே இயற்றிய பாடல்களை இசைக்க அரம்பித்து பின்னர் ப்ளூஸ், ஜாஸ், ராக் அண்ட் ரோல் போன்ற இசைகளை பயன் படுத்தி ஒரு லெஜெண்ட் ஆகிவிட்டார். அவருடன் ராஜாவை ஒப்பிட்டு இசை, சமூக பங்களிப்பு பற்றி பேசுவது தப்பில்லையே. ///

  சிவா,

  முதலில் இந்த ஒப்பிடல் எதற்க்கு என்று தெளிவுபடுத்துங்கள். மேலும் இந்த ‘சர்வதேசத்தரம்’ என்றால் என்ன என்றும் சொல்லி விடுங்கள்.

  டிலன் அமெரிக்க நாட்டுபுற இசையை முன்னெடுத்தார் என்றால் ராஜா தென்னிந்திய நாட்டுபுற இசையை முன்னெடுத்தார். ராஜாதான் கிராமிய , நாட்டார் மற்றும் ஒடுக்கபட்ட மக்களிசையை பரவலாக எடுத்து சென்று அதற்க்கு சமூக அங்கிகாரம் வாங்கி தந்தார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தானே. இதை நாம் டிலனோடு ஒப்பிட்டு பேசிதான் புரிந்து கொள்ள வேண்டுமா என்ன? ஒரு கலைஞனை அவர் வாழும் செயல்படும் சமூக பின்னனியில் தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர இப்படி தொடர்பில்லா ‘சர்வதேச’ இசைஞர்களோடு ஒப்பிட்டு அல்ல.

  அப்படி ஒப்பிட துவங்கினால் எங்கு தான் நிறுத்துவது? டிலன் ஒரு புர்ஷ்வா புரட்சியாளர் என்பதை கத்தாரோடும் கோவனோடும் ஒப்பிடுகையில் புரிந்து கொண்டு நிராகரித்து விடலாமே. இந்த ஒப்பீடு, குறிப்பாக ‘சர்வதேச’ தரத்தோடு, எனும் இப்போலியான செய்கை இன்னும் அடிமை மன நிலையில் இருந்து நாம் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது.

  எந்த வித தரவுகளும் இல்லாமல், ஃபிரான்ஸில் பாலியல் வல்லுறவுகள் இந்தியாவை விட குறைவு என்று ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ என வெள்ளையர்கள் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு எழுதி தள்ளும் மனநிலைக்கும், இப்படி நமது கலைஞர்களை ‘சர்வதேச’ கலைஞர்களோடு ஒப்பிட்டு இசை, சமூக பங்களிப்பு பற்றி பேச வேண்டும் என்று நினைப்பதற்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  புலிகேசி

 43. Ramachandra Sarma

  //ஏனென்றால் எனக்கும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
  இதிலேயே தெளிவு கிடைத்துவிட்டதல்லவா? இதற்கு இசையல்ல காரணம் உங்கள் அனுபவம் அதை விரிவுபடுத்தியிருக்கிறது. அந்த மாதிரியான காட்சியமைப்பு இல்லையென்றால் உங்களுக்கு அப்போதும் இந்த பாடல் பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

 44. perumal

  to Ramachandra Sarma சார்

  நான் சொல்லவந்ததை தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
  அப்படத்தின் காட்ச்சியோடு அந்தப்பாடலை கேட்பதை விட அப்பாடலை மட்டும் தனியாக கேட்க்கும் பொழுது நான் அந்த பரவச உணர்வை அடைந்தேன். நான் அடைந்த அனுபவத்தை இன்னும் ஒரு உயர்ந்த தளத்தில் அப்பாடல் எனக்கு ஏற்படுத்தியது.

  அப்பாடலின் கடைசியில் வரும் ”லா லலா லா லால லால லா” என்பதைக்கேட்டுப்பருங்க்களேன் உங்களுக்கு அது ஒரு சிறந்த இசையாக தெரியும்.

  என்னை பொறுத்தவரையில் ராஜாவின் பாடல்களை கேட்க்கும் இடமும் மிக முக்கியம். தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு கிராமத்தில் திருவிழா சமயங்களில் கேட்க்கும்பொழுது அப்பாடல்கள் நமக்கு இன்னும் அதிகமான இன்பத்தை பரவசத்தைதரும். ”நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்”‘என்ற பாடலை ஏதாவது ஒரு கிராமத்தில் இரவில் கேட்டுப்பாருங்கள். அவரின் பாடல்களில் பாடலின் இடையில் ஒரு இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கும் தருணங்கள் எவ்வளவு சந்தோசத்தை தருகிறது. உதாரணத்திற்கு ”நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் பாட்டில் இடையில் நின்று மலேசிய வாசுதேவன் மீண்டும் ஆரம்பிக்கும் இடத்தை அந்த கிராமத்தின் இரவில் இருந்துகொண்டு கேளுங்கள். ”தண்ணீர் கேட்கும் ஒ பெண்ணே தாகம் தனுஞ்சுதா”என்று ஆரம்பிக்கும் இடம். இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 45. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ.,
  இளையராஜா பற்றிய உங்கள் நீண்ட கட்டுரை அருமை. எனினும் சமீப காலமாக இளையராஜா தனது கலை உந்து சக்தியை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ‘பாரதி’ படத்துக்குப் பின் ‘நான் கடவுளில்’ தான் அவர் இருப்பது தெரிந்தது. இந்த இடைவெளிக்கு என்ன காரணம்? திறமையான கலைஞனை யாரும் புறக்கணித்துவிட முடியாது. அதுவும், தமிழ்த் திரையுலகை இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனது ஒருவரை அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிவிட முடியாது. அப்படி இருக்கும்போது, ‘இசை அலைஸ் இளையராஜா’வுக்கு என்ன ஆனது? அவரது படைப்பாற்றல் எங்கு போனது? ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் வரும் ஏற்றத்தைத் தொடரும் இறக்கமா இது? இளையராஜாவை மட்டுமே இசைஅமைப்பாளராக கொண்டிருந்த பலர் மாறியது, மாற்றிக்கொண்டது, அவர் மீதான நம்பகத் தன்மை குறைந்ததால் தானா?
  இவை விமர்சனங்கள் அல்ல; நம் கண் முன்னால் புறக்கணிக்கப்பட்ட மேதை மீதான அன்பில் எழும் கேள்விகள்.
  இப்போதும் கூட, ரஹ்மானுடன் ஒரே வரிசையில் நின்று பத்மபூஷன் விருதை வாங்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். ரஹ்மான் பெற வேண்டிய புகழை முன்கூட்டியே பெறுகிறார்; இளையராஜா மிக பின் தங்கிப் பெறுகிறார். இதிலும் அரசியல் இருக்கிறது. ஷாஜி எழுதிய ‘இளையராஜா: நேற்றும் இன்றும்’ வெளியான உயிர்மை இதழிலேயே ‘யோகி: கலையும் திருட்டும்’ என்ற சாருவின் கட்டுரையும் வந்தது. இதிலும் சமன் செய்யும் உத்தி இருக்கிறது. மொத்தத்தில் உயிர்மை பேசப்பட்டது.
  எது எப்படியோ, இளையராஜாவே எதிர்பாராத வகையில் உங்கள் கட்டுரை வெளிவந்துவிட்டது. ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கிறது. //விதிகளை யார் சொல்வது, விமரிசகனா?// என்ற உங்கள் கேள்வியில் தொனிக்கும் ஆவேசம், எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. நன்றி.
  -வ.மு.முரளி.

 46. Ramachandra Sarma

  // சமீப காலமாக இளையராஜா தனது கலை உந்து சக்தியை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

  இந்த விஷயம் குறித்தே எனக்கும் லலிதாராமுக்கும் விவாதம் வந்து வார்த்தைகள் தடித்துவிட்டது. நான் சொல்வது இதுதான், சச்சின் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆடியதுபோல ஏன் இப்போது ஆடவில்லை என்று கேட்பது எப்படியோ அப்படியிருக்கிறது என்று சொன்னேன். காலம் தொட்டு மனிதனின் குணங்களும், சிந்தனை முறைகளும் மாறுபடுகிறது. அனுபவம், பொறுப்புகள் அதிகமாகும்போது நிதானமும் வந்துவிடுகிறது. இளமையில் செய்த வித்தைகள் செய்யமுடியாமல் போகிறது.

  கலைஞனுக்கும் அதேதான் நடக்கிறது. இப்போது நிதானமும், பொறுப்புமான இசையை இளையராஜா வழங்கிவருகிறார். அவை தரத்திலும் முன்னதைவிட சற்றும் குறைந்ததல்ல. இப்படிச்சொல்லலாம் முன்பு 75% ஃப்ரீக்கிங் இருந்தது இப்போது 75% க்ளாஸ் இருக்கிறது. அதுதான் வித்யாசம்.

  இளையாராஜாவை இசை சன்யாசம் மேற்கொள்ளச்சொல்வதற்கும், சச்சினை ஓய்வு பெறச்சொல்வதற்கும் பெரிய வித்யாசம் இல்லை. அவ்வப்போது அவர்கள் தங்களை மக்கள் வேண்டும் விதத்திலும் நிறுவிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன? நமக்கு அதை புரிந்து கேட்கும் பொறுமையும், அனுபவமும் இல்லாமல் போவது நமது சாபமே. லலிதாராம் சொன்னார், நான் ஓய்வுபெறச்சொல்வது சச்சினை அல்ல கவாஸ்கரை என்று. அத்தோடு முடிந்தது.

 47. dearchandran

  அன்புள்ள ஜெ.மோ.,

  இந்த உரல் படிக்கவும். உங்கள் கருத்தோடு ஒத்து உள்ளது

  http://www.vallinam.com.my/issue14/column1.html

Comments have been disabled.