வெண்முரசு வெளியீட்டு விழா இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
நவம்பர் 9, ஞாயிறு இந்திய நேரம் மாலை 5 மணி முதல் 9 மணி வரைக்கும் நடக்கவிருக்கும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா இணையத்தில் நேரடியாய் ஒளிபரப்பப்படவிருக்கிறது.
உலகமெங்கும் உள்ள நண்பர்கள் நிகழ்வை கண்டு மகிழ இது வகை செய்யும். உங்கள் இணைய இணைப்பும் கணினி அல்லது பிற இணைய தொழில் நுட்பசாதனங்கள் யூ டியூப் போன்ற அசைபட தளங்களில் படம் பார்க்கும் வகையில் இருந்தால் போதுமானது.
தமிழின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பும் Purple Stream எனும் நிறுவனம் இதை ஒழுங்கு செய்கிறார்கள் (http://www.purplestream.com/index.html)
இதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.