முதற்கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

நான் உங்கள் வாசகர்களில் ஒருவன். நான் முதன் முதலில் படித்த உங்கள் ஆக்கம் – விகடனில் வந்த சங்க சித்திரங்கள் ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்ததாக ஞாபகம்.  எனக்கு இளம் பிராயத்திலிருந்தே படிக்க பிடிக்கும். சிறுவர் மலரில் ஆரம்பித்து விகடனில் வந்த தொடர்கதைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். வீட்டில் விகடனும் தினமலரும் வாங்குவோம். இரண்டுமே உங்களுக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன் :-). அப்போது எல்லாம் வாரமலரில் தீவிர இலக்கியம், தீவிர இலக்கியவாதி போன்றவற்றை கிண்டல் செய்வார்கள். அதை எல்லாம் படித்த போது இலக்கியம் எல்லாம் அறுவை, இலக்கியவாதிகள் ஒன்றும் புரியாத மாதிரி வேண்டும் என்றே எழுதுபவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன். சங்க சித்திரங்கள் படித்த பின் அந்த எண்ணம் மாறியது. It was fantastic. என் அப்பா , அம்மா எல்லாம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் �®!
 �ானà
� . ஆனால் அத்தனை காலமும் அவர்கள் படித்தது விகடனும் குமுதமும் அதில் வந்த சுஜாதாவின் தொடர் கதைகள் மட்டுமே. அவர்கள் வெகு ஜன வாசிப்பாளர்கள். அவர்களும் சங்க சித்திரங்கள் நன்றாக இருந்ததாக சொன்னார்கள். இப்படி வெகு ஜன வாசிப்பாளர்களுக்கு இலக்கியத்தை – இலக்கிய தரமான எழுத்தை நீங்களும் விகடனும் அறிமுகம் செய்தீர்கள். நீங்கள் இப்போது விகடன் பின்னோக்கி செல்வதாக உங்கள் வலை தளத்தில் சொல்லி இருந்தீர்கள். ஆனால் எனக்கு என்னவோ உங்கள் பக்கங்களின் வெற்றியால் தான் இப்போது எஸ். ராமகிருஷ்ணன் , இதற்கு முன்னால் வந்த நாஞ்சில் நாடன் பக்கங்கள் எல்லாம் விகடனில் வருவதாக தோன்றுகிறது. இந்த பக்கங்கள் தான் விகடனில் சிறந்தவை. அந்த வகையில் நீங்கள் ஒரு முன்னோடி தான். இது உங்கள் எழுத்து  வாழ்வின் முக்கியமான மைல் கல் / சாதனை என்று தோன்றுகிறது.

அதற்கு அப்புறம் கல்லூரி சென்றேன். அங்கே நண்பன் பாலகுமாரனை அறிமுகம் செய்தான். கல்லூரி முடித்து சென்னையில் வேலை கிடைக்கும் வரை பாலகுமாரன், சுஜாதா, கல்கி போன்றவர்களின் ஆக்கங்களைப் படித்தேன். Mostly from lending libraries. அப்புறம் பிரபஞ்சன், ஜெயகாந்தன் என்று ஆரம்பித்தேன். வித்தியாசம் புரிந்தது. இப்படியே ரசனை மாறி கடைசியில் போன வருடம் நடந்த புத்தக விழாவில் உங்கள் “ஆழ் நதியை தேடி” , “கண்ணீரை பின்-தொடர்தல்” – இரண்டையும் வாங்கினேன்.
உங்கள் எழுத்தில் உங்கள் சொல் ஆளுமை நன்றாக தெரிந்தது. ஆழ் நதியை தேடியில் காதல் பற்றிய கட்டுரை என்னை ‘vow’ சொல்ல வைத்தது. “கண்ணீரை பின்-தொடர்த”லில் நீங்கள் எழுதிய எழுத்தை படித்து அதனை புத்தகங்களையும் படிக்க ஆவல் ஏற்பட்டது. இருந்தாலும் டிவி-யால் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதால் ஒரு சில குறிப்பிட்ட புத்தங்களை மட்டும் வாங்குவதென்று முடிவு செய்தேன். புத்தக விழாவுக்கு திரும்ப சென்று கொல்லபடுவதில்லை வாங்கினேன். யயாதி, சிக்க வீர ராஜேந்திரன், ஆரோக்ய நிகேதன், ஏணிப்படிகள் போன்றவற்றை தேடிக் கொண்டிருக்கிறேன். பதேர் பாஞ்சாலியைப் பற்றிய கட்டுரை பரவசப்படுத்தியது. ஆனாலும் எனக்கு விஷ்ணுபுரம் வாங்குவதிலும் படிப்பதிலும் தயக்கமே இருக்கிறது. அதை படிக்கும் அளவுக்கு நான் வளர்ந்த பின் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

இடையில் ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு, ஒரு மனின் ‘ வாங்கினேன். என் லெவெலுக்கு அது மகா அறுவையாக இருந்தது. உங்கள் ஆருயிர் நண்பர்(!) சாருவின் ௦ 0 டிகிரி வாங்கி – it went straight to the dust bin. அது நல்ல புத்தகமாக இருக்கலாம்; எனக்கு அவ்வளவு எதையும் தாங்கும் இதயம் எல்லாம் இல்லை – புத்தகங்களுக்கும் censor certificate like ‘A’/’R’ கொடுக்கலாம். என்னை போன்றவர்கள் காசை தெண்டம் பண்ணாமல் இருக்கலாம். என் இலக்கிய வாசிப்பு தரத்தை பற்றி சொல்ல தான் இந்த ஒரு புத்தகங்கள் பற்றி. I hope to improve.

நீங்கள் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு காரணம் சொல்லி எழுதிய பதில் கட்டுரையில் போகிற போக்கில்  பாலகுமாரனையும் பெப்சி உமாவையும் ஒரே வார்த்தையில் ‘அரட்டையாளர்கள்’ என்று சொல்லி விட்டீர்கள். இப்படி பொத்தாம் பொதுவாக எதையாவது சொல்லி சிலரின் எரிச்சலுக்கு ஆளாகிறீர்கள். பாலகுமாரன் தமிழ் சான்றோர் பற்றி சுவையான கதைகள் எழுதி இருக்கிறார். வரலாற்றில் இருக்கும் விஷயங்களை சாண்டில்யன் போல் முழு கற்பனையாக எழுதாமல் ரியலிஸ்டிக்-ஆக எழுதி இருக்கிறார். இவரும உமா-வும் ஒன்றா?

ஆயிரத்தில் ஒருவன் பற்றி உங்களுக்கு எழுதியவர்கள் பாலகுமாரன் கதைகளை படித்திருந்தால் அந்த கேள்விகளையே கேட்டிருக்க மாட்டார்கள். பாலகுமாரன், சுஜாதா எல்லாம்  வெகு-ஜன எழுத்தாளர்கள் தான். ஆனால் அவர்களும் ராஜேஷ்குமாரும் ஒரே ரகம் அல்ல. ராஜேஷ்குமார், சுபா எல்லாம் தமிழில் படிக்க ஆரம்பிப்பவர்ளு க்கு ஒரு ஆரம்பமாக இருப்பவர்கள். பாலகுமாரன், சுஜாதா அடுத்த தளம். நீங்கள், ஜெயகாந்தன், பிரபஞ்சன், எஸ்.ரா எல்லாம் அடுத்த தளம். அவர்களை படிக்காமல் உங்களை வந்தடைய முடியாது. அந்த அர்த்தத்தில் அவர்கள் மிக முக்கியமானவர்கள். நேரடியாக முனைவர் பட்டம் வாங்க முடியாது. பாலகுமாரன் போன்றவர்கள் இளங்கலை பாடம் போன்றவர்கள். அதற்கு உண்டான மரியாதையையும் இடத்தையும் நாம் அளிக்க வேண்டும்.

PS: I have typed this in gmail’s Tamil composer. I could not get your personal email-id. So, I am just posting through what your blog gave me. If ever you want some part of this to appear in your blog, I request you to keep it anonymous – if your policies allow  so or post it with the Tamil version of my name below. You match my frequency, Indian-ness, Gandhism etc – நான் நம்பும விரும்பும் சிலவற்றை பற்றி நீங்கள் எழுதுவதால் தான் எனக்கு உங்களுக்கு கடிதம் எழுத தோன்றியது. நான் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் எழுதியது இல்லை. வாசகர் கடிதம் கூட எழுதியது இல்லை. எழுதுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம் இந்த இணையத்தின் வேலை.

நன்றி,
செ. விவேக்.

அன்புள்ள விவேக்

உங்கள் கடிதத்தில் ஒரு முதல்கடிதத்துக்கு மட்டுமே உரிய ஆர்வம், தயக்கம்,குழப்பம் ,மொழிச்சிக்கல் எல்லாம் உள்ளது. ஆகவே இப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுகிறேன்.

முதல் விஷயம் பெப்சி உமா பாலகுமாரன் போன்றவர்கள் என நான் சொல்லவில்லை. பெப்சி உமா முதல் பாலகுமாரன் வரை என இரு எல்லைகளாகச் சொல்லியிருந்தேன். பாலகுமாரனும் அந்த அரட்டைக்குள்தான் பெரும்பாலும் இருக்கிறார். ஓர் உய்ரநிலையில் தமிழ்ச்சமூகம் அரட்டைநிலையில் பேசவிரும்பும் ஆண்பெண் உறவு, ஆன்மீக விஷயங்களை அதே நிலையில் திருப்பித்திருப்பி பேசுகிறார். அவரது ‘உடையார்’ விதிவிலக்கான ஆக்கம் என்று என் நண்பரும் நல்ல வாசகருமான மரபின் மைந்தன் முத்தையா முதலியோர் சொன்னார்கள், இன்னமும் வாசிக்கவில்லை.

வாசிப்பு என்பது ஒன்றைப்பற்றி ஒன்றை நிராகரித்து மேலேறுதல். அது நிகழ வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவடக்குமுகம் ( நாடகம் ) 2
அடுத்த கட்டுரைதேடுபவர்கள்