சத்யார்த்தியின் நோபல் -ஐயங்கள்

இந்த இணைப்பை குழுமத்தில் நமது நண்பர் அனுப்பியிருந்தார், சந்தேகத்திற்கு இடமானவாறு தான் உள்ளது.

கலைமாமணி , சாகித்ய அகாடமி, நிதிக்காக எழுதுபவர்கள், தான்னார்வத் தொன்டு நிறுவனம் நிறுவி செயல்படுபவர்கள் ,யானை டாக்டரில் வருவது போல பத்மஸ்ரீ , இப்படி எல்லா விருதுகளும் லாபியில் முந்துபவர்களுக்கே என்றாகிறபோது நமது விஷ்ணுபுரம் விருதும் எப்போது இந்த நிலைக்கு முன்னேறும். விஷ்ணுபுரம் தேர்வுக் கமிட்டி என ஒன்றை வெளித்தெரிகிறவாறு விளம்பரப் படுத்தி அதில் என் பெயரையும் சேர்க்க வேண்டுகிறேன். என்னையும் அணுகட்டுமே ))

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்

நான் இப்பரிசைப்பற்றி மலையாள இதழாளர்களிடம் கேட்டபோது சந்தேகமாகவே பதில் சொன்னார்கள். அவர் களப்பணியாளர் அல்ல. அவரது அடையாளம் ஐயத்துக்குரியது, அவர் சொல்லும் தரவுகள் பொய்யானவை என்றே நாலைந்துபேர் சொன்னார்கள். அவரைப்பற்றிய செய்தியிலேயே அதைச்சுட்டியிருந்தேன்.

நேற்று ஒரு ஐரோப்பிய நண்பர் விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதை நாளை வெளியிடுவதற்காக வைத்திருக்கிறேன். இந்தக் கட்டுரையும் அதனுடன் இணைகிறது

உண்மையில் சத்யார்த்தி பெற்றிருக்கும் விருதுகளின் பட்டியலும் சேகரித்துள்ள நிதியின் அளவும் பயமூட்டுகிறது. என்ன செய்தார் என்றால் பெரும்பாலும் ‘போராட்டங்கள்’ நடத்தினார் என்கிறார்கள். அவரது சேவை பற்றி மதுகிஷ்வர் போன்ற மதிப்புக்குரியவர்களின் கருத்துக்களும் மேலும் ஐயமூட்டுகின்றன

இந்த விருதின் மூலம் சர்வதேச அளவில் இரு விஷயங்கள் தான் நிறுவப்படுகின்றன என்றனர். ஒன்று, இங்கே குழந்தைத் தொழிலாளர் உழைப்புதான் பொருளியலின் விசையாக உள்ளது. அதை ஒழிக்க ஐரோப்பா போராடுகிறது. இரண்டு, இங்குள்ள இதழாளர்களும் அறிவுஜீவிகளும் எவரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. சத்யார்த்தியை அவர்களுக்குத் தெரியவே தெரியது. அவரை கண்டடைந்தது ஐரோப்பா

அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்தியாவின் பிரச்சினைகளை இந்தியர்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். என் வரையில் ஒன்றும் சொல்வதற்கில்லாத நிலையே உள்ளது.

ஜெ

 

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன்,நீலம்-கடிதம்
அடுத்த கட்டுரைவெண்ணைக்கண்ணன்