நோபல் பரிசுகள்

Kailash_Satyarthi

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்,

இந்த வருட உலக அமைதிக்கான நோபல் பரிசு நமது நாட்டைச்சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி,அவர்களுக்கும்,அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா அவர்களுக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறீவீர்கள்.இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவெனில்,60வயதான திரு.கைலாஷ் அவர்கள் தனது 26 வயது முதல் சிறுவர்,சிறுமியர்களை பணியில் ஈடுபடுத்துவதை எதிர்த்தும்,அவர்களுக்கு முறையாக கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அமைதியாக காந்தீய வழியில் ஒரு சமூக இயக்கம் நடத்தி வந்துள்ளார்.இந்த 34 வருடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து அறவழியில் பல போராட்டங்களை நடத்தி வந்தும் ,அவர் செய்து வரும் சிறப்பான பணிகளை பாராட்டி இது அவரை,அவர் சொந்த மாநிலமான மத்திய பிரதேச அரசோ அல்லது மத்திய அரசோ ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை.இவரின் இந்த சேவையை ஊடகங்கள் கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.இருப்பினும் நோபல் பரிசுக்குழு இவரை தேர்ந்து எடுத்திருப்பதை வெகுவாக பாராட்ட வேண்டும்.

எனது சந்தேகம் என்னவெனில், இந்த சூழ்நிலையிலும் இவர்கள் தங்கள் ஊக்கத்தை இழக்காமல் பணி புரிவது எப்படி?. இது சம்பந்தமாக வந்துள்ள செய்தியின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்
http://tamil.oneindia.in/news/india/the-award-gives-me-more-strength-power-says-nobel-peace-laureate-212699.html#slide138231

நன்றி,

அன்புள்ள,

அ.சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

திரு சத்யார்த்தி அவர்களைப்பற்றி மலையாள இதழ்களில் வாசித்திருக்கிறேன். அவர் ஒரு களப்பணியாளர் என்பதைக்காட்டிலும் அமைப்புகளை நிறுவி நடத்துவதில் வல்லவர் என்பதே என் எண்ணமாக இருந்தது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காக அவர் உருவாக்கிய சட்டநடவடிக்கைக்கான அமைப்புகள் சர்வதேசக் கவனம்பெற்றவை. இந்த அளவுக்குமேல் அவரைப்பற்றி அதிகம் தெரியாது. அவரது முக்கியத்துவமே இந்தப்பரிசினால்தான் தெரியவருகிறது

அமைதிவழிப்போராட்டம் ஒன்றை முன்னின்றுநடத்தும் ஒருவர் பரிசுபெற்றது மகிழ்ச்சிக்குரியது.

ஜெ
malala-1

ஜெ,

மிகச்சிறியவயதிலேயே விருதுபெற்றிருக்கும் மலாலா பற்றி என்ன நினைக்கிறீர்கள். வாழ்நாள் சாதனைக்கான விருதை இத்தனை சிறியவயதிலேயே அளிக்கலாமா?

ரஃபீக்

அன்புள்ள ரஃபீக்

அமைதி விருது பலசமயம் குறியீட்டுரீதியானது. மலாலா கல்விக்கான ஓர் அறைகூவல். ஆப்ரிக்காவுக்கும் அரபுநாடுகளுக்கும் அவருடைய ஆளுமையே பெரிய குறியீடு அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைபாலுணர்வெழுத்து- சாரு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்