«

»


Print this Post

நான் கடவுள்


நான் வசனம் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு  தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநராக தேசிய விருது பாலாவுக்கு அளிக்கப்படுகிறது. பாலாவுக்கு நண்பராகவும் இணைந்து பணியாற்றியவர் என்ற முறையிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6350/

11 comments

Skip to comment form

 1. uthamanarayanan

  சந்தோஷம்..தனக்கும் தன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சி அடையும் தருணம் இனிமையானவை.ஒரு முயற்சிக்கு பணம் தாண்டி சில இலக்குக்களை அடையும் போது மகிழ்ச்சி மன நிறைவு தரும் ; அது போன்ற தருணம் இது. வாழ்த்துக்கள்.
  உத்தம்.

 2. kuppan_yahoo

  பாலாவிற்கும் ஒப்பனை கலைஞருக்கும் மற்றும் அந்த படத்தின் குழுவினர்க்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

  உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள், நீங்கள் பணி புரிந்த முதல் படமே (ஏழாவது உலகமும்) தேசிய விருது அளவிற்கு சென்றமைக்கு.

  பாலா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 3. tdvel

  இது ஜெயமோகனின் முதல் படம் அல்ல என நினைக்கிறேன். இப்படத்தின் சிறப்பான அம்ஸங்களான பிச்சைக்காரர்களின் கொடுமையான வாழ்க்கை சூழலையும், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் தம் வாழ்வை சுவாசஸ்யப்படுத்திக் கொள்வது போன்ற காட்சிகள் ஏழாம் உலகத்தில் இருப்பதாகும். ஆகவே இவ்விருதின் பாராட்டுதல்களை ஜெயமோகன் அவர்களுக்கும் நீட்டித்துக்கொள்வது சரியானதும் அவசியமானதுமாகும்.

 4. ponmaha

  படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  நான் முதலில் படத்தைப் பார்த்த பிறகு, சில வாரங்களுக்கு முன்புதான், ஏழாம் உலகம் புத்தகத்தை வாசித்தேன். படித்த பல நாட்களுக்கு மனதின் ஒரு மூலையில் கதையின் ஏதேனும் ஒரு பகுதி ஓடிக் கொண்டே இருந்தது.

  புத்தகத்தை வாசிக்கும்போது, படக் காட்சிகளுடன் அதை ஒப்பிட்டுக் கொண்டேதான் வாசித்தேன். நீங்கள் மனதில் நினைப்பதைத் துல்லியமாக எங்களையும் உணர வைத்து விடுகிறீர்கள். அது உங்களுடைய பெரிய பலம்.

  நீங்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, எங்கள் வானொலிக்காக, உங்களை சில நிமிடங்கள் பேட்டி எடுத்திருக்கிறேன். தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்தை வாசித்து வருகிறேன். முன்னைக் காட்டிலும் எனக்கு இப்போது பக்குவம் கூடிவருவது போல உணர்கிறேன்.

  இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், உங்களையும் எஸ். ராமகிருஷ்ணனையும் பெட்டிக்குள் திணித்து எடுத்து வந்து விடுகிறேன்.
  வாழ்க்கையில், எனக்குத் தெரியாத பக்கங்களைத் தெரிய வைத்து வருகிறீர்கள்.
  மிக்க நன்றியுடன்,
  பொன். மகாலிங்கம்.

 5. tamilsabari

  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

 6. ஜெயமோகன்

  வணக்கம்.

  நான் கடவுள் பெற்ற இரு வெற்றி ( டைரக்டர் பாலா, மற்றும் மேக்கப் மூர்த்தி ) குறித்து சந்தோஷம் மற்றும் வாழ்த்துக்கள்!

  நண்பர்கள் வட்டத்தில் நான் கடவுள் நிச்சயம் டைரக்ஸனுக்கு நேசனல் அவார்ட் பெரும் என்று சொல்லிவந்தேன். உங்களுக்கும் எழுதியிருக்கலாம்.

  ஏழாம் உலகம், நான் கடவுள் வேறுபாடுகள் ஒற்றுமைகள் குறித்து நீங்கள் ஏதாவது போஸ்ட் போட்டீர்களா ?

  அவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துவிடுங்கள்.

  நன்றி.


  விஜயஷங்கர்
  பெங்களூரு
  நன்றி விஜயசங்கர்

  நான் கடவுள் பற்றி நிறையவே எழுதியிருந்தேன். குறிப்பாக இது பாலாவுக்கு மிக முக்கியமான படம் என்று. அது கொஞ்சநாள் கழித்து அதன் பாக்ஸ் ஆபீஸ் சச்சரவுகள் முஇந்தபின்புதான் தெரியவரும் என்று…

  ‘நான் கடவுள்‘ பாலாவின் ஆகச்சிறந்த படம் என்றுதான் நான் நினைக்கிறேன். அது சேது போல பழகிப்போன காதல் கதையோ, பிதாமகன் போல பழகிப்போன பழிவாங்கும் கதையோ அல்ல. இதன் சிக்கல் உறவு, மரணம் எல்லாவற்றையும் வேறு ஒரு நோக்கில் சொல்வது. இது காட்டும் உலகம் நாம் கொஞ்சம்கூட அறியாதது. ஆகவே இதை பேசிப்பேசித்தான் உள்வாங்கிக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட காலத்துக்குப் பின்னர் இந்தப்படத்தில் இன்றைய நிறைவின்மையோ சிக்கலோ உணரப்படாது.

  ஜெ

  http://www.jeyamohan.in/?p=1869
  http://www.jeyamohan.in/?p=1873

 7. john

  நீங்கள் பாலாவுக்கு வாழ்த்துச் சொல்வது இருக்கட்டும். பாலா விருது பற்றி பேசும்போது ஒரு இடத்தில்கூட மறந்தும் உங்க பெயரைச் சொல்லவே இல்லையே.. ஆரியா, பூஜா, ஆர்தர்வில்சன், மேக்கப் மூர்த்தி கூட வந்தவர்கள், நின்றவர்கள் எல்லார் பேரையும் சொல்கிறார். ‘ஏழாம் உலகம்’ உங்களுடைய சிரிஷ்டி. நீங்கள் எழுதிய ஒரே உருப்படியான நாவல். அது இல்லாவிட்டால் நான் கடவுள் ஒரு சுமாரான சண்டைப்படம். இந்த விருதுக்கு உங்கள் பங்கு ஒன்றுமே இல்லையா?

 8. மதி.இண்டியா

  திரு.ஜான்,

  பாலாவின் சதியை கண்டுபிடித்து கொடுத்தமைக்கு நன்றிகள்.

  தமிழ்ஹிந்து எனும் மதவெறி தளத்தில் ஏழாம் உலகம் எனும் இந்து மதவெறி புத்தகத்துக்கு வெங்கடசாமிநாதன் எனும் மதவெறியர் விமர்சனம் எழுதியிருப்பதை என்ன எழுதியிருக்கிறது என்றே படிக்காமல் ஜெமோவுக்கு படித்து மகிழும்படி சிபாரிசு செய்த மகானாயிற்றே ,

  இதற்கும் இதே வழியில் ஒரு காரணம் கண்டுபிடித்து சொன்னால் வெளங்கும்

 9. ஜெயமோகன்

  அன்புள்ள ஜான்

  இதர்கு முன் ரப்பர்தான் என் ஒரே நல்ல நாவல் என்று நீங்கள் எழுதிய நினைவு. ஒன்று கூடியிருப்பதில் சந்தோஷம்
  ஜெ

 10. kapilan

  அய்யா ஜெ.மோ,

  நான் கடவுள் வசனம் என்றால் உங்கள் பெயர் வருகிறது. ஆனால் பாலா உங்கள் பெயரை வெளிப்படையாக மற்ற கலைஞர்களை போல குறிப்பிடுவதில்லை. ஏன்? வசனம் என்பதில் உங்களின் பங்கு மிகவும் குறைந்த அளவா?

  உங்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அது இடத்திற்கு தகுந்தால் போல பேசுதல். அடாவடி முறையில் வந்த நான் கடவுளை உயர்த்தும் அதே வேளையில், பெரியாரின் குறிக்கோள் அடாவடியானது, அவரின் கோட்பாடுகள் காந்தியக் கோட்பாடு போல் எக்காலத்திற்கும் உகந்தது அல்ல என்ற அலசல் வேறு. ஒரு காந்திய வாதியாக உங்களால் நான் கடவுளில் பரவியிருக்கும் அடாவடித் தனங்களை அணுக முடியுமா? உண்மை, சத்தியம், அஹிம்சை தான் எனக்கு முக்கியம் என்று கூவும் நீங்கள் நான் கடவுளை உச்சியில் வைப்பது முரண். எனக்காக ஒன்று செய்ய முடியுமா? நீங்கள் பாலாவின் இடத்தில் இருந்தால், நான் கடவுளை எப்படி கொண்டு செல்லக் கூடும்?

  நீட்டி மொழுகாமல், உங்களிடமிருந்து தீவிர விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

 11. M.A.Susila

  அன்பு ஜெ.எம்.,
  குருவணக்கம்.
  தாங்கள் பணியாற்றிய ‘நான் கடவுள்’ ,இயக்குநருக்கான தேசிய விருது பெற்றமைக்கு மகிழ்ச்சி.
  ஏழாம் உலகத்தையும்,நான் கடவுளையும் இணைத்து நீங்கள் நிறையப் பதிவுகள் இட்டிருந்தாலும்,ஒரு வாசகி என்ற முறையில்
  ‘ஏழாம் உலகமும் நான் கடவுளும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய வலைப் பக்க இணைப்பை உங்கள் வாசகப் பார்வைக்கு முன் வைக்க வேண்டுகிறேன்.
  http://masusila.blogspot.com/2009/02/blog-post_28.html
  நன்றி

Comments have been disabled.