ஆத்திசூடி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே கட்டுரை படித்தேன். நகைச்சுவை என்ற தலைப்பு இல்லாவிட்டால் அதை சீரியஸாக எடுத்துக் க்கொண்டு விடுவார்கள் நம் மக்கள். ஏனென்றால் நம்முடைய ஆராய்ச்சிகள் இப்படித்தான் இருக்கின்றன. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். தொல்காப்பியம் பற்றிய  XXX ஆராய்ச்சி, திருக்குறளை சிறுநீர்நோக்கில் ஆராய்ச்சி போன்றவற்றைப்பற்றி. இது அதில் ஒரு வகை, அவ்வளவுதான். திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று ஒரு துண்டுப்பிரசுரம் படித்தேன். அதில் 25 குறள்களை உதாரணமாகச் சொல்லியிருந்தார்கள். ஆதிபகவன் என்றால் பரிசுத்த ஆவியும் பிதாவும் என்று விளக்கியிருந்தார்கள். ஐந்தவித்தான் என்றால் ஐந்து காயங்கள் கொண்ட ஏசு. பொறிவாயில் ஐந்தவித்தான் என்றால் சிலுவையில் தொங்கியவன். பொறி என்றால் சிலுவை.

நான், துண்டுப் பிரசுரம் தந்தவரிடம்  வாலறிவன் என்றால் ஏசுவாக இருக்கலாமோ, அது ‘wall அறிவன்’. ஏனென்றால் ஏசுதான் சுவர்களில் படமாகதொங்குகிறார் என்று சொன்னேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர் முக்ம் மலர்ந்து உண்மைதான். ஆவியின் வல்லமையால்தான் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது என்று சொன்னார். இந்த மக்கள் எவருமே பைபிளைத்தவிர எதையுமே படிபப்தில்லை. வருஷக்கணக்காக பைபிளையே படிப்பதனால் அதன் சிறு சிறு வசனங்கள் கூட இவர்களுக்கு மனப்பாடம். பிற்பாடு எதைப்படித்தாலும் அது பைபிளில் இருப்பதாக தோன்றுகிறது. ‘தினமணி’ படிக்கலாம் அது ஒரு கிறித்தவரால் உருவாக்கப்பட்ட பத்திரிகை. தினமணி என்றால் சர்ச் மணிதானே என்று இன்னொரு நண்பரிடம் சொன்னேன்.அவரும் சிரிக்காமல் ‘அப்படியா?’என்று ஆச்சரியப்பட்டார். இவர்களை எண்ணி பரிதாபப்படும்போதெ இவர்களை இப்படி வைத்திருக்கும் மதத்தலைமைகளை எண்ணி எரிச்சலும் கொண்டேன்

பாண்டிச்சேரியில் இந்தபிரச்சாரம் மிகவும் அதிகம். உச்சகட்ட வேடிக்கை இதை இங்குள்ள தமிழறிஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே. ஏனென்றால் குறள் உலகப்பொதுமறை என்பதற்கான ஆதாரமாம் இது. குறள் குர்-ஆன் தான் என்று இவர்களே எழுதிவிடுவார்கள் போல தோன்றுகிறது

சண்முகம் சிவா

***

அன்புள்ள ஜெ,

உங்கள் கட்டுரை சரியான நக்கல். ஆனால் அந்த நக்கலைவிட அதிகமாக காமெடியாக தெய்வநாயகம் குழுவினர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? நீங்கள் காமெடியாக எது சொன்ன்னாலும் அவர்கள் உண்மையாகச் சொல்வதை நெருங்க முடியாது. தேவகலா எழுதிய நூலில் [ பார்க்க ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023. கத்தோலிக்க ஆயரின் ஆசியுரையுடன் வந்திருக்கும் நூல் ] உள்ள கேள்விபதில்களில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. சைவர்கள் பூசும் சாம்பல் [விபூதி] ஏசுவே. ஏசு பழைய நூல்களில் புனித சாம்பல் என்று சொல்லப்பட்டிருக்கிறார். இந்துக்கள் போடும் சந்தனப்பட்டை மரத்தில் உருவான சிலுவையை குறிக்கிறது. அதன் நடுவே போடும் குங்குமப்பொட்டு அதில் ஏசுவில் ரத்தம் வழிவதைக் காட்டுகிறது. வைணவர்கள் போடும் நாமத்தில் உள்ள வெள்ளைப்பட்டை புனித கோப்பையை அல்லது சிலுவையை குறிக்கிறது.நடுவே உள்ள சிவப்பு கோடு ஏசுவின் ரத்தம் அதில் வழிவதைக் குறிக்கிறது. இதை அறியாமல் இன்று சைவ வைணவர்கள் அவற்றை அணிகிறார்களாம்…. இவர் கூட்டிய சென்னை மாநாட்டில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் பெரிய பட்டைநாமம் போட்டு வந்திருந்தார்…! பாவம் அவருக்கு அவர் சுமக்கும் சிலுவையைப்பற்றி ஒன்றுமே தெரியாது..

கணேசன்
சென்னை

XXX’ தொல்காப்பியம்

மருந்தென வேண்டாவாம்!

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்
அடுத்த கட்டுரைபயணம்,குடி :கடிதங்கள்