வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமான பெயர். மரபணுச்சிக்கலால் விளைந்த குணப்படுத்த முடியாத தசைச்சுருக்க நோயால் [ Muscular Dystrophy] பாதிக்கப்பட்டவர்கள் இருவரும். கடுமையான வலியுடன் போராடி விரைவாக முற்றிவரும் நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
ஆனால் ஒருபோதும் தளராத ஊக்கமும் தணியாத வாசிப்பார்வமும் கொண்டவர்கள். அவர்களுக்கிணையான வாசகர்களை நான் குறைவாகவே கண்டிருக்கிறேன். தங்கள்நோயையும் வலியையும் சகமனிதர்களுக்குச் சேவைசெய்வதற்கான முகாந்திரமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சென்ற சில வருடங்களாக அவர்கள் தனிச்சிறப்புக் கவனத்தைக் கோரும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றிவருகிறார்கள். அக்குழந்தைகளுக்குத் தேவையான பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும் தேவைப்படுபவர்களுக்கு உதவவும் ஆதவ் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்
அதற்காக ஒரு நிரந்தர இடம் பார்த்து கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக இப்போது முயன்றுவருகிறார்கள். அதற்கான நிலத்தை வாங்குவதில் ஐந்துலட்சம் ரூபாய் வரை நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்கள்.
அவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவவிருக்கிறேன். வாசகர்களில் இப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் வானதியுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று கோருகிறேன்.
நம் சூழலில் உயர்ந்த விஷயங்கள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. எதிர்மறை விஷயங்களுக்காகச் சலித்துக்கொள்ளும் நாம் உயர்ந்த விஷயங்களை பொருட்படுத்தாமல் கடந்துசெல்லவும் செய்கிறோம். எப்போதும் நிகழும் அந்த உதாசீனம் இம்முறையாவது நிகழக்கூடாது என விரும்புகிறேன்
கூடுமானவரை இச்செய்தியை பகிரவேண்டுமெனவும் கோருகிறேன்
இப்பணிகளில் நீங்கள் எந்த வகையில் பங்கேற்க இயலும் என்பதை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுகூறவும்,
வானவன் மாதேவி – 9976399403
இயல் இசை வல்லபி – 9488944463
நிதி உதவி செய்ய விரும்புவோர் “Aadhav Trust” என்ற பெயருக்கு காசோலை / வரைவோலையாக
Aadhav Trust
489-B ,Bank stop colony,
Hasthampatty,Salem-636007. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
அல்லது
CANARA BANK – Suramangalam branch,
A/c Name : AADHAV TRUST,
S.B A/C- NO : 1219101036462,
IFSC CODE : CNRB0001219.
என்ற வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு தாங்கள் பெயர் மற்றும் தெளிவான முகவரியை தொலைபேசி எண்ணுடன் எங்களது தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected] என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
Face Book Page – https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615
Website : aadhavtrust.org
இப்படிக்கு,
இ.வானவன் மாதேவி
(தலைவர், ஆதவ் டிரஸ்)
****