«

»


Print this Post

ஆர்.எஸ்.எஸ்


அன்புள்ளெ ஜெ.மோ,

உங்கள் இணையதளத்தை RSS feed என்ற சேவை மூலம் தான் பல நாட்களாக கூகிள் ரீடரில் படித்து வருகிறேன்.  (இதில் ஒரு தளத்தின் feedஐ ஒருமுறை subscribe செய்து விட்டால் போதும் –  ஒவ்வொருமுறை அந்தத் தளத்தில் புதிய விஷயம் வரும்போதும்  அந்த விவரம் தானாகவே subscribe செய்தவரின்  கூகிள் ரீடரில் வந்து உட்கார்ந்து விடும். போய்ப் படிக்க வசதியாக இருக்கும், எதையும் மிஸ் செய்ய வேண்டாம்)

ஒரு விஷயத்தை இப்போது தான் கவனிக்கிறேன்.  உங்கள் இணையதளத்தில் இது எப்படி அமைக்கப் பட்டுள்ளது என்றால்,   ஒவ்வொரு புதிய பதிவின் போதும் அந்த முழுப் பதிவுமே கூகிள் ரீடரில் வந்து விடுகிறது! அதனால் இணையதளத்திற்கு வருகை தராமலே அனைத்துப் பதிவுகளையும் படித்து விடலாம்..  இப்படி நிறையப் பேர் படித்தால்,  அது தளத்திற்கு வருகை புரிபவர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும்.  கணிசமான பேர்  உங்கள் தளத்தை இப்படிப் படிக்கும் சாத்தியம் இருக்கிறது – அவர்கள் வருகை கணக்கில் வராமலே போகும்.

இதைத் தவிர்க்க, RSS feedல் புதிய  பதிவைப்  பற்றிய சிறு விவரம் மட்டும் (அல்லது  முதல் பத்தி மட்டும்)  வருமாறு செய்ய வேண்டும்.  அதில் க்ளிக் செய்தால், தளத்தில் அந்தப் பதிவுக்கு அது தானாகவே இட்டுச் செல்லும். 

RSS feedல் இதைச் செய்வது மிக எளிது.   இது தொழில்நுட்ப சமாசாரம் என்பதால் சிறில் அலெக்ஸுக்கும் இந்த மடலை CC செய்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு


My blog:  http://jataayu.blogspot.com/

அன்புள்ள ஜடாயு

முதலில் நீங்கள் சொல்வதுபோல மின்னஞ்சலில் ஒரு பத்தி மட்டுமே அனுப்புவதாகவே இருந்தது. கட்டுரையை பிறருக்கு அனுப்பினாலும் இணைப்பு மட்டுமே செல்லும். ஆனால் தொடர்ச்சியாக பல வாசகர்கள் முழுக்கட்டுரையையும் பெறவும், அனுப்பிவைக்கவும் வசதி தேவை என்று கேட்டார்கள். அதை நானும் சிறிலும் யோசித்தோம்.

சிறில் இரு தரப்பையும் சொன்னார். முழுக்கட்டுரை¨யையும் அனுப்புவதுவழியாக இணைய வருகை குறைகிறது. ஆகவே அலெக்ஸா ரேட்டிங் முதலியவற்றில் இடம் கீழே வருகிறது. இப்போது கிட்டத்தட்ட 150  பேர் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்கள் தினமும் சிலமுறை இதற்குள் வரநேர்ந்தால் இப்போது இரண்டாமிடத்தில் இருக்கும் இந்த தளமே தமிழில் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய இதழ்களின் இணையதளங்களில் முதலிடத்தில் இருக்கும்  என்றார்.

ஆனால் வாசகர்களில் கணிசமானவர்கள் அலுவலகங்களில் வாசிக்கிறார்கள். பல அலுவலகங்களில் இணையதளங்களை பார்ப்பதற்கு தடை உள்ளது. மின்னஞ்சல் உதவியானது என்றார்கள். மேலும் இக்கட்டுரைகள் நீளமானவை ஆதனால் மின்னஞ்சலில் வைத்து அல்லது பிற வடிவுக்கு மாற்றி சாவகாசமாக படிக்கவும் முடியும்.

யோசித்தபின் முழுக்கட்டுரையையும் அனுப்பலாமென முடிவுசெய்தேன். எனக்கு இக்கட்டுரைகள் சென்றுசேரவேண்டுமென்றே ஆசை. இணையதளத்திற்கு வரும் வாசகர் மூலம் விளம்பர வருமானம், அல்லது வருகைக் கட்டணம் ஏதுமில்லை. ஆகவே இப்படியே இருக்கட்டும் என்று முடிவுசெய்தேன்.

நடுவே பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாகஆயிரத்து இருநூறைத் தாண்டியமையால் இணையதளம் சுமையேறி அனுப்புவதை சிலநாள் நிறுத்திவிட்டது. மீண்டும் விரிவாக்கியிருக்கிறோம். எங்கள் கணக்கில் அந்த வாசகர்களையும் சேர்த்தே வாசகர்களைக் கணிக்கிறோம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6317/

13 comments

Skip to comment form

 1. Prakash

  Dear J,

  Full feed RSS is actually good for the readers. It will definitely reduce the number of hits on your website, but in the long run, it will bring you more readers – as the full feed allows you to forward/email them to new people who might not know about you.

  You can migrate your feeds to a service like Feedburner, it has a distinct advantages (like finding out number of users etc) and also reduces lots of load on your server.

 2. venkatramanan

  அன்பின் ஜெமோ!
  RSS செய்தியோடையில் முழு இடுகையும் தருவதே சாலச்சிறந்தது.
  சற்றே நேரமிருந்தால் அமித் அகர்வால் (வலைப்பதிவின் மூலம் அபரிமிதமான் சம்பாத்தியம் பெரும் இந்திய பதிவர்களில் ஒருவர்) எழுதிய Why Publish Full RSS Feeds instead of Partial Summary Feeds இடுகையைப் படித்துப் பாருங்கள்! முழு செய்தியோடையே பெரும்பாலான வாசகர்களுக்கு உவப்பானது, புதிய வாசகர்களையும் கொண்டு சேர்க்கும் என்பதற்கு அத்தாட்சி இந்த இடுகை.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 3. Ramachandra Sarma

  நான் வேற ஆர். எஸ்.எஸ் ன்னு நினைச்சுட்டேன்…!!

 4. ஜெயமோகன்

  அன்புள்ள ஜேமோ

  ஆபீஸில் வாசிப்பதை ஊக்குவிக்கிறீர்களா?

  திருநாவுக்கரசு

  அன்புள்ள திரு

  ஆபீசில் எழுதியதை ஆபீஸில் படிப்பதில் என்ன தப்பு?
  ஜெ

 5. drumarfarook

  மதிப்பிற்குரிய ஜெ.,
  வணக்கம்.
  வலைத்தளங்கள் வருமானத்திற்கானதாக இலையென்றாலும் கூட புகழுக்காகவும், விளம்பரத்திற்காகவும் இன்று அதிகரித்துள்ளன. வாசகர்களின் எண்ணிக்கையை பிறருக்கு காட்டுவதில் போட்டியும் கூட நடைபெற்று வருகின்ற இன்றைய சூழலில் முழு பதிவையும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்பும் உங்கள் நோக்கம் போற்றுதலுக்கு உரியது.
  வணக்கமும், வாழ்த்துக்களும்.

  தோழமையுடன்.
  அ.உமர் பாரூக்

 6. Parthiban

  அன்புள்ள ஜெ

  உங்களின் ஒரு ஒரு வார்த்தையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கபடுகிறது. நீங்கள் குற்றம்சட்டா படுகிரிர்கள். ஆபீஸ்ல படிக்கறது எல்லாம் ஒரு விஷயமா இதுக்கெல்லாம் ஒரு குற்றசாட்டா, சரி விடுங்க.

  அன்புடன்
  பார்த்திபன்

 7. yuvakrishna

  ச்சே!

  செய்தியோடையின் பெயர் கூட ஆர்.எஸ்.எஸ். தானா? :(

  இப்படிக்கு
  மந்தையிலிருந்து பிரிந்த ஆடு!

 8. perumal

  ///அன்புள்ள ஜேமோ

  ஆபீஸில் வாசிப்பதை ஊக்குவிக்கிறீர்களா?

  திருநாவுக்கரசு

  அன்புள்ள திரு

  ஆபீசில் எழுதியதை ஆபீஸில் படிப்பதில் என்ன தப்பு?
  ஜெ ////

  இந்தக் கேள்விக்கான பதிலைப்படித்துவிட்டு விழுந்தது விழுந்து சிரித்தேன்.

  பணிவன்புடன்

  பெருமாள்

  கரூர்

 9. perumal

  ///நான் வேற ஆர். எஸ்.எஸ் ன்னு நினைச்சுட்டேன்…!!///

  நானுந்தாணுங்க ரொம்ப தீவிரமா படிக்க ஆரம்பிச்சு பொசுக்குனு போயிருச்சு

  பெருமாள்
  கரூர்

 10. V.Ganesh

  Dear Jeyamohan,
  Though I am in IT, I have not kept track of this RSS/VHP etc., Forget that. What does it mean, if I dont subscribe thru RSS?. If I simple click your site, will it increase the count or If I login and put a comment will that increase the site visit? ( I may have to pose the question to Mr.Cyril but anyway please do let me know)
  Regards
  V.Ganesh

 11. kuppan_yahoo

  வாசகர்களின் எண்ணிக்கையை பிறருக்கு காட்டுவதில் போட்டியும் கூட நடைபெற்று வருகின்ற இன்றைய சூழலில் முழு பதிவையும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்பும் உங்கள் நோக்கம் போற்றுதலுக்கு உரியது.
  வணக்கமும், வாழ்த்துக்களும்.

  தோழமையுடன்.
  அ.உமர் பாரூக

  நான் எழுத நினைத்ததை உமர் பாருக்க் அருமையாக எழுதி விட்டார்.

  போன பதிவில் நான் குறிப்பிட்டது சென்னைக்கு நீங்கள் குடி பெயர்ந்தால், தமிழுக்கும் , இலக்கியத்திற்கும், வாசகர்களுக்கும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்பதே. ஆனால் உங்கள் குடும்ப மகிழ்ச்சி, குடும்ப உறுப்பினர்களின் சௌகர்யங்களும் பாதிக்க கூடாது.

  இருக்கவே இருக்கிறது கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் , நினைத்த பொழுது நீங்கள் நாஞ்சில் நாட்டை போய் பார்க்கலாம்.

 12. cnu77

  //ஆனால் வாசகர்களில் கணிசமானவர்கள் அலுவலகங்களில் வாசிக்கிறார்கள். பல அலுவலகங்களில் இணையதளங்களை பார்ப்பதற்கு தடை உள்ளது. மின்னஞ்சல் உதவியானது என்றார்கள். மேலும் இக்கட்டுரைகள் நீளமானவை ஆதனால் மின்னஞ்சலில் வைத்து அல்லது பிற வடிவுக்கு மாற்றி சாவகாசமாக படிக்கவும் முடியும்.//

  Am one of them, je.mo.

 13. ஜெயமோகன்

  ஐயோ அப்படி எதுவும் செஞ்சுராதீங்க…

  நான் நிறைய வலைத்தளங்களை அப்படி rss வழியாதான் படிக்கறேன்… ஒரு வலைதளத்துல “இந்த வலைதளத்தை அதிகம் படிப்பவர்கள்”ங்கற பட்டியல்ல என் பெரும் இருந்தது, இத்தனைக்கும் நான் அந்த வலைத்தளத்துக்கு ஏதாவது சொல்லன்னும்னாதான் போவேன்… அப்படி பாத்தால் rssல படிக்கறதும் ஹிட்டாதான் கணக்காகுது… இந்த கட்டுரையும் அப்படிதான் ஏதோ சொல்லுற மாதிரி தெரியுது- http://bexhuff.com/2008/04/how-many-hits-does-your-site-really-get . அந்த வலைதளத்துல சொன்ன மாதிரி “Even if we could accurately count how many people hit the site, we’re still at a loss to know who paid attention”. உங்க பதிவுகளுக்கு வருகிற பதிலுரைகளையும் உங்க பதிவை மேற்கோள் காட்டி தங்களோட தளத்துல பதிவு செய்கிற பதிவாளர்களும்தான் உங்க எழுத்துக்கு இருக்கற வீச்சுக்கு உண்மையான கணக்குன்னுதோணுது.

  நீங்க அருமையா எழுதறீங்க, ரொம்ப துணிச்ச்சலாவும் எழுதறீங்க- இந்த rss விஷயத்துல மட்டும் இறுக்கிப் பிடிச்சுறாதீங்க… உண்மைய சொல்லனும்னா முழுசா rss feed தராத எந்த வலைதளத்தையும் நான் விடாம வாசிக்கறது கிடையாது- அப்பப்ப நினைவு வரும்போது போய் பாக்கறதோட சரி…
  [email protected]

Comments have been disabled.