மதிப்புரைக்கு ஓர் இணையதளம்

தமிழ் புத்தக மதிப்புரைகளை எல்லாம் ஓர் இடத்தில் திரட்டுவதற்காக ஒரு  வலைப்பூவை  பாஸ்கி கண்ணன் என்ற வாசகர் அமைத்திருப்பதாக மின்னஞ்சலில் தெரிவித்தார். அதில் விஷ்ணுபுரம் பற்றிய மதிப்புரை முதலில் அளிக்கப்பட்டிருந்தது. அந்நாவலை இன்னமும் வாசிக்காத வாசகர்களுக்கு எளிதில் அதை அறிமுகம் செய்வதாக இருந்தது அந்த மதிப்புரை.  

http://baski-reviews.blogspot.com/

அதற்கு கரிகாலன் -ராஜா என்பவர் இட்டிருந்த எதிர்வைனையும் சிறப்பானவை. என்னிடம் ஒரு பின்னூட்டம் இட கோரினார்கள். இட்டேன்

இங்கே ஒரு சின்ன விஷயம். பல இணையதளங்களில், வலைப்பூக்களில் என் பெயரில் பின்னூட்டங்கள் உள்ளன. நான் பொதுவாக எங்குமே பின்னூட்டம் இடுவதில்லை. ஆகவே என் பெயரில் பின்னூட்டம் இருந்தால் பொதுவாக அது நான் போட்டதல்ல. நான் இதுவரை இரண்டே இரண்டு பின்னூட்டம் மட்டுமே போட்டிருக்கிறேன். ஒன்று சுரேஷ் கண்ணன் சீனா பற்றி எழுதிய நூல்மதிப்புரைக்கு. இரண்டு இதற்கு. பிறிதொன்று தமிழ் ஹிந்து இணையதளத்தி அந்த ஜெயமோகன் நானல்ல என்று ஒரு வாக்குமூலம்

ஜெ

http://baski-reviews.blogspot.com/ 

http://pitchaipathiram.blogspot.com/2009/12/blog-post_29.html 

http://www.tamilhindu.com/

முந்தைய கட்டுரைசிலைகள்
அடுத்த கட்டுரைஈரோடு நூல் வெளியீடு