«

»


Print this Post

மதிப்புரைக்கு ஓர் இணையதளம்


தமிழ் புத்தக மதிப்புரைகளை எல்லாம் ஓர் இடத்தில் திரட்டுவதற்காக ஒரு  வலைப்பூவை  பாஸ்கி கண்ணன் என்ற வாசகர் அமைத்திருப்பதாக மின்னஞ்சலில் தெரிவித்தார். அதில் விஷ்ணுபுரம் பற்றிய மதிப்புரை முதலில் அளிக்கப்பட்டிருந்தது. அந்நாவலை இன்னமும் வாசிக்காத வாசகர்களுக்கு எளிதில் அதை அறிமுகம் செய்வதாக இருந்தது அந்த மதிப்புரை.  

http://baski-reviews.blogspot.com/

அதற்கு கரிகாலன் -ராஜா என்பவர் இட்டிருந்த எதிர்வைனையும் சிறப்பானவை. என்னிடம் ஒரு பின்னூட்டம் இட கோரினார்கள். இட்டேன்

இங்கே ஒரு சின்ன விஷயம். பல இணையதளங்களில், வலைப்பூக்களில் என் பெயரில் பின்னூட்டங்கள் உள்ளன. நான் பொதுவாக எங்குமே பின்னூட்டம் இடுவதில்லை. ஆகவே என் பெயரில் பின்னூட்டம் இருந்தால் பொதுவாக அது நான் போட்டதல்ல. நான் இதுவரை இரண்டே இரண்டு பின்னூட்டம் மட்டுமே போட்டிருக்கிறேன். ஒன்று சுரேஷ் கண்ணன் சீனா பற்றி எழுதிய நூல்மதிப்புரைக்கு. இரண்டு இதற்கு. பிறிதொன்று தமிழ் ஹிந்து இணையதளத்தி அந்த ஜெயமோகன் நானல்ல என்று ஒரு வாக்குமூலம்

ஜெ

http://baski-reviews.blogspot.com/ 

http://pitchaipathiram.blogspot.com/2009/12/blog-post_29.html 

http://www.tamilhindu.com/

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6306

6 comments

Skip to comment form

  1. tdvel

    தத்துவ விவாதத்தில் வெற்றிபெறுவது சமணமா பௌத்தமா? பௌத்தம் என்று என் ஞாபகத்தில் இருக்கிறது.
    த.துரைவேல்

  2. kuppan_yahoo

    எழுத்தாளர்களையும் இங்கு ஒரு நடிகரைப் போல் போற்றி கொண்டாடுகிறோம், இது சிறந்ததா, இப்படி கொண்டாடலாமா, எழுத்தாளர்களுக்கும் ரசிகர் மன்றம், கட் அவுட் பாலபிஷேகம் செய்யலாமா.

  3. venkatramanan

    உங்களின் மற்றுமொரு மறுமொழி:
    பின்தொடரும் நரியின் ஊளை!” பதிவில்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  4. baski

    இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி. நெல்லுக்குப் பாய்ந்ததில் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தது.

  5. ஜெயமோகன்

    அன்புள்ள குப்பன்

    பாலபிஷேகம் செய்வது சரியில்லை. வீட்டுக்கு பாக்கெட்பால் வாங்கி கொடுப்பதென்றால் நல்லதுதானே?
    ஜெ

  6. V.Ganesh

    நல்ல விமர்சனம். பாஸ்கி நன்றாக எழுதி உள்ளார். . உங்கள் பழய கதை எதுவும் படித்ததில்லை. உங்களை வலையில் படிப்பதோடு சரி. இந்த புத்தகம் வாங்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் உண்டே.

Comments have been disabled.