மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை வைத்துப்பார்த்தால் அவர் மிகச்சிறப்பாக உரையாடச்சாத்தியமான கருக்கள் முறையே திருக்குறள், வள்ளலார், தாயுமானவர், சித்தர்பாடல்கள், திருமூலர், பாரதி என்று சொல்வேன். அத்தகைய கருக்களில் மேடையில் அவர் அதிகம் பேச நேரவில்லை.
வேதம் என்றால் என்ன என்ற தலைப்பில் ஜெயகாந்தன் ஆற்றிய இந்த உரையில் அவரது மனம் இந்த தளங்களை எல்லாம் தொட்டுத்தொட்டு விரியும் மகத்தான அனுபவம் உள்ளது. கூடவே ஒலிக்கும் அவரது குரல் இன்னும் மன எழுச்சி அடையச்செய்கிறது
வேதம் என்றால் என்ன – ஜெயகாந்தன்