வெண்முரசு இணையதளங்கள்

13

ஜெ சார்

நான் வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நேற்றுதான் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒருமாதத்திலேயே நூறு போஸ்ட் வரை இருக்கிறது. இவ்வளவு கடிதங்களா? ராமராஜன் மாணிக்கவேல், சுவாமி, சண்முகம் எல்லாரும் எழுதிய கடிதங்களை வாசித்தேன். நீலம் நாவலில் இனிமேல் ஒன்றுமே வாசிப்பதற்கு இல்லை என்ற அளவுக்கு வாசித்திருக்கிறார்கள்

இந்த தளம் முன்னாலேயே கண்ணில் பட்டிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சந்தேகங்கள் எழுதி கஷ்டப்படுத்தியிருக்கமாட்டேன். அத்தனை கடிதங்களையும் பின்னால் போய் வாசிக்கவேண்டும். பலகோணங்களில் வெண்முரசைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். எவ்வளவு உணர்ச்சிகள் இருக்கின்றன

நன்றி

விஜயகுமார்

அன்புள்ள விஜயகுமார்,

வெண்முரசு தொடர்பாக நிறைய கடிதங்கள் வருகின்றன. அவற்றில் பொதுப்பார்வைக்கு வந்தால் பயனுள்ளவை என்பவற்றை பிரசுரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அனைத்தையும் என் இணையதளத்தில் பிரசுரித்தால் இணையதளம் அதைக்கொண்டே நிறைந்துவிடும். ஆகவே ஒரு தனி இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான முக்கியமான கடிதங்கள் உள்ளன

வெண்முரசு விவாதங்கள்

— என்பது இணையதளத்தின்பெயர். எல்லா வெண்முரசு கட்டுரைகளின் அடியிலும் இணைப்பு இருக்கும். நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.

வெண்முரசு

– என்ற இணையதளம் வெண்முரசு கதைக்காக மட்டுமே உள்ளது

ஜெ

Lord-Sri-Krishna-and-His-perfect-flute1

ஜெசார்

வெண்முரசு நாவலை நான் தொடர்ந்துவாசிக்கிறேன். நாவல் அத்தியாயங்களுக்கு கீழே உள்ள தொடர்புகள் சீராக இல்லை.

மேலும் வெண்முரசு பற்றிய கடிதங்களைத் தேடி எடுக்கவும் கஷ்டமாக உள்ளது

ராஜு

அன்புள்ள ராஜூ

அந்த இணைப்புகள் நாவலின் உள்ளடக்கம் சார்ந்த தொடர்புகள்.

நாவலை சீராக முழுமையாக வாசிக்க இணையதளத்தின் வலப்பக்கம் மேலே வெண்முரசு என கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியை அழுத்துங்கள். மொத்த வெண்முரசும் சீரான வரிசையில் கிடைக்கும்

வெண்முரசு இணையதளம் வெண்முரசு அத்தியாயங்களை வரிசையாக அளிக்கும் தனியான இணையதளமாகும்

வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் உள்ளது. அதில் வெண்முரசு தொடர்பான அனைத்து கடிதங்களும் கட்டுரைகளும் தனியாக தொகுக்கப்பட்டுள்ளன

ஜெ

ஜெ

வெண்முரசு விவாதங்கள் இணையதளம் வாசித்தேன். மிகச்சிறந்த கடிதங்கள். அவை இல்லாமல் நீலம் நாவலை புரிந்துகொள்ளவே முடியாது

அதோடு அற்புதமான படங்கள்

சரவணன்

=================================================================================================

விஷ்ணுபுரம் இணையதளம்
[விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு]

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

கொற்றவை விவாதங்கள் இணையதளம்

பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம்

பனிமனிதன் இணையதளம்

காடு இணையதளம்

ஏழாம் உலகம் இணையதளம்

அறம் இணையதளம்

வெள்ளையானை இணையதளம்

இவை தவிர

விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம்

நண்பர்களால் நடத்தப்படுகிறது.

விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன.

காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது.

குருநித்யா இணையதளம் நண்பர் ஸ்ரீனிவாசனால் நடத்தப்படுகிறது.

முந்தைய கட்டுரைகாஷ்மீர் கடிதம்
அடுத்த கட்டுரைஅரசியலின் அறம்