“அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த தெய்வங்க நினைச்சா அப்படி நடக்கட்டு” என்று சிறுவனின் அம்மா, இறந்துபோன தன் கணவனை விட்டுச் செல்லுவது நமக்கு நியாயமாகவே படுகிறது.