புலியும் புன்னகையும்

ஜெ

புலி கட்டுரையை வாசித்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன். அதில் உள்ள பலவகையான நகைச்சுவை வாள்சுழற்றல்கள். வாயு வெளியேறும் விதமும், புலிநெரங்கிகள் இறங்குமாறு கண்டக்டர் சொல்வதும் டாப்

ஆனால் அது அல்ல சங்கதி என்று தோன்றிக்கொண்டே இருந்த்து. கிளிக் செய்து எஸ்.ரா-வின் கட்டுரையை வாசித்தபோதுதான் நீங்கள் வைத்திருக்கும் பகடியே புரிந்த்து. சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘நவீன கொலைச்சிந்து’ டாப் ஜெ

ஏற்கனவே புதுமைப்பித்தனா மு.வா வா பகடிக்குச் சமம்

சிவராம்

*

ஜெ

புலி வாசித்தேன். ஃபுல்ஃபாமில இருக்கீங்க போல!

அதிகாலை நாலரை மணிக்கு, மக்கள் அதிகமில்லா ஹைதராபாத் வானூர்தி நிலையத்தில் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன்..

அடுத்த புத்தகம் துவங்கும் முன் இன்னும் 2-3 இதே போல எழுதிருங்க.. மலையேறிட்டீங்கன்னா நெம்ப கஷ்டம்

பாலா

ஜெ,

புலி வாசித்தேன். அருமையான கட்டுரை. எஸ்.ரா எழுதிய புலியின் முன்னால் மன்றாடியவன் என்ற கட்டுரையை வாசித்து அதை எப்படி புரிந்துகொள்வது என்று திகைத்துக்கொண்டிருந்தேன். சிலர் அதைக் கிண்டல் செய்தார்கள். நீங்கள் எழுதிய குறிப்புதான் அதை எப்படிப் புரிந்துகொள்வது என்று காட்டியது

முருகேஷ்

அன்புள்ள முருகேஷ்

கிண்டல்செய்பவர்கள் செய்யட்டும். நீங்கள் உங்கள் பயணத்தில் இருங்கள்

அப்புறம், ஒன்று அது கட்டுரை அல்ல. கவிதை.

இரண்டு, தலைப்பு புலியின் முன்னால் மன்றாடுகிறவன். அதாவது நிகழ்காலம்

ஜெ

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

முவவும் புதுமைப்பித்தனும் கடிதம்

முந்தைய கட்டுரைகண்ணனும் ராதையும்
அடுத்த கட்டுரைஇன்னொரு கொலைசிந்து