இருமுகம்

86cc9262db2baca11d77fa5a077bfb4e

அன்புள்ள ஜெ

நீலம் பலமுறை வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும் என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை. நான் வாசகர்கடிதங்களெல்லாம் இதுவரைக்கும் எழுதியதில்லை. என்னால் நான் நினைப்பதை சரியாகச் சொல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. ராதை கிருஷ்ணன் என்றெல்லாம் நாவல் பல்க இடங்களுக்கு விரிந்துசென்றாலும் அதன் உச்சிப்புள்ளி என்பது அந்த எருது +பசு வரும் இடம்தான் என்று தோன்றியது. அதுதான் ராதை கிருஷ்ணன் கதைக்கு ஒரு சரியான முடிவு.

ராதை கண்ணனாகவே ஆகிவிடுகிறாள். கண்ணன் ராதையாக ஆகிவிடுகிறான். இருவருமே பூர்ணத்தை அடைகிறார்கள். பக்தன் இல்லாமல் கடவுள் இல்லை என்றெல்லாம் வேதாந்த விளக்கம் சொன்னாலும் எனக்கு ஆண்பெண் உறவைப்பற்றியதாகவே தோன்றியது. அதோடு ஒன்றுக்கொன்று நிறைக்கக்கூடியவையான அன்பும்+பண்பு போன்றவிஷயங்களின் குறியீடாகவும் தோன்றியது. அந்த பார்வையுடன் ஆரம்பம் முதலே வாசித்தபோது ராதை அந்த நிறைவை நோக்கித்தான் ஓடிவந்துகொண்டிருந்தாளோ என்றும் எண்ணத்தோன்றியது. கதையின் எல்லா இடங்களும் புதியவெளிச்சத்தில் தெரியத் தொடங்கின

நன்றி

செம்மணி அருணாச்சலம்

images-15

அன்புள்ள ஜெ

நீலம் முழுமை அடையும் இடம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்த்து. அவதார நோக்கம் நிறைவேறியபிறகு கண்ணன் ராதையிடமே திரும்பி வருகிறான் என்பதுபோல கவித்துவமான இடம் வேறு இல்லை. கண்ணன் வரும்போது இருக்கும் தளர்ச்சியும் அவன் அன்னியமாகி இருப்பதும் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
நன்றி

சிவமணி

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைவீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -2
அடுத்த கட்டுரைவீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -3