இன்றைய காந்தி

 

நாள் :    24 -01- 2010 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி

இடம் :
ஈரோடு டைஸ் & கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க  கட்டிடம்
வீரப்பம்பாளையும் பிரிவு
பெருந்துறைரோடு
ஈரோடு

ஈரோடு பசுமை இயக்கங்களின் முன்னோடியும் காந்தியவாதியும் நடுத்தர மக்களுக்கான குறைந்தகட்டண மருத்துவ இயக்கத்தை நடத்துபவருமான ஈரோடு. வி. ஜீவானந்தம்.

View Full Size Image

கரு. ஆறுமுகத்தமிழன் தமிழிலக்கியத்தில் முதுகலையும் சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டமும்பெற்றவர். ‘திருமூலர் காலத்தின் குரல்’ என்ற நூலின் ஆசிரியர். திருமந்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளார்களில் ஒருவர்.

செ.இராசு கொங்குநாட்டு வரலாற்றாசிரியர். கல்வெட்டாய்வாளர். கொங்குநாடும் சமணமும் போன்ற புகழ்பெற்ற நூல்களின் ஆசிரியர்

க.மோகனரங்கன் இலக்கிய திறனாய்வாளர். ‘சொல்பொருள் மௌனம்’ ‘அன்பின் ஐந்திணை’ என்ற நூல்கல் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதிவருகிறார்.’இடம்பெயர்ந்தகடல்’ என்ற தொகுப்பு வெளியாகியிருக்கிறது. ஈரோட்டில் பணிபுரிகிறார்


பவா செல்லத்துரை சிறுகதையாசிரியர். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர். வம்சி பதிப்பகம் என்ற பிரசுர நிறுவனத்தை நடத்தி வருகிறார். நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற சிறுகதைத்தொகுதி வெளிவந்துள்ளது.

ഇമേജ് പൂര്‍ണ വലുപ്പത്തില്‍ കാണുക

மரபின் மைந்தன் முத்தையா இலக்கியப்பேச்சாளர். ‘ரசனை’ என்ற இலக்கிய இதழையும், ‘நமதுநம்பிக்கை’ என்ற சுயமுன்னேற்ற இதழையும் நடத்தி வருகிறார்

முருகானந்தம் சுற்றூசூழல், திரைபப்டம், இலக்கியம் ஆகிய தளங்களில் செயலாற்றி வருபவர். இவரது கட்டுரைகள் காலச்சுவடு போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. 

நாஞ்சில்நாடன் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். மாமிசப்படைப்பு, சதுரங்கக் குதிரை, என்பிலதனை வெயில்காயும், தலைகீழ் விகிதங்கள், மிதவை, எட்டுத்திக்கும் மதயானை போன்றவை முக்கியமான நாவல்கள். சூடியபூ சூடற்க, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று போன்றவை கட்டுரைத்தொகுதிகள்.

தொடர்புக்கு 9843032131 , 9865916970 , 9842771700 

muelangovan.blogspot.com/…/blog-post_22.html