‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’

வெண்முரசின் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் நீலமே இன்னொருமுறை படிப்பதற்குப் போதுமானதாக இருக்கும். அக்டோபர் 20 அன்று அடுத்தநாவல் வெளிவரத்தொடங்கும்.

வழக்கமாக வெண்முரசு பிரசுரமாவதற்கு பல அத்தியாயங்கள் முன்னரே நான் சென்றுகொண்டிருப்பேன். நீலம் மிகுந்த நெருக்கடியாகிவிட்டது. ஒவ்வொருநாளும் மதியம்தான் மறுநாள் பிரசுரமாகும் அத்தியாயத்தை எழுதினேன். ஷண்முகவேல்தான் திணறினார். காரணம் எழுத ஆரம்பிக்க ஏற்பட்ட தடைதான்.இம்முறை ஒரு பத்து அத்தியாயம் கையில் இருக்கையிலேயே ஆரம்பிக்கலாமென திட்டம். ஆகவே இந்த இடைவெளி

நாவலின் பெயர் பிரயாகை பிரயாகை என்றால் நதிச்சந்திப்பு என்று பொருள். கரைபுரளும் நதிகள் பொங்கி வந்து தழுவிக்கொள்ளும் காட்சிகள் கண்முன் எழுகின்றன. பிரயாகைகளை நான் கடைசியாகப்பார்த்தது 2010 ல் கும்பமேளாவுக்கு ஹரித்வார் சென்றுவிட்டு அப்படியே ருத்ரபிரயாக் வரை சென்றபோதுதான். நான் வசந்தகுமார் யுவன்சந்திரசேகர், அருண், அரங்கசாமி, கிருஷ்ணன் இருந்தோம்

நம் தொன்ம மரபில் கங்கையின் ஐந்து சந்திப்புகள் முக்கியமானவை.

தௌலிகங்காவும் அளகநந்தாவும் சந்திக்கும் விஷ்ணுபிரயாகை

vishnu

நந்தாகினி அளகநந்தாவை சந்திக்கும் நந்தப்பிரயாகை

nanwtha

அளகநந்தா பிந்தா நதியைச் சந்திக்கும் கர்ணப்பிரயாகை

karna

அளகநந்தாவும் மந்தாகினியும் சந்திக்கும் ருத்ரப்பிரயாகை

ruthra

அளகநந்தா பாகீரதியைச் சந்திக்கும் தேவப்பிரயாகை

deva

*

இந்தத் தலைப்பு மிக இயல்பாக வந்தது. இந்நாட்களில் தொடர்ந்து கங்கையின் பெருக்கையே எண்ணிக்கொண்டிருந்தேன். காரணம், வரும் நாவலின் மையம் திரௌபதிதான். ஐந்து நதிச்சந்திப்புகள் என ஓர் எண்ணம் வந்தது. அதையே நாவலின் கட்டுமானமாக ஆக்கமுடியுமென நினைக்கிறேன். அந்த மையப்படிமம் கிடைத்ததுமே நாவல் கண்ணுக்குத் தெரியத்தொடங்கிவிட்டது.

ஜெ

201ல் ருத்ரபிரயாகில் நான். கரையில் யுவன் மற்றும் கிருஷ்ணன்

SAM_0394

கும்பமேளா பயணம் 1

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மரபின் மைந்தன் முதற்கனல் பற்றி எழுதும் தொடர்

முந்தைய கட்டுரைகிருஷ்ணசிம்மம்
அடுத்த கட்டுரைநீலச்சேவடி