காஷ்மீர் கடிதம்

ஜெ..
”நான் காஷ்மீர் பற்றி எழுதிய பயணக்கட்டுரையையே நீங்கள் படித்துப்பார்க்கலாம். ராணுவம் அல்லது அரசின் மக்கள்தொடர்பு கூற்றுக்களை அவற்றில் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு-ராணுவ -குத்தகைதாரர் கூட்டின் ஊழல் எப்படி காஷ்மீர் பிரச்சினையை உயிருடன் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் கொண்டிருக்கிறது என்றும் அதில் விரிவாகவே எழுதியிருந்தேன்”

உங்கள் பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியை எப்படியோ மிஸ் பண்ணியிருக்கிறேன். மன்னிக்கவும்.

ஆனால், நான் மீண்டும் வலியுறுத்துவது இதையே. அதில் உள்ள மத அடிப்படைவாதம் தெரியாமல் இல்லை. அது பெரும்பான்மை ஜனாநாயகத்தால் மெல்ல அடித்துச் செல்லப்படும். அது அந்த மதத்தின் மிகப் பெரும் வியாதி. அது சில நாட்களில் தீர்வதல்ல. ஆனால், அது தோற்றுக் கொண்டிருக்கும் தரப்பு. அதை சட்டம் / காவல் / ராணுவம் கொண்டு சரியான வழியில் அடக்குவதும், அவரக்ள் செய்யும் முட்டாள்தனங்களை, அவர்கள் மக்களே பார்த்துக் கொள்ள விடுவதும்தான் வழி. அவர்களைப் பெரிது படுத்தி எழுதுவதே தேவையில்லை என்கிறேன். அது ஒரு கோணம்.

ஒரு நிர்வாகத்தின் தரப்பில் இருந்து, பெருந்தன்மையாகவே இதைக் கையாள முடியும். அவர்கள் திருப்பித் துப்பாக்கி எடுத்திருந்தால், கீலானிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்.

ஃப்ரண்ட்லைனின் திபேத் கட்டுரையைப் படித்தேன். அழகான புகைப்படங்கள். மற்றபடி, மனச் சாய்வுள்ள கட்டுரைதான். ஆனால், அதே திபேத் ப்ரச்சினையில், இந்திய சீன நல்லுறவை முன்னிட்டு, அரசு தனது கொள்கையை தலைகீழாக மாற்றிக் கொள்ளும் இன்னும் சில காலத்தில். கம்யூனிஸ்டென்ன, காபிலிஸ்டென்ன வியாபார உலகத்தில்.

பாலா

காஷ்மீரும் காமெடி பூட்டோவும்
இமையச்சாரல்
காஷ்மீரும் இந்துவும்
காஷ்மீர் கடிதம்
காஷ்மீரும் ராணுவமும்
காஷ்மீர் இன்னொரு கடிதம்
ஜனநாயகத்தின் காவலர்கள்

முந்தைய கட்டுரைஅந்தக்குழல்
அடுத்த கட்டுரைவெண்முரசு இணையதளங்கள்