‘வம்சி’யில் என்னுடைய நூல்கள்

என்னுடைய இரு நூல்களை பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகம் [ திருவண்ணாமலை] வெளியிட்டிருக்கிறது. ‘

ஜே சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு’ என் மகள் சைதன்யாவின் இளமைப்பருவத்தைப் பற்றிய வேடிக்கையும் விவேகமும் கலந்த பதிவுகளின் தொகை. சென்றவருடமே இதை வம்சி வெளியிட்டுவிட்டதென்றாலும் அட்டையிலும் அமைப்பிலும் சில பிழைகள் நிகழ்ந்தமையால் அதிகமாக வணிகத்துக்குக் கொன்டுவரவில்லை. இது புதிய பதிப்பு

வேங்கைச்சவாரி விவேக் ஷன்பேக், [கன்னடச் சிறுகதைகள்]  தமிழாக்கம் ஜெயமோகன்

விவேக் ஷன்பேகின் பத்து கதைகள் ஆங்கிலம் வழியாக என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வம்சி வெளியீடாக வெளிவரவுள்ளன. அச்சு முடிந்து இன்னமும் கடைக்கு வரவில்லை. அதி நுட்பமான வாழ்க்கைச்சித்திரங்கலை சாதாரணமாக எழுதக்கூடியவர் விவேக். தமிழ் வாசகர்களின் கவனத்துக்கு உரியவர்

கன்னடமொழியின் முதன்மையான இளையதலைமுறை எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை நாவல் இலக்கியவிமரிசனம் மற்றும் நாடகத்துறையில் புகழ்பெற்றவர். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருது 1998க்கான கரந்த் விருது ஆகியவற்றை பெற்றவர்.

இக்கதைகளில் நவீன கர்நாடகப் பண்பாட்டின் பல்வேறு அடையாளச் சிக்கல்களை உலகமயமாக்கலின் பிரச்சினைகளை ஒட்டி தன் தரிசனங்களை அடைந்திருக்கிறார் விவேக்.  அபாரமான வாசிப்புத்தன்மை கொண்ட இக்கதைகள் வாசகன்
கடந்துசெல்லவேண்டிய நுண்ணிய மறுபக்கங்கலும் உடையவை.

முந்தைய கட்டுரைஉலக இலக்கியச்சிமிழ்
அடுத்த கட்டுரைஅநங்கம்