எழுத்தாளனின் ஞானம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,நலமா?
“எந்த எழுத்தாளனும் தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் அவன் இருக்கிறான்…..”என்று ‘கனவு பூமியும் கால்தளையும்’ – என்கிற கட்டுரையில் எழுதியிருக்கிறீகள்.

இது உங்களுக்கான அனுபவமாகவும் நேர்கிறதா? எழுத்தாளரின் பாடுபொருளுக்கேற்ப,அவரின் ஆன்ம அனுபவங்களும் மாறுமா? கலை – நுண்கலை-இலக்கியம் என அனைத்து துறைகளில் உள்ளவர்களுக்கான பொது அனுபவா?

அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்.

அன்புள்ள ராஜேந்திரன்,

இதற்கு முன்னர் ஒரு விரிவான பதிலை அளித்திருக்கிறேன். இப்படிச் சொல்லலாம். எழுத்தாளன் எழுதும் கணங்களில் மட்டுமே ஞானத்தின் உலகில் இருக்க முடியும்.

ஆனால் நாம் வணங்கும் ஞானியர் பலர் கவிஞர்கள். வியாசர் முதல் நம்மாழ்வார் வரை. கவிதை வழியாக ஞானியானவர்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவியாசமனம்
அடுத்த கட்டுரைகாமயோகம்