«

»


Print this Post

கிழக்கில் என் நூல்கள்


கிழக்கு வெளியீடாக என்னுடைய நான்கு நூல்கள் மறுபதிப்பாவாதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இன்று இரு நூல்கள் வெளிவந்துள்ளன. புத்தகச்சந்தையில் கிடைக்கும். மீதி இருநூல்களும் நாளை கிடைக்கலாம். கவிதா வெளியீடாக வந்து கிடைக்காமல் இருந்த இந்நூல்களை கிழக்கு வெலியிடுவதாக இருந்தது. நான் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தால் தாமதமாக வெளியாகின்றன

1  இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்திய மெய்ஞான மரபின் ஆறுதரிசனங்களைப்பற்றி எளிய அறிமுக நூல். இந்த தரிசனங்களே இந்து ஞானமரபின் தத்துவ அடித்தளங்களை அமைத்தவை. இவற்றில் நான்கு இறை சாராதவை. அதனாலேயே  நுண்தளத்தில் மட்டுமே பேசப்பட்டு பெருவாரியான இந்துக்களால் அறியப்படாது போனவை

 

2  வாழ்விலே ஒரு முறை

சிறிய அனுபவங்களை புனைவுத்தன்மையுடன் கூறும் இந்நூல் அவற்றினூடாக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பரிசீலிக்க முனைகிறது

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6194/

13 comments

Skip to comment form

 1. நவீன்

  மதிப்பிற்குரிய ஜெ, இந்து மரபில் புத்தம் சமணம் அல்லாத agnostic சிந்தனை மரபுகள் இருக்கா? அதுல materialism மற்றும் skepticism-இன் பங்கு எவ்வளவு? முவ்வாயிரம் வருடத்துக்கும் மேலான வளமான ஒரு மரபில் skepticism கண்டிப்பா இருக்கணுங்கறது என்னோட அனுமானம். அர்த்தசாஸ்திரம் போன்ற discourse-கள் இருக்கும்போது materialism-உம் நம் ஞான மரபில் இருக்கனுமில்லையா? அவை gnostic சிந்தனைகளால்அழிந்ததா? இதை பத்தி சுருக்கமான அறிமுகத்தை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

  பி.கு: ஆங்கில வார்த்தை பிரயோஹங்களை மன்னிக்கவும். தமிழில் தத்துவங்கள் குறித்து எனக்கு பெரிய வாசிப்பு இல்லை.

 2. ஜெயமோகன்

  அன்புள்ள நவீன்

  உங்கள் கேள்விக்கு விரிவான பதில் ‘இந்துஞான மரபில் ஆறு தரிசனங்களில்’ உள்ளது. இந்துஞான மரபு என்பது வேதங்கள், ஆறுமதங்கள், ஆறுதரிசனங்கள், மூன்று தத்துவங்கள் அடங்கியது. அதில் வேதங்களில் அறியமுடியாமைவாதிகள், இறைமறுப்புவாதிகளின் குரல்கள் உள்ளன. அவர்களின் மூலகுரு பிரகஸ்பதி.

  ஆறு தரிசனங்களில் பூர்வ , உத்தர மீமாம்சங்கள் மட்டுமே ‘ஆஸ்திக’ தன்மை கொண்டங்கள். பிற நான்கும் [சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் ] அடிப்படையில் பொருள்முதல்வாத [அல்லது ஜடவாத அல்லது இறையில்லாத ] தரிசனம் கொன்டவை. அந்த நான்குடனும் விவாதித்து உருவான உத்தர மீமாம்சமான வேதாந்தமும் அந்தக் கொள்கைகளை பெரும்பாலும் தானும் ஏற்றுக்கொண்டு தன் விளக்கங்களை விரிவாக்கிக்கொண்டது.

  அதாவது இந்து ஞானமரபில் கிட்டத்தட்ட நேர்ப்பாதி இறையில்லாத, பௌதிகவாத[materialism ], ஐயவாத[skepticism ] அகஞானமறுப்புவாத [agnostic] சிந்தனைகளாகவே இருந்தது. அவை எல்லா ஞானசபைகளிலும் விவாதத்துக்கு வந்தன. அவற்றை கற்காமல் எந்த இந்துஞான முறையும் கற்க முடியாது என்பதே இன்றும் நிபந்தனை. அவற்றுடனான விவாதமே தத்துவ சிந்தனையை விவாதங்கள் மூலம் முன்னெடுக்க உதவியது.

  ஆனால் பக்தி இயக்க காலகட்டத்தில் மெல்ல மெல்ல அவை அறிஞர்களுக்குள் மட்டுமே பேசப்படுபவை ஆக மாறின. உண்மையில் சமணத்தில் உள்ள ஐயவாதமும் பொருள்முதல்வாதமும் ஆறு தரிசனங்களில் ஒன்றான வைசேஷிகத்தின் வளர்ச்சிநிலை. பௌத்தம் சாங்கியத்தின் வளர்ச்சி நிலை. சாங்கிய மூலகுரு கபிலன் பிறந்த கபிலவாஸ்துவில்தான் புத்தரும் பிறந்தார். இருவரும் ஒரே குலமாகக் கூட இருந்திருக்கலாம்.

  இந்திய தத்துவ மரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும், [தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய] இதைப் பற்றி மார்க்ஸிய கோணத்தில் விரிவாக பேசும் நூல்

  ஜெ

 3. Rajkumar

  அன்புள்ள ஜெ,
  கிழக்கு பதிப்பகத்திற்கு வெப்சைட் இருகிறதா? இருந்தால் தெரிவிக்கவும்.
  உங்கள் விஷ்ணுபுரம் பதிப்பு எந்த வெப்சைட்-லிம் கிடைபதில்லை. கிடைத்தால் அதையும் தெரிவிக்கவும்.
  நன்றி.
  ராஜ்குமார்.

 4. ஜெயமோகன்

  http://nhm.in/shop/home.php?cat=1 கிழக்கு இணையதளம்

  விஷ்ணுபுரம் கவிதா வெளியீடு. நீங்கள் விருபா டாட் காம் வழியாக இணையத்தில் வாங்கலாம்

 5. chidambaram

  @ ராஜ்குமார்

  ஜெமோ வின் அனைத்து புத்தகங்களும் உடுமலை.காமில் நீங்கள் வாங்கலாம்

  விஷ்ணுபுரம் இங்கே கிடைக்கும்
  http://www.udumalai.com/?prd=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&page=products&id=1143

 6. Rajkumar

  மிகவும் நன்றி சிதம்பரம் அவர்களே.
  ஜெ கூறிய வெப்சைட் இல் தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை.
  கடைசியாக உடுமலை இல் கிடைத்தது. உங்கள் பெயரை கொண்ட ஈமெயில் முகவரியை பார்த்தேன். அது நீங்களா?

 7. Arangasamy.K.V

  தமிழ் புத்த்கங்கள் கிடைக்கும் இணைய புத்தக கடைகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது,

  உடுமலை.காமில் மட்டுமே அச்சிலுள்ள எல்லா ஜெயமோகன் புத்தகங்களும் கிடைக்கின்றன .

  மற்றவற்றில் சில புத்த்கங்கள் மட்டுமே.

  அயல்நாட்டுவாழ் நண்பர்கள் இணையம் மூலம் வாங்க இந்த தளங்களை உபயோகிக்கலாம்.(உள்நாட்டு வாசகர்களும் கூட)

  http://udumalai.com/?auth_id=26

  http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=ஜெயமோகன்&osCsid=6c6d9bb834666aa915ffc3f11bbc1f0d&x=51&y=4

  http://www.viruba.com/atotalbooks.aspx?id=1276

  http://nhm.in/shop/home.php?cat=1&sort=add_date&sort_direction=0&mid=404

 8. shenkovi

  இரண்டு வருட தேடலுக்குப் பின் ” இந்து ஞானமரபில்…” புத்தகத்தை வாங்கியாகிவிட்டது. சென்னையில் நண்பரிடம் உள்ளது…மாத இறுதியில் படிக்க ஆரம்பிக்க வேண்டும்…
  அன்புடன்,
  செங்கோவி

 9. chidambaram

  @ ராஜ்குமார்
  ஆமாம் அது நான் தான். நீங்கள் ஆர்டர் செய்த விஷ்ணுபுரம் அனுப்பி விட்டோம். புதன் அன்று உங்களுக்கு கிடைக்கும்.

  happy reading

 10. viruba

  வணக்கம்,

  \\ நீங்கள் விருபா டாட் காம் வழியாக இணையத்தில் வாங்கலாம் \\
  என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

  நாங்கள் ( விருபா ) புத்தக விற்பனையில் ஈடுபடுவதில்லை.

  தமிழில் வெளியான/வெளியாகும் புத்தகங்கள் பற்றிய தகவல்களை பதிப்பாளர்களிடமும்/எழுத்தாளர்களிடமும் பெற்று ( ஒரு படி புத்தகம் + கட்டணம் ) எங்கள் இணைய தளத்தில் தகவல்களைப் பதிவு செய்கிறோம்.
  இதனை ஒரு இணைய வழி நூற்றொகை ( on-line bibliography of Tamil books ) என்று மட்டும் குறிப்பிடலாம்.

  இப்படிக்கு,
  து.குமரேசன்

 11. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ !

  தங்களது நூல்கள் சென்னையில் ஒரே இடத்தில் கிடைக்குமா ? என் நண்பர் ஒருவர் இப்போது இந்தியாவில் இருக்கிறார். இம்மாத இறுதியில் (30) அன்று அமெரிக்கா திரும்புகிறார். 29 & 30-ல் சென்னையில் இருப்பேன், ஒரே இடத்தில் வாங்குவதுபோல் கடை பெயர் / முகவரி தாருங்கள் என்று சொல்கிறார்.

  உயிர்மை மற்றும் தமிழினி முகவரி உள்ளன. இரண்டு பதிப்பக நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்குமா ? ஏதேனும் புத்தகக்கடை முகவரி தந்துதவினால் மகிழ்வேன்.

  அன்புடன்
  முத்துக்குமார்.

  சென்னையில் எல்லா தமிழ் நூல்களையும் வாங்குவதற்கான ஒரே கடையாக உள்ளது நியூபுக்லேன்ட்ஸ். இது தி.நகரில் அமெரிக்கன் எம்பசி அருகே உள்ளது.
  ஜெ
  Book Store ,Text Books

  Phone: 044 28158171 , 044 28156006
  Address: 52C North Usman Road, T.Nagar, Chennai- 600017
  Landmark: Near Panagal Park

 12. arvind

  நியூபுக்லேன்ட்ஸ் அமெரிக்கன் எம்பசி அருகிலா?? தேவதேவன் உங்களை விட இன்னும் ’நன்கு’ வழி சொல்லுவார் என்ற செய்தி கொஞ்சம் பீதியைக் கிளப்புகிறது…

  அண்ணன் முத்துகுமார்,
  ஒரு அமைதியான மாலை பொழுதிலே நீங்கள் முகம் கை கால் கழுவி, பௌவா போட்டு, பின்னர் ஒரு துணிக்கடை சணல் பையை மடக்கி எடுத்துக்கொண்டு அமெரிக்கன் எம்பஸியில் இருந்து நியூபுக்லேண்ட்ஸ் வரை கையாட்டிக் கொண்டே நடந்து போகும் காட்சி ஒன்று தோன்றி மறைந்தது. ஜெயமோகனுடன் உங்களுக்கு அப்படி என்ன பெரிய சண்டை?

  அல்லது இது ஏதாவது ’உடல் இளைப்பு’, ’டயட்’, மாற்று மருத்துவம், இயற்கை வைத்தியம் தொடர்பான சங்கதியோ? அப்படி ஏதாவது இருப்பின் எனக்கும் கொஞ்சம் அந்த ரகசியத்தைச் சொல்லவும்..

  எப்படி இருந்தாலும் இச்சிறியோனின் ஆலோசனைக்கு இணங்கி கீழுள்ள சுட்டியைக் கிளிக்கவும் –

  http://maps.google.com/maps?f=d&source=s_d&saddr=Chennai,+Chennai,+Tamil+Nadu,+India+(Pothys)&daddr=New+Book+Lands+chennai&hl=en&geocode=CUPt1eZqpP8xFXf7xgAd_j3IBCHmi8vZyydRYw%3BFej-xgAdKkLIBCHYimyuPmb_vQ&mra=pe&mrcr=0&sll=13.040934,80.232468&sspn=0.012835,0.027595&ie=UTF8&ll=13.041854,80.23268&spn=0.000802,0.001725&t=h&z=19

 13. ஜெயமோகன்

  அமிர்தசரஸ் போகும் ரயிலில் ஒரு குடும்பம் ஆஜானுபாகுவான சர்தார்ஜியிடம் கேட்டது. ”பாயிஜி ரயில் நள்ளிரவில் ஜலந்தருக்கு வரும். நாங்கள் தூங்கிவிடுவோம். எழுப்பிவிடமுடியுமா?”

  ஆனால் அவர்கள் காலையில் அமிர்தசரஸில் கண் விழித்தார்கள்… ”ஏமாற்றிவிட்டீர்களே சர்தார்ஜி’ என்றார் குடும்பத்தலைவர்

  ”அய்யய்யோ…அப்ப நான் இறக்கிவிட்டது யாரை? அழுது சண்டைகூட போட்டார்களே?” என்று தாடியை வருடி சர்தார்ஜி சிந்தனையில் ஆழ்ந்தார்

Comments have been disabled.