இந்திரகோபம்

வணக்கம் ஜெ.

இந்திரகோபமோ ஒரு குருதித்துளி. பிடுங்கி வீசப்பட்ட சிறு இதயம். அவ்வுடலைத் தேடி சென்றுகொண்டிருக்கும் தாபம். எஞ்சிய துடிப்பே உயிரானது. தவிப்பே கால்களானது. வியப்பே சிறுவிழிகளானது.

இந்திரகோபம் இந்த பூச்சிதான் என்பதை அறியாமலே அறிந்து இருக்கிறேன்.பார்த்திருக்கிறேன். தொட்டு இருக்கிறேன். இந்திரகோபம் என்ற சொல் அறிந்தது திருப்புகழில். அந்த சொல் உருவறியா ஒரு பூச்சியாக, பொருளாக இல்லாமல் ஒரு வண்ணமாக மட்டும் இருந்தது. இன்று இந்தப்படம் பார்த்தபோது திருப்புகழின் எல்லை விரிந்துபோகும் அற்புதத்தை இயற்கையின் ஆடலை, கவிஞனின் உள்ளத்தை,சொல்லின் பொக்கிஷத்தை அறிந்து விழி விரிகின்றேன்.

அன்னை வள்ளிநாயகிக்காக மாடலேறவும் விரும்பும் முருகன் அன்னை வள்ளிநாயகியின் ஓவியம் எழுதும் காட்சியில் வரும் இந்த திருப்புகழ்.

இந்தரகோபமும் மரகதவடிவமும்
இந்திரசாமும் இருகுழையொடு பொரும்
இந்தரநீலமும் மடலிடை எழுதிய பெருமாளே-(கொந்துவார்-திருப்புகழ்)

இந்திரகோபம் என்ற சொல் இன்ற நீலத்தில்-28ல் காட்டும் உச்சத்தை துடிப்பை குருதி வழிவை அறிந்தேன். ஒரு சொல் உயிர்பெருவது அதன் பொருளைப்பார்க்கும்போதுதான். இயற்கையை பார்க்காமல் சொல் மட்டும் படித்து கிடப்பது நம்மை நாமே ஏமாற்றி்க்கொள்ளும் கொடுமையோ? இந்திரகோபம் படம் வெளியிட்டதற்கு நன்றி.

நன்றி
அன்புடன்
ராம.மாணிக்கவேல்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைகாஷ்மீரும் ராணுவமும்
அடுத்த கட்டுரைஅறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்