காஷ்மீரும் ராணுவமும்

அன்புள்ள ஜெமோ

நீங்கள் சொன்னது இப்போதே ஆரம்பித்து விட்டது. மிகச்சில நாட்களில் லட்சக்கணக்கானவர்களை இடம்பெயரச்செய்தது இந்திய ராணுவம். மிகப்பெரிய சாதனை இது. அதன் மூலம் உருவாகக்கூடிய நல்லெண்ணம் முஸ்லீம் மக்களிடம் வந்துவிடக்கூடாது என்று ஒரு கிசுகிசு பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டார்கள். இந்திய ரணுவம் பாகுபாடு காட்டுகிறது என்று. அதை இந்திய ராணுவம் மறுத்திருக்கிறது. ஒரு ஆதாரமாவது காட்டமுடியுமா என்று கேட்டிருக்கிறது. செய்யமாட்டார்கள். ஆனால் நாடெங்கும் கொஞ்சநாளில் கிசுகிசுப்பிரச்சராம் பரவச்செய்வார்கள்

http://preview.msn.com/en-in/news/national/jandk-floods-army-refutes-charges-of-discrimination-calls-it-malicious-and-insidious/ar-BB3VwHe

குமார்

BxdmIrFCEAA1FUR

அன்புள்ள குமார்

இந்தப்படத்தை பார்த்தேன். கிலானி இந்திய ராணுவத்தால் மீட்கப்படுகிறார்

‘ஆக்ரமிப்பு’ நாட்டின் உதவியை அவசர காலத்தில் பெறுவது தப்பில்லை என அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்

பிறிதொருவர் இதைச் சொல்லியிருக்கமுடியுமா? கிலானிக்குப் பாதுகாப்பு அவரது மதம். அது இந்தியா முழுக்க உருவாக்கியிருக்கும் பிரச்சார வலை. அதன் கூலிப்படை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29
அடுத்த கட்டுரைஇந்திரகோபம்