கண்மணி குணசேகரன் கடலூர் வட்டாரத்து செம்புலத்து அடித்தள மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் கலைஞன். நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும்.
அஞ்சலை, கோரை என்ற இரு நாவல்களும் பேசபப்ட்டவை. உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி. கண்மணி குணசேகரனின் இரு நூல்கள் தமிழினி வெளியீடாக வந்துள்ளன.
பூரணி பொற்கலை
கண்மணிகுணசேகரன் எழுதிய கதைகள். கடலூர் வட்டார தொன்மங்களையும் தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்களாக ஆக்குகிறார் கண்மணி.
நெடுஞ்சாலை
கண்மணி குணசேகரன் எழுதிய நாவல். கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான கண்மணி தன் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் எழுதிய ஆக்கம் இது.