நந்தகோபன்

DivineFamilyweb

இதுவரை யசோதையை உணர்ந்தது போல் நந்தகோபனை உணர்ந்ததும் இல்லை தந்தையின் உணர்வுகளை அனுபவித்ததும் இல்லை.. தாயுமான உணர்வுகளின் உன்னதத்தை கூறிய அத்தனை எழுத்துக்களும் தந்தையுமான உணர்வுகளை அதிகம் பேசியதும் இல்லை. வாசிக்க வாசிக்க உலகோரின் அத்தனை குழந்தைகள் மீதும் அன்பு மிகுகிறது. கண்ணே மணியே முத்தே எனை அன்னையாய் தந்தையாய் பேரன்பு கொள்ள பெருத்த ஆவல் மீறுகிறது.

ஓஷோ சொல்வது போல் கண்ணனின் பிறப்பு தனித்த ஒரு மனிதனின் பிறப்பல்ல. ஆயிரமாயிரம் மாந்தர்களின் பிறப்பையும் வாழ்வையும் உள்ளடக்கியது அதைக்கொண்டாட இன்னும் இன்னுமென இலக்கியங்களும் எழுத்துக்களும் வந்து கொண்டுதானிருக்குமென்பார். உண்மை உண்மை என நாற்றிசையும், சொல்தோரும் எதிரொலிக்கிறது. இப்பகுதிகள்.

இந்த மொழி மற்றுமொரு நண்பர் கூறியது போல ஒரு உச்சகட்ட உன்மத்த நிலையில் பொங்கி பிரவகிக்கும் மலையருவியென வழிகிறது. உள்வாங்கும் எங்களுக்கே உன்மத்தம் கொள்கிறதென்றால் பிரசவிக்கும் உங்களின் நிலை என்னவாயிருக்கும் என்று வரிதோறும் எண்ணுகிறது மனது.

இன்னும் இன்னும் என இப்பகுதிகளின் உன்னதத்தை எழுதத் துடிக்கிறது மனது .

கிருத்திகா ஸ்ரீதர்

https://plus.google.com/u/0/+KiruthikaSridhar/posts/gfbCU8Hh9J5

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைநாகம்
அடுத்த கட்டுரைகடலூர் சீனு-ஒரு கடிதம்