ஒரு லண்டன் கூட்டம்

இந்திய எதிர்ப்பு அரசியல் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் தொடங்கி இந்து எதிர்ப்பு வழியாக சென்றுசேரும் ஒரு புள்ளி. அது பெரும்பாலும் இங்குள்ள இடைநிலைச்சாதிகள் அவர்களின் வெறுப்பு நிறைந்த சாதிய அரசியலை மறைத்துக்கொள்ள உதவும் போர்வை. பார்ப்பனிய எதிர்ப்பு பேசும் எவரிடமும் ஒரு அடி அருகே சென்றால் நாற்றமடிக்கும் தலித் எதிர்ப்பைக் காணமுடியும். இந்த அரசியல் பல்வேறு நிதியூட்ட முறைகளால் இங்கே பேணி வளர்க்கப்படும் ஒரு தரப்பு. அடிப்படை சிந்தனை, எளிய வரலாற்று அறிவுகூட இவர்களிடம் இருக்காதென்பதை காணலாம்.

சொல்வனத்தில் ரா கிரிதரன் எழுதிய கட்டுரை இன்னொரு ஆவணம். இதில் சிரிப்பு என்னவென்றால் பதினைந்து பக்கம் தொடர்ந்து எதையேனும் வாசித்த அனுபவமோ, பத்துவரி எதைப்பற்றியாவது உருப்படியாக பேசிய வரலாறோ இல்லாத குட்டிரேவதியிடம் போய் ‘பாபா சாகேப் அம்பேத்கார் அவர்கள் தொடங்கிய போராட்டத்தை இன்று தொடர்ந்து செய்பவர்கள் யாரார்?’ போன்ற கேள்விகளை அங்குள்ளோர் கேட்டு வன்கொடுமை செய்ததுதான். அந்த அம்மாள் இதெல்லாம் என்ன கண்டார்கள்?

இனிமேல் வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலை பேருரைகள், கருத்தரங்கத் தலைமை ஏற்புகள் போன்றவற்றில் குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றவர்களிடம் சபையோர் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்திற்குள் மட்டுமே கேள்விகளைக் கேட்கவேண்டும் என்றும், மேலதிகமாக அவள் விகடன்,மங்கையர் மலர் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முன்னரே சொல்லிவிட்டால் என்ன?

முந்தைய கட்டுரைஇருவழிப்பாதை
அடுத்த கட்டுரைவரலாற்றெழுத்தின் வரையறைகள் 3