நகரும் கற்கள்

என் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை அவ்வப்போது வாசிப்பதுண்டு. அறிவியலை அறிமுகம் செய்வதற்குரிய நேரடியான, சுருக்கமான , புறவயமான மொழி. தகவல்களாலேயே சுவாரசியத்தை உருவாக்கக்கூடிய திறன்.

பாலைவனத்தில் கற்கள் நகர்வது பற்றிய இந்தக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தகவல்கள் மட்டும் அல்ல, அந்த நிலப்பரப்பு. இந்த விளக்கமெல்லாம் மானுட மனதில் உதிக்காத பதினான்காம் நூற்றாண்டின் செவ்விந்தியர்கள் அந்த நிகழ்வை எப்படிப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைத்தேன். மனம் பரவசம் அடைந்தது

முந்தைய கட்டுரைஇன்னொரு கொலைசிந்து
அடுத்த கட்டுரைவெண்முரசு – விமர்சனங்களின் தேவை